பேராசிரியர் அ.மார்க்ஸ்.

சென்னை வேளச்சேரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரண்டு வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் என்று போலீசாராலும். போலீசார் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் ஊடகங்களாலும் சொல்லப்பட்டு அறைக்குள் இருந்த ஐந்து இளைஞர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். போலீசாரின் இக்கருத்துக்கள் தொடர்பாக இருவேறு கருத்துக்கள் மக்களிடம் நிலவுகின்றன. பெரும்பலான மக்கள் இவர்களை இப்படித்தான் கொல்ல வேண்டும் என்கிறார்கள். அதே சமையம் கணிசமான மக்களிடம் இது முழுக்க முழுக்க திட்டமிடப்பட்ட படுகொலைதான் இது. என்கிற சந்தேகமும் நிலவுகிறது. சில ஊடகங்கள் இந்த படுகொலை தொடர்பாக பல் வேறு கேள்விகளையும் எழுப்ப போலீசார் பொது மக்களை தூண்டி விட்டு மக்கள் இக்கொலைகளை ஆதரிப்பது போன்று ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள். சென்னை மெரீனா கடற்கரையில் திருவல்லிக்கேணி வணிகர் சங்கம் சார்பில் மெகா சைஸ் பிளெக்ஸ் போர்டில் பொது மக்களின் கையொப்பங்களை வாங்கிக் கொண்டார்கள். சென்னை நகரைக் காக்கும் போலீசைப் பாராட்டுவோம் என்ற அறிவிப்போடு போர்ட் வைக்கப்படுவதற்கு முன்னால் வணிகர் சங்கத் தலைவர் த. வெள்ளையன் சென்னை கமிஷனரைச் சந்தித்து கொள்ளையர்களை வீழ்த்தியதற்காக பாராட்டு தெரிவித்ததாக தினத்தந்தியில் படித்தேன். இவர்களுக்கெல்லாம் ஈழப் பிரச்சனையில் மனிதப் படுகொலை பற்றி பேசும் யோக்கியதை உண்டா? உயிர்க்கொலையை சட்ட விரோதப் படுகொலையை நியாயப்படுத்தும் அளவுக்கு காட்டுமிராண்டித்தனமான போக்கு வளர்ந்து விட்ட நிலையில், இந்த அக்கிரமங்களை தட்டிக் கேட்கவும் இதற்காக குரல் கொடுக்கவும் இன்று யார் உள்ளார்கள்.

பேராசிரியர் அ.மார்க்ஸ் தனியொரு மனிதராக நீண்டகாலமாக மனித உரிமை போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசு பயங்கரவாதம், இந்துத்துவ வெறியர்களின் படுகொலைகள், சாதி வெறிப் படுகொலைகள் என்று வெகு சிலரே இம்மாதிரியான விவாகரங்களில் உண்மை நிலையை வெளிக்கொண்டு வருகிறார்கள். அதில் மிக மிக முக்கியமான மனிதராக பேராசிரியர் அ.மார்க்ஸ் உள்ளார். அவரும் நண்பர்களும் சேர்ந்து சென்னை வேளச்சேரி போலீஸ் கொலை தொடர்பாக விசாரிக்கச் சென்ற இடத்தில் போலீசாரின் ஏற்பாட்டின் பேரில் அங்கு குழுமியிருந்த சில சமூக விரோத சக்திகள் அ.மார்க்ஸையும் உடன் சென்ற நண்பர்களையும் அசிங்கமாக திட்டியிருக்கின்றனர். அவர்களின் மனித உரிமைப் பணிகளைச் செய்ய விடாமல் தடுத்திருக்கின்றனர். தினத்தந்தி நாளிதழ் அதை மனித உரிமையாளர்கள் விரட்டியடிப்பு என்ற செய்தியை படித்த போது பதறி விட்டேன். நிம்மதியற்ற ஒரு மன நிலையில் இதை எழுதுகிறேன். பொது சனம் என்பவர்களை வெறும் பொதுப்புத்தியோடு செயல்படுகிறவர்கள் என்று எளிமையாக இன்றைய காலச்சூழலில் புரிந்து கொள்ள முடியாது. அதற்கு சிறந்த உதாரணமாக டைம்ஸ் ஆப் இந்தியாவின் இன்றைய நாளிதழில் முதல் பக்க செய்தி வந்துள்ளது .

பேராசிர்யர் அ.மார்க்ஸ் மீது அளவற்ற அன்பு கொண்டவன் நான் என் திருமணத்தின் போது சினிமா நடிகர்களையோ பிரபலங்களை அழைப்பதிலோ நான் ஆர்வம் காட்டவில்லை. என்னை நேசித்த எல்லா என் நண்பர்களும் என் உடன் இருந்தனர். பேராசிர்யர் அ.மார்க்ஸ் திருமணத்திற்கு வரவில்லை மறு நாள் வீட்டிற்கு வந்து நீலாவையும் என்னையும் பார்த்தார். பொன்னிலா பிறந்த போது வீட்டிற்கே வந்து பார்த்தார். இதை ஏன் இங்கே சொல்கிறேன் என்றால் நான் நேசிக்கும் மனிதர்களில் ஒருவராக எப்போதும் மார்க்ஸ் இருக்கிறார் என்பதைச் சொல்வதற்காக, வெவ்வேறு விஷயங்களில் அவரோடு ஒத்த கருத்தோடு நின்ற போதும் , ஈழப் பிரச்சனை வந்த போது நான் அவரோடு முரண்பட்டேன். இப்போதும் சொல்கிறேன் என் அன்பிற்குரிய அ.மார்க்ஸ்சின் ஈழம் தொடர்பான கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை. என் கருத்துக்களை நான் மாற்றிக் கொள்ளவில்லை. நான் எந்த தேசியவாதப் போக்கையும் ஆதரித்ததும் இல்லை. அதே சமையம் ஈழம் தொடர்பான கருத்துக்கள் மாறுவதற்காக சூழல் இந்த பிராந்தியத்தில் மாறி விடவும். இல்லை. ஆனால் இந்த முரண்பாடுகள் ஒரு கட்டத்தின் மனகச்சப்புகளாகி மன வேறுபாடுகளை உருவாக்கி விட்டது.

ஆனாலும் அவர் ஈழம் தொடர்பாக மட்டும் வேலை செய்கிறவர் அல்ல,. நானும் பல் வேறு சமூகச் செயற்பாடுகளை என் அளவிற்கு மேற்கொள்கிறேன். கோவை முஸ்லீம் படுகொலைகள், பரமக்குடி படுகொலைகள், தாமிரபரணி படுகொலைகள், என கடந்த இருபது ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்த எல்லா மனித உரிமை மீறல்களை வெளிக் கொண்டு வந்ததில் பேராசியரின் பங்கு அளப்பரியது. சாதியைத் தாண்டாத நமது எழுத்தாளர்களுக்கு மத்தியில் அ.மார்க்ஸ் ஒரு உண்மையான போராளி. அவரது குழுவினரை சுற்றி வளைத்து போலீசார் ஏற்பாட்டில் வந்தவர்கள் தடுத்திருந்தாலும். பொது மக்கள் தடுத்திருந்தாலும் அது கேடு கெட்ட செயலாகும். மனித உரிமைகள் கொல்லப்பட்ட காலச்சூழலுக்குள் வாழும் நிலையில் இது போன்ற அநாகரீமான உயிர்க் கொலையை ஆதரிக்கும் போக்கை ஏற்றுக்கொள்ள இயலாது. பேராசியரின் மனித உரிமைச் செயற்பாடுகளுக்கு நாம் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும். போலீஸ் கொலையை ஆதரிக்கும் மனப் போக்குகள் எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எதிர்க்க வேண்டும்.

இறுதியாக,

ஒரு சில ஊடகங்களும், போலீசும் இணைந்து உருவாக்கும் பொதுப்புத்தி என்பது அவ்வளவு எளிமையானதல்ல என்று துவக்கத்தில் சொல்லியிருந்தேன். சென்னை பள்ளிக்கரணையில் பாலாஜி நகர் என்ற இடத்தில் உள்ள குடிசைப்பகுதியில் வட மாநில இளைஞரைப் போன்ற தோற்றம் கொண்ட ஒரு இளைஞர் நடந்து சென்றிருக்கிறார். அவரை சிலர் பாலோ பண்ணியிருக்கிறார்கள். சிலர் தன்னை பாலோ பண்ணுவதை அறிந்த அந்த அப்பாவி இளைஞர் ஒரு கட்டத்தில் வேகமாக நடக்கத் துவங்கி, ஓடத் துவங்கியிருக்கிறார். துரத்தியவர்கள் அதற்குள் 15 பேர் வரை சேர்ந்து அந்த இளைஞரை பிடித்து கட்டைகளால் தாக்கியிருக்கிறார்கள். அந்தப் பகுதி மக்கள் சுமார் ஆயிரக்கணக்கானோர் இதை வேடிக்கை பார்த்து அடித்தவர்களை உற்சாகப்படுத்தி ஆர்பரிக்க உற்சாகமடைந்தவர்கள் அடித்து நொறுக்கியதில் அந்த இளைஞர் நினைவிழந்திருக்கிறார், அந்தப் பகுதியில் சென்ற போலீசார் இதை வேடிக்கை பார்த்து விட்டுச் சென்று பின்னர் வந்து அந்த இளைஞரை வேனில் வாரிப் போட்டுச் சென்றுள்ளார்கள். தோற்றத்தில் வடமாநிலத்தவராக இருந்ததாலும் கொள்ளையர் போல இருந்ததாலும் அவரை இப்படித்தாக்கியதாக தாக்கியவர்கள் சொல்கிறார்கள். இதைப் படித்த போது அழுது விட்டேன். போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த இளைஞர் ஆந்திராவைச் சார்ந்தவர் என்றும் சரிவர பேசக் கூட தெரியாத ஒரு அப்பாவியை இவர்கள் அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். கடைசியில் அவரது கைரேகையை பதிவு செய்த போலீசார் அடித்தவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அந்த இளைஞரை விடுவித்திருக்கிறார்கள். என்ன ஒரு கொடுமை சுமார் மூன்று லட்சம் ஏழை வடமாநிலத் தொழிலாளர்கள்தான் இன்றைய தமிழக கேடுகளுக்குக் காரணமா? உங்கள் வீரத்தை இங்குள்ள ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சும் மார்வாடி பனியாவிடம் காட்ட முடியுமா? வலுவற்ற ஒரு ஏழையை பிடித்து கும்பலாக சேர்த்து அடித்து உதைக்கின்றீர்களே.. இதைச் செய்யச் சொன்னது யார்?

நாம் வாழும் சமூகம் வெகு வேகமாக பாசிச மயப்படுகிறது. யூதர்களுக்கு எதிரான இனப்படுகொலையைச் செய்த ஹிட்லருக்கு இளம் வயதில் மேன்மை மிக்க தன் இனத்தின் வறுமைக்கு காரணம் யூதர்கள் என்ற போதை ஏற்றப்பட்டிருந்ததாக வாசித்திருந்தேன். 1930 களில் உருவாக கிரேட் டிப்ரஷன் என்னும் பொருளாத நெருக்கடியினால் இலங்கையின் தேயிலைத் தொழில் வீழ்ச்சியடைய வேலையிழந்த சிங்கள தொழிலாளர்களுக்கு தேசியவாத போதை ஊட்டப்பட்டது. சிங்களர்களின் இந்த நிலைக்கு மலையாளிகளே காரணம் என்று கற்பிக்கப்பட்டது விளைவு சுமார் 30,000 மலையாள வீட்டுப்பணியாளர்கள் இலங்கையிலிருந்து சிங்களர்களால் துரத்தப்பட்டார்கள். இலங்கை இனவரலாற்றில் முதல் துரத்தல் இது என்றுதான் நினைக்கிறேன், மலையாளிகள், இஸ்லாமியர்கள், பின்னர் தமிழர்கள் என்றுதான் அந்த இனவாத நெருப்பு வளர்ந்து சென்றது வரலாறு.

தமிழகத்தில் உள்ள மின்வெட்டுக்கு கூடங்குளம் அணு உலை திறக்கப்படாததே காரணம் என்று சொல்லும் ஆளும் வர்க்கம். மக்களின் வேலையிழப்பு, கூலியின்மை, வறுமை, பசி உள்ளிட்ட எல்லா பிரச்சனைகளுக்கும் என் கவுண்டர்களை பரிசளித்து போதையில் ஆழ்த்துகிறது. இந்த போதை பெரும் பிரசாரமாக முன்னெடுக்கப்படும் போது ‘’ நாடு நல்லா இருக்க ஒரு கிராமம் அழிவதில் தவறென்ன” என்று பொது ஜனத்தை சிந்திக்க தூண்டுகிறது. நாம் தொடர்ந்து இடைவிடாது பொதுப் புத்திக்கு எதிராக அதன் மனங்களில் படிந்துள்ள ரத்த வாடைக்கு எதிராக பேசிக் கொண்டேயிருக்க வேண்டும். அந்த வகையில் தான் பேராசிரியர் அ.மார்க்ஸின் பணிகளை நான் பாராட்டுகிறேன். என் அன்பை அந்த மனித உரிமைக் குழுவினருக்குத் தெரிவிக்கின்றேன். நண்பர்களே குரல்கள் மங்கி தேசியவாத வெறி மேலெழுந்து வரும் நிலையில் நாளை நாமும் தாக்கப்படலாம் .

9 comments:

gnani said...

அருள் எழிலனின் சொல்லோடும் உணர்வோடும் நானும் உடன்படுகிறேன். ஞாநி

அருள் எழிலன். said...

நன்றி ஞாநி. கூடங்குளம் போராட்டத்தில் நீண்டகாலமாக உங்களை இணைத்துக் கொண்டிருப்பதர்காக மகிழ்கிறேஎன். ஏனெனின் அன்றைக்கு எதிர்த்த சிலர் சோலை, ஏ,எஸ் பன்னீர் செலவம் போன்ற திமுக பத்திரிகையாளர்கள் இன்று அணு உலையை ஆதரிப்பதாக அறிகிறேன். உங்களைப் போன்றோர் அரசியல் கட்சிகள், ஒரு குறிப்பிட்ட இயக்கம் என்று செயல்படாமல் போனது நல்ல விஷயம்.

Anonymous said...

தப்பு செய்யற எல்லோரையும் கூப்பிட்டு உட்கார வச்சி கொஞ்சுங்க. எல்லாம் சரியாப் போயிடும். வாழ்க மனித உரிமை. இந்த தேசம் நாசமாப் போறதுக்கு அதீத மனித உரிமை பேசுபவர்களும் ஒரு காரணம். -அருண் மதுரை

அருள் எழிலன். said...

மதுரை அருண் தப்பு செய்கிறவர்கள் யார் அவர்களை ஏன் கொஞ்ச வேண்டும். அப்படி யாரையும் கொஞ்ச வில்லையே நான்.

Anonymous said...

ஞாநியும் மார்க்ஸும் ஒன்றுபடும் புள்ளி ஒன்றுண்டு.....

ஈழம் என்று வந்தால்...

kannan said...

86 எண்டு நினைக்கிறான் ... விடிய ஒரு பத்து மணிக்கு ரெண்டு மூண்டு வெடிச்சத்தம் கேட்டது .... 10 நிமிசத்தில ஊரெல்லாம் யாரையோ சுட்டு போட்டாங்கள் எண்ட கதை பரவீட்டுது. சண்முகநாதன் அண்ணன்ர கர்ராஜ்க்கும் , தணிகாசலம் அண்ணன்ர வீட்டுக்கும் நடுவில , புது வீதியில தான் அந்த பிணம் கிடந்தது .. திடகாத்திரமான ஆம்பிள .. முப்பது வயசு இருக்கும் ..தலையில்தான் வெடி ... ரத்தம் பிடரியில இருந்து ஒரு கோடு போல பரவி வீதிக்கு கரையில உறைந்து பொய் இருந்தது .... அண்டைக்குத்தான் தணிகாசலம் அண்ணன்ர கல்யாணம் ... யாரையோ சுட்டு போட்டாங்கள் எண்டு ஊரே திரண்டு வந்து பார்த்தது .. ஆமி யோட தொடர்பு எண்டும் , காட்டி குடுத்தவன் எண்டும் சனங்கள் கதைச்சுதுகள் ... கொக்குவில் பெடியன் எண்டும் , கல்யாணம் கட்டி ஒரு பிள்ளை எண்டும் , ஒரு நேர்சை (nurse ) ரெண்டாம் தாரமா வச்சிருக்கிறான் எண்டும் சொல்லிச்சுதுகள் .... அதுக்கு பிறகு பிணத்தை யார் எடுத்து கொண்டு போனது என்ன நடந்தது எண்டெல்லாம் எனக்கு தெரியாது.. அனால் ... " கல்யாண வீட்டுக்கு முன்னால ஒரு பிணம் விழுந்தா கல்யாணம் முடிக்கிற ஆக்களுக்கு நல்லதெண்டு சொல்லிறவை " எண்டு சனங்கள் பிறகு கதைச்சது மட்டும் நல்ல ஞாபகம் இருக்குது ..

எனக்கு சின்ன பிள்ளையா இருக்கும்போது அவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தாத இந்த விடயம் பின்னாட்களில் முகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது ... இந்த கட்டுரையை வாசித்த போது அந்த 30 வயது திடகாத்திரமான ஆம்பிளைக்கும் சேர்த்து அழவேண்டும் என்று தோன்றுகிறது.

ஹம்துன்அஷ்ரப் said...

நம்மவர்கள் என்றைக்கு சினிமா எனும் மாயையிலிருந்து விடுபடுகிறார்களோ அன்றைக்குதான் சுயபுத்தியில் சிந்திப்பார்கள்.அதுவரை என்கவுன்டர் படுகொலைகளெல்லாம் இவர்கள் புத்தியில் உறைக்காது