கூடங்குளம் அணு உலை தமிழக அரசு குழுகடந்த மூன்று நாட்களாக தமிழகமெங்கிலும் வரலாறு காணாத மின் வெட்டு சுமார் நாளொன்றுக்கு எட்டு மணி நேரம் மின்வெட்டு. சென்னை வாசிகளுக்கு ஒரு மணி நேரமும் சென்னைக்கு வெளியில் உள்ளவர்களுக்கு எட்டு மணி நேரமுமாக தனது மின் பற்றாக்குறையை கசப்பு மருந்தாக மக்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. மாபெரும் மக்கள் ஆதரவுடன் ஆட்சியமைத்த ஜெயலலிதா கசப்பு மருந்து கொடுப்பதில் கை தேர்ந்தவர். அவர் கொடுத்த , கொடுக்கும் மருந்துகள் கருணாநிதி கொடுக்கும் கசப்பு மருந்துகளை விட விசித்திரமானவை.

கருணா, ஜெயா இருவருமே கொடுக்கும் கசப்பு மருந்துகள் பல நேரங்களில் மக்களால் அருந்த முடியாதவையாக இருந்துள்ளன. இதோ இன்னொரு கசப்பு மருந்து அணு உலையை உடனடியாக திறக்க வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவுக்கு ஒப்புதல் வழங்கி அதை தமிழக மக்களின் பொதுப் புத்தியாக கட்டமைக்க அவர் கண்டு பிடித்த கசப்பு மருந்துதான் எட்டு முதல் பன்னிரண்டு மணி நேர மின் வெட்டு. இப்போது கோவை தொழில் அதிபர்களின் கூடாரமான கொடிஷியாவிலும், இன்னும் சில இடங்களிலும் கூடங்குளம் அணு உலையை திறப்பதன் மூலம் மின் தேவையை பூர்த்தி செய்யலாம் என்கிற பேச்சுக்கள் துவங்கி விட்டன. செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த மின்வெட்டு கசப்பு மருந்து பொதுப் புத்தியில் வேலை செய்யத் துவங்கி விட்டது.கூடங்குளம் அணு உலை போராட்டம் துவங்கிய இந்த மூன்று மாதங்களில் அவர் போராடும் மக்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வது போல பட்டும் படாமலும் மக்களின் அச்சம் நீங்கும் வரை அணு உலை வேண்டாம் என்ற தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றினார். பலரும் இத்தீர்மானத்தை நம்பினார்கள். மூன்று மாதங்கள் உருண்டோடி விட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த திமுக பொதுக்குழுவில் கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆரம்பத்தில் எதிர்த்த பல பெரிய கட்சிகள் நாசூக்காக ஒதுங்கிக் கொண்டன. சில தலைவர்கள் வழக்கம் போல சடங்கு அறிக்கைகளை வெளியிட., மத்திய மாநில அரசு அதிகாரிகள் வர்க்கமோ அரசு இயந்திரத்தின் உதவியுடன் தீவீரமாக செயல்பட்டனர்.

மீனவ சங்கங்கள், மீனவ மக்கள், கடலோரப் பகுதி மக்கள் என முழுமையாக மீனவ மக்கள் ஆதரிக்க சம வெளிச்சமூகங்களின் ஆதரவு முழுக்க முழுக்க கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இல்லை. கூடங்குளத்தை அண்டிய நாகர்கோவில் போன்ற பகுதியில் பெரும்பலான நாடார் விவசாயிகள் இப்போராட்டத்தை மிஷனரிகளின் போராட்டம் என்றும் கடப்புறத்தார்களின் போராட்டம் என்றுமே கூறுகிறார்கள். இது நான் நேரில் விசாரித்தரிந்த உண்மை. திராவிட இயக்க அரசியலில் அதிகாரம் பெற்றுள்ள சம வெளிச்சமூகங்களின் வாக்கு வங்கியும், சம வெளிச் சமூகங்களின் பிரதிநிதித்துவத்திற்கு ஓட்டுப் போடும் பிண்டங்களாக மாற்றப்பட்டிருக்கும் எல்லையோர மீனவ, பழங்குடிகள் தொடர்பாக இந்த அரசுக்கோ, அல்லது திராவிட இயக்கங்களுக்கோ சிறிதளவேனும் அக்கறை இல்லை. இந்த உதாசீனமே, வலுவற்ற மக்களாக கடலோரம் எங்கும் துண்டு துண்டாக சிதறிடிக்கப்பட்டுள்ள, தலைமையற்ற, அரசியல் வலுவற்ற அந்த மக்களை உதாசீனப்படுத்தி பெரும்பான்மை சம வெளிச்சமூகத்தை திருப்திப்படுத்த தமிழக அரசு கூடங்குளம் அணு உலையைத் திறக்கும் முடிவை எடுத்திருக்கிறது.

தமிழக அரசுக் குழுவின் நோக்கம்

சிறிய மக்களை, எளிய மக்களை பற்றிய கவலைகளோ அவர்களின் அடையாள அரசியல் தொடர்பான அக்கறையோ தமிழக பொதுப்பரப்பில் இல்லை. அதுவே கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவான தமிழக அரசின் முடிவு. இப்போது மாநில அரசு அமைத்துள்ள குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் நால்வர் ஒருவர் முன்னாள் அணுக் கழக தலைவர் சீனிவாசன் இவர் தொடர்ந்து அணு உலைக்கு ஆதரவாக எழுதி வருகிறவர். இன்னொருவர் அண்ணா பல் கலைக்கழகத்தைச் சார்ந்த அறிவொளி இவர் அணு மின் கழகத்திடமிருந்து நிதி பெற்று வருகிறவர் என்று சொல்லப்படுகிறது. அப்துல் கலாமை வைத்து அண்ணா பல்கலையில் பல கூட்டங்களை நடத்தியவர். அது போல எரிசக்தித்துறை தலைவர் இனியன், முன்னால் ஐ ஏ எஸ் அதிகாரி விஜயராகவன் என அனைவருமே அணு உலைக்கு ஆதரவானவர்கள். ஜெயலலிதா குழுவை அமைத்ததோடு மிகத் தெளிவாக அந்தக் குழுவின் நோக்கங்களையும் தெளிவு படுத்தி விட்டார். இந்தக் குழு யாரோடும் பேச்சு வார்த்தை நடத்தாது. அணு உலையின் பாதுகாப்பு குறித்து ஆராயும். மக்களின் அச்ச உணர்வு குறித்து ஆராயும். அவ்வளவுதான் கூடங்குளம் அணு எதிர்ப்புப் போராட்டத்தையும் அதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவையும் அது கண்டு கொள்ளவே இல்லை.


நாடாளுமன்றத் தேர்தல் வந்தது - ’’என் சொற்படிக் கேட்கும் அரசு அமைந்தால் ஈழம் பெற்றுத் தருவேன் என்றார். சட்டமன்றத் தேர்தல் வந்தது - இனப்படுகொலை குற்றவாளிகளை கூண்டில் ஏற்றுவேன் என்றார்- உள்ளாட்சித் தேர்தல் வந்தது - தூக்குத் தண்டனையை நிறுத்த வேண்டும். அச்சம் நீங்கும் வரை அணு உலை வேண்டாம் என்றார். நண்பர்களே இப்போது வெகு மக்களின் ஆதரவைப் பெற்று வெல்ல ஜெயலலிதாவுக்கு ஒரு தேர்தல் இல்லை. கருணாநிதிக்கும்தான். ஆளும் கட்சி மட்டுமே வெல்லும் இடைத் தேர்தல் மட்டுமே அதில் மீனவ மக்கள் வழக்கம் போல ஓட்டுப் போடும் பிண்டங்கள் மட்டுமே..... அதனால் அடுத்த தேர்தலில் அம்மா எதிர்ப்பார் கூடங்குளம் அணு உலையை.

2 comments:

Anonymous said...

உங்களை எல்லாம் புடிச்சு உள்ள போடணும். நீங்களெல்லாம் எப்பவாது மக்களுக்கு பயனுள்ள வாழ்க்கை வாழுறீங்களா? ஏண்டா நாதாரிங்களா? எது செய்தாலும் அதில் சொத்தை இது நொள்ளைங்கறீங்களே, கரண்ட் என்ன உனக்க அப்பனா தருவான்.

Nag Ravi said...

என்னமோ 2011 மே 13 முன்னடி வரைக்கும் கரன்டே கட் ஆகாத மாதிரி பேசாதீங்க, உண்மை நிலையை நான் நாளைக்கு எழுதுரேன், கூட்ங்குலத்துக்கும் போயஸ் பேய்க்கு ஒரு இழவும் சம்பந்தம் இல்லை, யாரு சொக்காயாவ்து பிடிகனும்னா டெல்லிக்கு அன்ரிஸர்வ்டுலயாவது போய் பிடிங்க, இல்லைனா தமிழ் நாட்டும் எம்பிக்கள் மத்திய அமைச்சர்களை மாமா வேலை பார்க்க்ரதை விட்டு கரன்டை கேக்க சொல்லுங்க.... நல்ல எழுத்து திறனை வேஸ்ட் பன்னாதிங்க நண்பரே