ஷோபாசக்தி - புலி படுத்தது.. நாய் நரியானது !




யாருக்கும் என்னை நிரூபித்துக் காட்ட வேண்டிய அவசியங்கள் எதுவும் எனக்கில்லை. அப்படி ஒரு நிலை ஏற்பட்டிருந்தால் அது தேசம் நெட், ரயாகரன் என்னைப் பற்றி எழுதத் துவங்கிய போதே நான் இதை எழுதியிருப்பேன். தனிநபர் தூற்றல்கள், வசவுகள், இது பற்றி நான் கவலைப்பட்டிருந்தால் ஆதவன் தீட்சண்யாவுக்கு மட்டும் நான் பத்து பதில் கட்டுரைகள் எழுதியிருக்க வேண்டும். சோபா சக்தி எழுதியிருக்கும் சமீபத்திய பதிவுகளும் சரி, ஏற்கனவே எழுதியவர்களும் சரி என் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளில் சில உண்மைகளும் பல பொய்களுமாக கலந்து கட்டி எழுதுகிறார்கள். சோபா சக்தியைப் பொறுத்தவரை சில விஷயங்களில் நான் பேசாததை பேசியதாகச் சொல்கிறார். அவர் நிறுவ நினைக்கும் விம்பத்தைக் கட்டமைக்க நான் எழுதிய கட்டுரைகளில் இருந்து சில வரிகளை வெட்டி ஒட்டி தன் கருத்துக்கு வலுச் சேர்த்து என்னை அரசியல் ரீதியாக வீழ்த்தி விட்டதாக நினைக்கிறார். லண்டனின் நான் பேசிய விஷயத்தில் சோபா நான் இப்படிப் பேசியதாகச் ‘’“வன்னி யுத்தத்தில் விடுதலைப் புலிகளிடம் அகப்பட்டிருந்த மக்களை விடுவிக்கக் கோரியது அநீதி” சொல்கிறார் சோபாசக்தி. எதற்கு வம்பு நான் பேசியதை நண்பர் கோபி அவர் இணையத்திலேயே வெளியிட்டிருக்கிறார் அதை நீங்களே கேளுங்கள் . http://www.gopi.net/iataj/conference/2010/speeches. புலிகளிடம் அகப்பட்டிருந்த மக்கள் என்ற சொல்லில் உள்ள இலங்கை அரசு ஆதரவு தொனியை கவனியுங்கள். அத்தோடு நான் பேசாத ஒன்றை பேசியதாக இட்டுக்கட்டும் பொய்யையும் பாருங்கள்.
............................................

ஷோபா சக்தி என்னைப் பற்றி எழுதிய கட்டுரைகள் போட்ட காமெண்டுகள் சாரம் இது.
யாரோ கொடுத்த காசில் லண்டன் வருகிறாய், தெருப்பொறுக்கியும், தெருப்பெருக்கியும் சம்பாதிக்கும் பணத்தில் இந்தியா வந்து அரசியல் பேசுகிறேன்.

2.
வைட் காலர் ஜாப், கருணாநிதியின் குடும்ப பத்திரிகை
குங்குமத்தில் கூலிக்கு மாரடிப்பு.

3
முத்துக்குமாரின் ஆன்மா இவரை மன்னிக்குமா?

கமெண்ட்-4
புலிகளின் போராட்டமென்பது முப்பதாண்டுகால போராட்டமே. இந்தக் காலக்கட்டத்தில் அவர்கள் செய்த சகோதரப்படுகொலைகள், ஜனநாயக மறுப்பு என்பதோடு கிளிநொச்சி வீழ்ந்தபோதே மக்களை விட்டு நகர்ந்திருக்க வேண்டும் என்கிற பார்வை எல்லாம் எனக்கும் இருக்கிறது. ஆனால் அவர்கள் மக்களை ஏன் விடவில்லை என்றால் அதற்கு ஆயிரம் காரணம் அவர்கள் சொல்கிறார்கள். கேட்கவே வேதனையாக இருக்கிறது. ஒரு வரியில் சொன்னால் அவர்கள் யாரையும் விதிவிலக்காக நடத்தவில்லை. முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் 18 வயது நிரம்பிய அனைவரையுமே பிடித்துச் சென்றதாகவும் ஆனால் அதை விட அதிகமான மக்கள் அங்கிருந்து வெளியேறிச் சென்றதாகவும், சென்ற மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தி புலிகளை நோக்கி இராணுவம் முன்னேறியதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. ஒருவரைப் பிடிக்காது என்பதற்காகவோ பிடித்திருக்கிறது என்பதற்காகவோ கண்டமேனிக்கு வாந்தி எடுக்க நான் விரும்பவில்லை.
மேலேயுள்ளது 31.08.2009ல் 'கீற்று' இணையத்தில் அருள் எழிலன் எழுதியது. "கிளிநொச்சி வீழ்ந்தபோதே அவர்கள் மக்களை விட்டு நகர்ந்திருக்க வேண்டும்" என்கிற அருள் எழிலன் ஒரே வருடத்தில் குத்துக்கரணம் அடித்து 23.10.2010 லண்டன் புலிகளின் ஊடக மாநாட்டில் "வன்னி யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளை தமிழ் மக்களை விடுவிக்கும்படி கேட்டிருக்க முடியாது " என வாந்தியெடுப்பதை எப்படிப் புரிந்துகொள்வது! Maybe லண்டன் ஞானோதயம்?என்பதாக சில கட்டுரைகளையும் கமெண்டுகளையும் எழுதிய்யிருந்தார் ஷோபா.

நண்பர்கள் எக்காரணம் கொண்டும் இதற்கு பதிலளிக்காதீர்கள் என்று கேட்டுக் கொண்ட போதும். சில உண்மைகளை சுட்டிக் காட்ட வேண்டும் என்று எழுதுகிறேன். நண்பர்களே மன்னித்துக் கொள்ளுங்கள்.

1. என்னை லண்டனுக்கு அழைத்தவர்கள் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தினர். ஈழம் தொடர்பான விஷயங்களில் அவர்கள் என்னை நட்பு சக்தியாகக் கருதி அழைத்திருக்கலாம். iataj என்றழைக்கப்படும் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் விடுத்த அழைப்பின் பெயரில் வெளிப்படையாகவே நான் சென்று வந்தேன். சரி லண்டன் வந்து போனதோ, இனி வரப்போவதோ இருக்கட்டும், புலம்பெயர் நாட்டில் மூன்று வேலைகள் பார்த்து நாய்படாத பாடு பட்டு காசு சம்பாதித்தாலும் இந்தியா வந்து போக கடன் வாங்கியே வந்து போகும் நிலைதான் ஈழத் தமிழர்களுக்கு. ஆனால் காப்பிக் கோப்பை கழுவதாக ஊரை ஏமாற்றி அங்கு அரசு கொடுக்கும் நிதியில் வாழும் சோபாசக்தி மட்டும் எப்படி வருடத்திற்கு மூன்று முறை இந்தியா வந்து போக முடிகிறது. பிரான்சில் அவர் எங்கே எந்த நிறுவனத்தில் எப்போது வேலை பார்த்திருக்கிறார் என்ற உண்மையைச் சொல்வாரா?
புலம் பெயர் நாடுகளில் உள்ள ஈழத்தமிழர்கள் இந்தியா வர வீசாவுக்கு விண்ணப்பிக்கும் போது இந்திய தூதரகம் மூன்று வாரகால அவகாசம் கேட்கிறது. அப்ளை பண்ணுகிறவரின் வீசாவை டில்லிக்கு அனுப்பி இந்திய புலனாய்வுத்துறை முடிவு செய்த பிறகே புலத்து மக்களுக்கு இந்தியா வர வீசா கிடைக்கும் போது அதெப்படி உங்களுக்கு மட்டும் இந்தியா கேட்கும் போதெல்லாம் வீசா கொடுத்து விடுகிறது? ஒரு அரங்கக் கூட்டம் நடத்தக் கூட தமிழக ஈழ விடுதலை ஆதரவாளர்களுக்கும் தீவீர இடதுசாரிகளுக்கும் அனுமதி மறுக்கப்படும் போது எப்படி உங்களுக்கு மட்டும் திருவனந்தபுரத்தில் இலங்கை அரசு ஆதரவு மாநாட்டு நடத்த வசதியும் வாய்ப்பும் வருகிறது.

2. வொயிட் காலர் ஜாப்பும், கூலிக்கு மாரடிப்பதும், என்று எழுதியிருக்கிறீர்கள். கூலி கேட்டவனை அடிப்பதை விட கூலிக்கு மாரடிப்பது ஒன்றும் தவறில்லைதானே? ஆனால் நீங்கள் கேட்க வருவது நான் கூலிக்கு மாரடிக்கும் இடத்திற்கும் எனது அரசியல் ஓர்மைகளுக்கும் இடையிலான முரண் தொடர்பானது. எப்படி உங்கள் கொள்கைகளுக்குப் புறம்பான இடத்தில் வேலை செய்கிறீர்கள் என்று கேட்கிறீர்கள்? அ.மார்க்ஸ் மாநிலக் கல்லூரியிலும், ஆதவன் தீட்சண்யா மத்திய அரசு நிறுவனமான பி. எஸ். என். நிறுவனத்திலும், மிக உயர்ந்த ஊதியத்தில் சலுகைகளோடு மிக பாதுகாப்பான அரசு வேலை பார்த்தார்கள். பார்க்கிறார்கள். சோபாசக்தியில் அளவுகோல்படி ஆமாம் என் பார்வையில் அல்ல சோபாசக்தியின் பார்வையின் படி பிஎஸ் என் எல் நிறுவனத்தைக் கட்டுப்படுத்தும் ஆ. ராசா ஒரு திமுக அமைச்சர் கொள்கை ரீதியாக போயஸ்கார்டனில் கும்மியடிக்கும் போது நியாயமாக ஆதவன் பிஸ். என். எல் நிறுவனத்தில் கூலிக்குமாரடிக்கக் கூடாதில்லையா? கொள்கை கோட்பாடுகளை எல்லாம் பி.எஸ்.என். எல்- ம், மாநிலக் கல்லூரியும் ஏற்றுக் கொண்ட பிறகுதான் அங்கு அவர்கள் வேலைக்குச் சேர்ந்தார்கள் என்ற உண்மை நீங்கள் என்னை கூலிக்கு மாரடிக்கிறவன் என்று எழுதிய பின்புதான் எனக்கே தெரிந்தது. என் குடும்பத்தைக் காப்பாற்ற நான் கூலிக்கு மாரடிக்கிறேன். என்னை மாதிரியே வேலை பார்க்கிறார் உங்கள் நண்பர் சுகுணாதிவாகர் ஒரு தூய கடவுள் மறுப்பாளரான அவர் என்ன? வேலை பார்க்கும் நிறுவனத்தோடு போட்டிருப்பது சுயமரியாதை அக்ரிமெண்டா? ஆக நான் கருணாநிதியிடம் கூலிக்கு மாரடித்தாலும் ஒடுக்குமுறைக்கு எதிரான எனது குரல்களை எப்போதும் அமைதியாக்கிக் கொண்டதில்லை. சமகாலத்தில் நான் எதிர்கொள்கிற எல்லா பிரச்சனைகளிலும் நான் என் அறிவுக்குப் பட்ட மாதிரி எதிர்வினையாற்றுகிறேன். //எழிலன் வயிற்றுப் பிழைப்புக்காகவே அங்கேயிருக்கிறார் என்றொரு வாதமும் முகப் புத்தக விவாதத்தில் வந்துபோனது. ஒரு அரசியல் போராளி வயிற்றுப் பிழைப்புக்காகத் தனது நிலைப்பாடுகளையும் மதிப்பீடுகளையும் விழுமியங்களையும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதே எனது உறுதியான நிலைப்பாடு. // ஆக ஷோபா என் வேலையை குறி வைக்கிறார். எல்லா அயோக்கியர்களும் ஒரு மாத ஊதியக்காரன் மீது வீசும் கடைசிக் கல்லை என் மீதும் வீசுகிறார் சோபாசக்தி. சரி செய்யுங்கள் முடிந்தால் தாக்குப்பிடிக்கிறேன் அல்லது இந்த வேலையை விட்டு விலகுகிறேன்.

3. தியாகி முத்துக்குமார் உயிர்த்தியாகம் செய்தார் அருள் எழிலன் கருணாநிதியிடம் ஊதியம் பெறுகிறார், ஆகவே முத்துக்குமாரின் ஆவி என்னை மன்னிக்காது என்பது சோபாவின் அடுத்தக் குற்றச்சாட்டு. புலி ஆதரவாளர்கள், ஈழ விடுதலை ஆதரவாளர்கள் என்று தங்களைத் தாங்களே காட்டிக் கொண்ட சந்தர்ப்பாவாதிகள் முத்துக்குமாரை அன்றே புதைக்க நின்ற போது முத்துக்குமாரை புதைக்க விடாமல் போராடியவர்கள் நாங்கள் நான் மட்டுமல்ல எங்களோடு உங்கள் நண்பர் சுகுணாவும் வேறு வழியில்லாமல் நின்றிருந்தார். //ஒரு கட்டுரையில் விடுதலைச் சிறுத்தைகளின் தலைமை நிர்வாகியும் நண்பருமான வன்னி அரசு கூட முத்துக்குமாரின் உடலை வைத்துக் கொண்டு அருள் எழிலன் தான் மறியல் செய்து கொண்டிருந்தார் அவர் எந்தக் கல்லூரியில் படிக்கிறார்// என்று யாரையோ திட்டுவதாக நினைத்து என்னை வசவிக் கொண்டிருந்தார். ஆக நான் அப்போது என் வேலையைப் பற்றிக் கவலைப்பட வில்லை. உங்களின் ஆத்ம நண்பர்கள் எல்லாம் வெளிப்படையாக இயங்க பயந்து வெவ்வேறு பெயர்களில் மறைந்திருந்து தனி நபர் சண்டைகளில் ஈடுபட்ட போது நான் டி.அருள் எழிலன், அல்லது பொன்னிலா இந்த இரண்டு பெயர்களிலுமே எழுதினேன். முத்துக்குமாரை புதைத்த சந்தர்ப்பவாதிகளை முதன் முதலாக அம்பலப்படுத்தியது நான் தான். அப்போது உங்கள் நண்பர் ஆதவன் உள்ளிட்ட இலங்கை ஆதரவாளர்கள் முத்துக்குமாரை இழிவு செய்தார்கள். ஒரு பக்கம் நீங்கள், இன்னொரு பக்கம் முத்துக்குமாருக்கே துரோகம் செய்த தமிழக சந்தர்ப்பவாதிகள். இவர்களை எல்லாம் எதிர்த்து நாங்கள் சிலரும் நின்றோம். அதில் உங்கள் நண்பரும் உண்டு. இப்போது முத்துக்குமாரின் கடிதத்தின் அடிப்படையில் சிந்தித்துப் பாருங்கள் முத்துக்குமாரின் ஆவி யாரை மன்னிக்கு யாரை மன்னிக்காது என்று? கருணாநிதியிடம் கூலிக்கு மாரடித்தாலும் அருள் எழிலன் தான் எழுதிய கடிதத்திற்கு உண்மையாக இருந்திருக்கிறான் என்று முத்துக்குமாரின் ஆவி என்னை வாழ்த்தும் என்றுதான் நினைகிறேன்.
மக்களை விடுவிக்கக் கோருவது பேரினவாதிகளின் கோரிக்கையே.
.........................................
முதலில் என்னை தனிப்பட்ட ரீதியில் தாக்கிக் கொண்டிருந்த ஷோபா திடீரென என்னை அரசியல் ரீதியாக அம்பலப்படுத்துகிறாராம். அந்த யோக்கியதையை நீங்களும் வாசியுங்கள்.
//பு லிகளின் போராட்டமென்பது முப்பதாண்டுகால போராட்டமே. இந்தக் காலக்கட்டத்தில் அவர்கள் செய்த சகோதரப்படுகொலைகள், ஜனநாயக மறுப்பு என்பதோடு கிளிநொச்சி வீழ்ந்தபோதே மக்களை விட்டு நகர்ந்திருக்க வேண்டும் என்கிற பார்வை எல்லாம் எனக்கும் இருக்கிறது. ஆனால் அவர்கள் மக்களை ஏன் விடவில்லை என்றால் அதற்கு ஆயிரம் காரணம் அவர்கள் சொல்கிறார்கள். கேட்கவே வேதனையாக இருக்கிறது. ஒரு வரியில் சொன்னால் அவர்கள் யாரையும் விதிவிலக்காக நடத்தவில்லை. முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் 18 வயது நிரம்பிய அனைவரையுமே பிடித்துச் சென்றதாகவும் ஆனால் அதை விட அதிகமான மக்கள் அங்கிருந்து வெளியேறிச் சென்றதாகவும், சென்ற மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தி புலிகளை நோக்கி இராணுவம் முன்னேறியதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. ஒருவரைப் பிடிக்காது என்பதற்காகவோ பிடித்திருக்கிறது என்பதற்காகவோ கண்டமேனிக்கு வாந்தி எடுக்க நான் விரும்பவில்லை.
மேலேயுள்ளது 31.08.2009ல் 'கீற்று' இணையத்தில் அருள் எழிலன் எழுதியது. "கிளிநொச்சி வீழ்ந்தபோதே அவர்கள் மக்களை விட்டு நகர்ந்திருக்க வேண்டும்" என்கிற அருள் எழிலன் ஒரே வருடத்தில் குத்துக்கரணம் அடித்து 23.10.2010 லண்டன் புலிகளின் ஊடக மாநாட்டில் "வன்னி யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளை தமிழ் மக்களை விடுவிக்கும்படி கேட்டிருக்க முடியாது "//
முதலில் லண்டனில் நான் என்ன பேசினேன் என்பதைச் சொல்லி விடுகிறேன் // புலிகளிடமிருந்து மக்களை விடுவிக்கும் படி நீங்கள் ஏன் கோரவில்லை என்று சிலர் எம்மைப் பார்த்துக் கேட்கிறார்கள். மக்களை விடுவிக்கக் கோரி நான் ஏன் புலிகளைக் கேட்க வேண்டும். 30 ஆண்டுகளாக வன்னி மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிர்வாக அலகு ஒன்று புலிகளால் அங்கு நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது. அந்தப் பகுதிக்குள் சென்று மக்களைக் கொன்று குவிக்கும் இராணுவமே வெளியேறு என்பது எனது அப்போதைய கோரிக்கையாகவும், வடக்குக் கிழக்கில் இருந்து இராணுவமே வெளியேறு என்று கேட்பது இப்போதைய கோரிக்கையாகவும் இருக்கிறது. இதுதான் நேர்மையான அரசியலே தவிற புலிகளிடமிருந்து மக்களை விடுவிக்கும் படி கேட்க மாட்டேன். வரிக்கு வரி இப்படி இல்லா விட்டாலும் நான் பேசியதன் பொருள் இதுதான்//

எங்குமே நான் மக்களை புலிகள் விடுவிக்க வேண்டும் என்று கோரவும் இல்லை எழுதவும் இல்லை. உண்மையில் புலிகள் மக்களை பிடித்து வைத்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டே பயங்கரவாத இலங்கை அரசின் குற்றச்சாட்டு. புலிகள் மக்களை பிடித்து வைத்திருக்கிறார்கள் என்று சொல்லித்தான் வன்னி மக்கள் மீது கிளஸ்டர், பாஸ்பரஸ், உள்ளிட்ட பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்தி கொத்துக் கொத்தாய் பச்சைப் படுகொலைகளை இந்தியாவின் துணையோடு நடத்தியது இலங்கை. ஆக புலிகள் மக்களை பிடித்து வைத்திருக்கிறார்கள் என்ற கோரிக்கை இலங்கை அரசின் கோரிக்கை மட்டுமல்ல இந்திய அரசின் கோரிக்கையும்தான். இந்த இரண்டு கொலைகார கிரிமினல்களின் கோரிக்கையை நான் ஏன் புலிகளை நோக்கி வீச வேண்டும் என்பதே இன்றுவரை என்னிடம் உள்ள கேள்வி. நான் சொன்ன கருத்தை இன்றுவரை நான் மறுக்கவே இல்லை. நான் பேசியது முழுக்க முழுக்க சரியாது. இலங்கை அரசின் அந்த படுபாதக கோரிக்கையைத்தான் சோபாசக்தி அவர்களே நீங்களும் ரயாகரனும் அப்போதும் இப்போதும் முன்வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.வன்னி மக்களோ கடந்த முப்பதாண்டுகளாக புலிகளின் நிர்வாக ஒரு சிறிய அளவிலான சிவில் நிர்வாக அலகிற்குள் வாழ்ந்தார்கள். அதில் ஏராளமான சாதக, பாதங்களும் உண்டு. ஆனால் எந்த விதத்தில் நோக்கினாலும் அந்த வாழ்வு சிங்கள பேரினவாத இராணுவத்தின் ஆட்சியை விட சிறந்தது என்பது என் கருத்து. அதை இன்று காலம் நிரூபித்திருக்கிறது.

புலிகள் மீதான எனது விமர்சனம்
...........................................................
சரி அப்படி என்றால் கீற்றில் நீங்கள் வேறு மாதிரி எழுதியிருப்பதாக ஷோபா சொல்கிறாரே? என்று கேட்கலாம். மே மாதம் 13- வரை புதுமாத்தளன் மருத்துவமனை வரை எனக்கு நேரடியான தொடர்புகள் இருந்தது. மார்ச் மாத இறுதியில் கூட நண்பர் கேட்டுக் கொண்டதற்கிணங்க தெஹல்காவுக்கு ஒரு ஆங்கிலப் பேட்டியை கடுஞ்சமருக்கு மத்தியில் எடுத்துக் கொடுத்தேன்.( எனக்கு ஆங்கிலம் தெரியாது என்பது தனிக்கதை) இன்று மாற்றிப் பேசுகிற மருத்துவர் சத்தியமூர்த்தி கூட அப்போது புலிகள் மக்களை பிடித்து வைக்கவில்லை என்றார் அப்போது புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தவர் அப்படிப் பேசினார். இப்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு புலிகள் மக்களை பிடித்து வைத்திருந்தார்கள் என்கிறார். இராணுவம் மக்களைக் கொல்லவில்லை என்கிறார். வன்னிக்குள் இருந்தவரை புலிகளே கடவுள் என்றவர்கள் யாழ்பாணம் சென்ற பிறகு மாற்றிப் பேசினார்களே அவர்கள் சொன்ன தகவல்கள்தான் புலிகள் மக்களைப் பிடித்தார்கள் என்று. (இந்தத் தகவல்களை மே மாதம் இறுதியில் முகாம்களில் இருந்தபடியே கைத் தொலைபேசியில் என்னிடம் பரிமாறிக் கொண்டார் அந்த நண்பர்) எனக்கு அவர்கள் மீதும் வருத்தம் இல்லை இலங்கையோடு ஒப்பிடும் போது நெருக்கடி குறைவான தமிழகத்திலேயே ஈழ விடுதலைக்கு உண்மையாக இல்லாத சந்தர்ப்பவாதிகள் தங்களின் சுய லாப ஓட்டு வேட்டைக்கு ஈழத்தைப் பயன்படுத்தும் போது உயிர்வாழ்தலே நெருக்கடிக்குள்ளாகி பேரினவாத இராணுவத்திடம் சிக்கியிருக்கும் மக்களும், பிரமுகர்களும் இலங்கை அரசோடு இணைவதை புரிந்து கொள்ள முடிகிறது. போர் பற்றிய குழப்பம் இப்போது அரசோடு சேர்ந்தியங்கும் முன்னாள் புலிகள் என்று அவர்கள் கொடுத்த தகவல்கள் எனக்குள் ஏற்படுத்திய அயர்ச்சி காரணமாகவே எழுதினேன். இன்னொன்றையும் இங்கே சொல்கிறேன். உங்கள் நண்பர் ஒரு நாள் இரவு தொலைபேசினார். நான் போனை எடுத்தவுடம் ஓ வென கதறியழுதார். என்ன இப்படியழுகிறார் என்று எதுவும் பிரச்சனை இருக்கும் போலிருக்கு என்று கேட்டால் ‘’புலிகள் மக்களை இப்படிக் கொல்லலாமா? என்று கேட்டார். ஒருவர் அழுதபடியே கேட்கிறாரே இவரிடம் போய் என்ன விவாதிப்பது என்று சரி சரி விடு.... அப்படியும் சொல்றாங்க என்று மழுப்பலாக பேசினேன். மூன்று நாட்கள் கழித்து அந்த நபர் ஒரு இணையதளத்தில் இப்படி எழுதியிருந்தார் “புலிகளின் நெருங்கிய ஆதரவாளர்களை நெருக்கிப் பிடித்துக் கேட்டாலே புலிகள் மக்களைக் கொன்றதை ஒத்துக் கொள்கிறார்கள்” என்று எழுதினார் அந்த அழுகை மனிதர். இப்போது ”என்று தகவல்கள் வருகின்றன" என்று உறுதியில்லாமல் நான் எச்சரிக்கையாக எழுதியதை இந்த தந்திரக்கார நரி புலிகள் மக்களை பிடித்து வைத்திருக்கிறார்கள் என்று நான் எழுதியுள்ளதாக சித்தரிக்கின்றது. எனக்குத் தகவலைச் சொன்ன யாழ்பாணத்து மாமனிதர்களோ பேஸ்புக்கில் ஷோபா என்னைச் சித்தரித்து எழுதியதில் லைக் போடுகிறார்கள்.
ஆனால் போர் முடிந்த ஜூன் மாதத்தில் இந்தியாவின் பிறபகுதி ஒன்றில் ஒரு மனிதரைச் சந்தித்தேன் அவர் போரின் தன் இரண்டு குழந்தைகளையும் தவற விட்டவர் என்பதோடு மனைவியையும் நரம்புத் தளர்ச்சி நோய்க்கு பலி கொடுத்து சித்திரவதையான ஒரு வாழ்வை வாழ்ந்தார். (இவரைப் பற்றி இதற்கு மேல் என்னால் இங்கே எழுத முடியாது) அவர் சொன்னார் புலிகள் யாரையும் விதிவிலக்காக கருதவில்லை. பிரபாகரன் தன்னுடைய எல்லா குழந்தைகளையுமே கள முனையில் வைத்திருந்தார். அவர் உண்மையில் தப்பிச் செல்ல நினைக்க வில்லை. தப்பிச் சென்ற மக்களை தடுக்கவும் இல்லை. குடும்பத்தோடு பத்திரமாக யாழ்பாணத்திற்குத் தப்பிச் சென்றவர்களும் உண்டு என்றார். அப்படித் தப்பிச் சென்றவர்களை புலிகள் சுடவில்லை என்றும் சொன்னார். பிறகு ஒரு ஒரு இளம் பெண்ணைக் கேட்ட போது சிறுமிகளைப் கட்டாயப்படுத்தி படையில் சேர்த்தது உண்மைதான் என்றார். அவர் கூட புலிகள் பொதுமக்கள் யாரையும் சுட்டுக் கொல்லவில்லை என்றார். நான் மீண்டும் மீண்டும் கேட்ட போதும் அப்படித்தான் சொன்னார். இது தொடர்பாக சில வாக்குமூலங்கள் என்னிடம் உள்ளன ஆனால் அவைகளை என்னால் வெளியிட இயலாது நண்பர்களே.
போருக்குப் பின்னர் பௌத்த பேரினவாத பாசிச இலங்கை அரசுக்கு எதிராகவும் போரை நடத்திய விஸ்தரிப்பு நோக்கம் கொண்ட இந்தியாவுக்கு எதிராகவும் எவளவோ எழுதியிருக்கிறேன். அதில் எல்லாம் புலிகள் மீதான் இந்த விமர்சன ஊடாட்டத்தையும் நீங்கள் கவனிக்க முடியும். புலிகள் மீது ஒரு மென்மையான விமர்சனமும் இலங்கை அரசு மீது கடுமையான விமர்சனமும் இருக்கும். முன்பு புலிகளை கடவுள் என்றவர்கள் இன்று இலங்கை அரசை நக்கிப் பிழைக்கும் போது நான் எப்போதுமே புலிகளை கடவுள் என்று சொன்னதில்லை. அவர்கள் இருந்த போது நான் இன்னும் கடுமையாக விமர்சித்திருக்க வேண்டும். இருக்கும் போது விமர்சிக்காமல் விட்டு விட்டு இல்லாது போன இப்போது விமர்சிப்பது தொடர்பான குற்ற உணர்வு என்னிடம் இப்போது இருக்கிறது.

2002 -ல் ஜெயலலிதா ஆட்சியில் வைகோ, நெடுமாறன் ஆகியோர் பொடாவில் கைதாகி சிறையில் இருக்கிறார்கள். மோசமான அந்தக் காட்டாட்சியில் (கருணாநிதியின் இன்றைய ஆட்சியை அந்த ஆட்சியைக் கொண்டு சமன் செய்கிறேன் என்று நினைக்க வேண்டாம். ஜெ, கருணா இருவருமே காட்டாட்சி நடத்துவதில் சளத்தவர்கள் அல்ல) புலிகளைப் பற்றி பேசினாலே பாவம் என்ற எண்ணம் ஊடக உலகில் விரவிக் கிடந்த போது நான் சுப. தமிழ்செல்வனை நேர்காணல் செய்து அந்த மாயையை உடைத்தேன். அன்றிலிருந்து இறுதிவரை சுமார் பத்துக்கும் மேற்பட்ட நேர்காணல்களை புலித் தலைவர்களிடம் பெற்று வெளியிட்டிருக்கிறேன். இதற்காக பத்து காசையோ அல்லது வேறெந்த சலுகைகளையோ நான் யாரிடமும் பெற்றுக் கொண்டதில்லை. ஆனால் தமிழார்வலர், தமிழ் தேசியவாதி என்ற முத்திரை வந்து விழுந்ததுதான் மிச்சம். தமிழே ஒழுங்காக எழுதத் தெரியாத படிப்பறிவற்ற ஒருவனுக்கு தமிழார்வலன் என்கிற முத்திரை விழுந்த கதை இதுதான். நான் தமிழ் தேசியவாதி அல்ல தனித் தமிழ்நாட்டை நான் ஆதரிக்க மாட்டேன் என்று ஏற்கனவே பல இடங்களில் பதிவு செய்தும் இந்த என் மீது குத்தப்பட்டுள்ள இந்த ஸ்டிக்கர் அழிய மறுக்கிறது நான் என்ன செய்ய?
நான் செய்த தவறு

சமகாலத்தில் தண்டகாரண்யா மக்கள் மீது இந்தியா ஒரு போரைத் தொடுத்திருக்கிறது. மெல்லக் கொல்லும் இந்திய அரசு கொஞ்சம் கொஞ்சமாக மக்களையும், மாவோயிஸ்டுகளையும் அவர்களிடம் நிலங்களையும் வேட்டையாடி வருகிறது. காஷ்மீர் மக்கள் முழு அளவிலான ஒரு மக்கள் வன்முறையில் இந்தியாவுக்கு எதிராக கல்லெறிந்து கொண்டிருக்கிறார்கள். கல்லெறியும் சிறுவனின் நகங்களை இந்தியாவால் பிடுங்க முடிகிறதே தவிற காஷ்மீரிகள் தேசிய இன விடுதலை உணர்வை இன்று வரை பிடுங்க முடியவில்லை. காஷ்மீர், தண்டகாரண்யா மக்கள் மீதான இந்தியாவின் போருக்கு எதிராக இந்தியா முழுக்க அறிவுவீகள், இடதுசாரிகள், ஊடகவியலாளர்களின் எதிர்ப்பு இருக்கிறது. ஆனால் தமிழகத்தின் எதிப்பைத் தாண்டி ஈழப் போருக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பட்டங்கள் ஈழ விடுதலை ஆதரவாளர்கள், புலி ஆதரவாளர்கள் என்னும் வட்டத்தைத் தாண்டி நடக்கவில்லை என்பது ஒரு உண்மை. புலிகள் ஈழ விடுதலைப் போரை கையெடுத்துக் கொண்டதோடு இலங்கைக்கு எதிராக போராடிய சக்திகளை கண்கொண்டும் கண்டதில்லை என்பதோடு. சிங்ளனுக்கு எதிராக போராடும் ஏகாபோக உரிமை தங்களுக்கு மட்டுமே உண்டு என்று இலங்கைக்கு எதிராக போராடிய சக்திகளை தடுத்தும் வந்திருக்கிறார்கள். பின்னர் பேரினவாத அரசுகள் இணைந்து நடத்திய யுத்தத்தை எதிர்கொள்ள முடியாமல் போன போது அனைத்து சக்திகளும் தங்களுக்காக போராட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது கடைசி வரை முழுமையாக நடக்க வில்லை. புலிகளின் அரசியல் நடைமுறைகள் அவர்கள் நம்பிய சக்திகள், மேற்குலகத் தொடர்புகள் அரசுகளை நம்பியிருந்தமை, இந்தியாவின் நிர்ப்பந்தத்தில் சரணடைந்தமை, அரசியல் அற்ற வெற்று இராணுவக் கண்ணோட்டம் என என்று புலிகள் மீது எனக்கும் விமர்சனம் உண்டு இதை நான் எந்த இடங்களிலும் மறைத்ததில்லை. இதில் நான் ஏதோ எழுதி விட்டு மறுத்தது போலவும் பேசி விட்டு பம்முவது போலவும் ஏன் பாவ்லா காட்டுகிறீர்கள் சோபாசக்தி.
சுமார் ஐம்பதாயிரம் மக்கள் வரை இனக்கொலை செய்யப்பட்டு போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரும் இந்தியாதான் எமக்கு விடுதலை பெற்றுத் தரும் என்று நம்புகிற ஈழ மக்களும் இருக்கிறார்கள். இந்தியா மட்டுமல்ல சீனாவோ, மேற்குலக நாடுகளோ அமெரிக்காவோ எந்த ஒரு நாடும் ஒடுக்கப்படும் தேசிய இனம் என்கிற அக்கறையில் ஈழ மக்களுக்கு ஒரு போதும் உதவப் போவதும் இல்லை. விடுதலை பெற்றுக் கொடுக்கப் போவதும் இல்லை. (இதை லண்டனிலும் சொன்னேன்) இனியும் இவர்களை நீங்கள் நம்பினால் மிச்சம் மீதியிருக்கும் மக்களையும் இவர்கள் அழித்து விடுவார்கள் இதுதான் உண்மை. இதற்கு மேல் உங்கள் பாடு. அடுத்து காஷ்மீரில் கூட அடிப்படைவாதக் குழுக்கள், பாகிஸ்தான், இந்திய ஆதரவுக் குழுக்கள், தனி காஷ்மீர் கேட்டு போராடுகின்றன. இந்த எல்லா பிழையான போலிக் குழுக்களைக் கடந்து இந்தியா, பாகிஸ்தானில் இரும்புக்கரங்களில் இருந்து விடுதலை காஷ்மீர் கோரும் அமைப்புகளும் உண்டு. குழுக்கள் அவர்களின் அரசியல் பிழைகள், கொலைகள், காட்டிக் கொடுத்தல், என எல்லாம் போராளிக் குழுக்களிடம் இருந்தாலும் காஷ்மீர் மக்களுக்கு பிரிந்து போகும் சுய நிர்ணய விடுதலை உரிமை உண்டா இல்லையா? அது போல ஈழத்திலும் புலிகள் உள்ளிட்ட ஏனைய அமைப்புகளும் படுகொலைகளும், அரசியல் நீக்கம் செய்யப்பட்ட ஆயுதப் போராட்டம் இருந்தாலும் ஈழ மக்களுக்கு பிரிந்து போகும் சுய நிர்ணய உரிமை உண்டா இல்லையா?
இலங்கையின் இனி தமிழ் மக்கள் சேர்ந்து வாழ முடியாது என்பது என் கருத்து. ஆனால் இன்று ஈழத் தமிழர்களிடமே இந்தக் கருத்து இருக்கிறதா? ஈழம் என்ற தனிநாட்டுக் கோரிக்கையில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்களா? என்று எனக்குச் சரியாகத் தெரியவில்லை. இந்தக் குழப்பம் பல மாதங்களாக நிலவுகிறது. ஆக ஈழம் தொடர்பாக முடிவெடுக்க வேண்டியது ஈழ மக்களும் அவர்களை வழிநடத்தப் போகிற ஈழ இயக்கங்களும்தானே தவிற நான் தமிழகத்தில் இருந்து எழுதிக் கொண்டிருப்பதில் இனி அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை. ஒடுக்கப்படும் தேசிய இனம் என்கிற அளவில் ஈழ மக்களுக்கு பிரிந்து போகும் உரிமை உண்டு. அதை நான் எப்போதும் ஆதரிப்பேன். ஈழத்துக்காக இயக்கம் கட்டுவதா? வேண்டமா? என்பது நீங்கள் முடிவு செய்ய வேண்டிய விஷயம்.என்னுடைய புலி ஆதரவு நிலைப்பாடுகளில் அரசியல் பிழைகள் இருப்பதையும் ஏதோ ஒரு வகையில் நானும் புலிகளின் அழிவில் ஊடக ரீதியாக விமர்சனப்பார்வையற்று துணை போய் இருக்கிறேன் என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன். மிக வலிமையான முறையில் அவர்களிடம் சில விமர்சனங்களை வைத்திருக்கலாம். அவர்கள் ஏற்றுக் கொள்வார்களோ மாட்டார்களோ வைத்திருக்கலாம். மற்றபடி மக்கள் விடுதலை தொடர்பான விஷயங்களில் நான் பேசிய விஷயங்கள் உள்ளிட்டு நான் பேசியதை சரியென நினைக்கிறேன். புலிகள் தொடர்பாக சோபாசக்தி, ரயாகரன், அ.மார்க்ஸ், ஆதவன், அல்லது இங்குள்ள புலி ஆதரவாளர்கள் விடும் வீரவசனங்கள் இதை எதையும் நான் எப்போதும் பொருட்படுத்தியதில்லை.
இனியொரு
.....................
மற்றபடி உங்களையோ ஆதவன் தீட்சண்யாவையோ, அ,மார்க்ஸை, சுகன் குறித்தோ எழுதியதில் அவதூறுகள் எதுவும் இல்லை.மார்க்ஸ், ஆதவனின் இலங்கைப் பயணங்கள் குறித்து நான் எதுவும் எழுதியதும் இல்லை. மார்க்ஸ், ஆதவன் இருவருமே டக்ளஸை சந்தித்து விட்டு வந்து ஆதவன் வக்கிரமான தன் எழுத்தை எழுதியபோதும் நான் அதற்காக அலட்டிக் கொண்டதில்லை. ஆனால் நான் உட்பட நண்பர்கள் எழுதிய எந்தக் கட்டுரைக்காவது நீங்கள் பதில் சொன்னதுண்டா? இக்கேள்விக்கு நேர்மையாக பதில் சொல்லுங்கள் சோபா சக்தி. நான் உட்பட நண்பர்கள் எழுதிய கட்டுரைகளில் சில தகவல் பிழைகள் இருக்கும் அந்த தகவல் பிழைகளை எடுத்து வைத்துக் கொண்டு ஒட்டு மொத்த கட்டுரையையும் நிராகரித்து இதெல்லாம் அவதூறு என்று திசை திருப்பும் வேலையை கச்சிதமாக கன காலமாக செய்து கொண்டிருக்கிறீர்கள். இப்போது லும்பினியிலும் அப்படியான ஒரு தகவல் பிழையை எடுத்து வைத்துக் கொண்டு உங்கள் மீதான குற்றச்சாட்டை நிராகரிக்கிறீர்கள் தவிறவும் இலங்கை அரசை ஆதரிக்கிற எவரும் நான் ஆதரிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டா ஆதரிக்கிறார். லும்பினி கட்டுரையில் என்னை இனியொரு இணைய தள ஆசிரியர் என்று குறிப்பிடிருக்கிறீர்கள். இது தேசம் நெட், ரயாகரன் இவர்கள்தான் முதல் முதலாக இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியது. அதையே நீங்களும் அருள் எழிலன் இன்யொரு, குங்குமம் இதழ்களில் ஆசிரியர் குழுவில் இருப்பதாக எழுதி ஆள்காட்டி வேலை செய்திருக்கிறீர்கள். குகநாதனிடம் அருள் செழியன் இழந்த பணத்தை மீட்டது தொடர்பாக பிரச்சனை வந்த போது இனியொருவையும் புதிய திசைகளையும் சேர்த்தே அடித்தார்கள். நானே தோழர் நாவலனிடம் நான் இனியொருவில் எழுதுவதால்தான் உங்களுக்கு தர்மசங்கடங்கள் எழுகின்றன. அதனால் ஒதுங்கிக் கொள்கிறேன் என்று கடந்த ஒன்றரை மாதங்களாக நான் இனியொரு பக்கமே செல்வதில்லை. இந்த உண்மை உங்களால் தீபக்கிற்கு முன்னால் பிரான்சில் வைத்து தாக்கப்பட்ட நண்பர் அசோக் யோகனுக்கும் தெரியும். தவிறவும் புதிய திசைகள் தோழர்களின் வேலைத்திட்டங்களின் ஒரு அங்கமாக இனியொரு இருக்கிறது. கருணாநிதியிடம் கூலிக்கு மாரடிக்கும் என்னை மாதிரி தனி நபர்களால் தோழர்களுக்கும் கெட்ட பெயர் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டு ஒதுங்கினேன் இதுதான் உண்மை. இப்போது நான் இனியொருவிலும் இல்லை வேறெந்த இணையதளங்களிலும் இல்லை.
நீங்கள் எழுதும் லும்பினி இணையதளத்தை வசுமித்ர, மீனா இவர்களை ஆசிரியர்களாக் கொண்டு வெளிவருவதாகச் சொல்லப்படும் லும்பினியை இயக்குவது யார்? அசாதி என்ற பெயரில் தொழில் முதலாளிகள் மீதான் விமர்சனம், பிலால்முகம்மது என்னும் பெயரில் கீற்று மீதான் விமர்சனம், அங்குலிமாலா என்ற பெயரில் சீமானை அடித்து நொறுக்குவது என்று வெவ்வேறு பெயரிகளில் எழுதிய அந்த நபரை உங்களைப் போல நானும் ஆள் காட்டவா? ஆக மறைந்திருந்து கூலிக்கு மாரடிக்கிறவன் எல்லாம் யோக்கியவான் அருள் எழிலன் என்ற பெயரிலேயே எழுதும் நான் கூலிக்கு மாரடிக்கிறவனா? இதுதான் உங்கள் தலித், பின் நவீனத்துவ நீதியா?
நீங்கள் ஒரு அரசு ஆதரவாளர்
.........................................................
கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியத் துறையில் இயங்கிக் கொண்டிருக்கும் இலங்கை எழுத்தாளரான நீங்கள் எப்போதாவது இலங்கை அரசை அம்பலப்படுத்தி எழுதியதுண்டா? எப்போதுமே உங்கள் கட்டுரை இலங்கை அரசை விமர்சனம் செய்வது போலத் துவங்கும் கடைசியில் இங்குள்ள ஈழ விடுதலை ஆதரவாளர்களையும், புலிகளையும் டிரவுசரைக் கழட்டி விட்டு அமைதியாகிவிடும். ஒரு கட்டுரையில் ஒரு பகுதியை மட்டும் கணக்குக் காட்டாதீர்கள். எப்போதும் உங்களின் எழுத்து எதிர்ப்பியக்கங்களை பல வீனப்படுத்தவும் இயக்கம் கட்டுகிறவர்களை ஏளனம் செய்யவுமே பயன்பட்டிருக்கிறது. இலங்கை அரசை எதிகொள்ளும் எங்களை மாதிரி ஆட்களை அம்பலப்படுத்துகிறேன் ஆயாசப்படுத்துகிறேன் என்று இலங்கை அரசை மறைமுகமாக அதன் கொலை முகத்தில் இருந்து பாதுகாக்கின்றீர்கள். அதற்கு உறுதுணையாக கட்டுரையில் உள்ள தகவல் பிழைகளைப் பிடித்துத் தொங்குவீர்கள். நான் எங்குமே இலங்கை அரசை ஆதரித்ததும் இல்லை நான் புலிகளின் ஆதரவாளன் இல்லை என்று மாற்றிப் பேசியதும் இல்லை. நான் இப்போதும் இலங்கைக்கு எதிரான விவாகரங்களில் உறுதியாக இருக்கிறேன். நீங்கள் பௌத்தம், தம்மம், என்று இலங்கை அரசுக்கு ஆதரவாக நின்று அறிவு பயங்கரவாதத்தை எமக்கு எதிராக வீசுகிறீர்கள்.
இலங்கை அரசு இன்று உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களோடும் எதிர்ப்பியக்கங்கள் மீதும் ஒரு உளவியல் போரை தொடுத்துக் கொண்டிருக்கிறது. புதிய புதிய ஊடக அமைப்புகள், புரட்சி அமைப்புகள் எல்லாம் உருவாகிக் கொண்டிருக்கின்றன. பெரும்பலான இந்த அமைப்புகள் இலங்கை அரசின் ஆதரவு பெற்ற தன்னார்வக்குழுக்களாக உள்ளனர் சமீபத்தில் சென்னை வந்து மார்க்ஸ் அவர்களைச் சந்தித்துச் சென்ற ராகவன் கூட sldf அமைப்பில்தான் வேலை செய்கிறார். ஆனால் இவர்களுக்கும் அரசுக்குமான் தொடர்பு அது தொடர்பான ஆதரங்களை எடுப்பது எதுவும் சிரமமான காரியங்கள். என்கிற நிலையில் பல்வேறு தகவல்பிழைகளுடனே பல கட்டுரைகளை எழுத முடிகிறது இது ஏதோ எனக்கு மட்டும் என்று நினைத்து வீடாதீர்கள். எல்லோருக்கும் நேரும் தர்மசங்கடம்தான் இது. ஆனால் அந்தத் தகவல் பிழையை எடுத்து ஒரு கட்டுரையையே நிராகரிக்கிற போக்கை என்னவென்று சொல்வது?
கலகத்தின் பெயரால் பேரினவாதத்தை ஆதரிக்கிறவர் நீங்கள்.
.............................................

பெருந்தொகையான சிறுபான்மை தமிழ் மக்களைக் கொன்ற சிங்கள பேரினவாதம் அதன் மத அடையாளமான பௌத்தத்தை இன்று ஈழம் எங்கும் நிரவி வருகிறது. இந்துக் கோவில்களும், மசூதிகளும் இடிக்கப்பட்டு பௌத்த விஹாரைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இந்தியாவில் இந்துப் பாசிஸ்டுகள் சிறுபான்மை முஸ்லீம் மக்களுக்கு எதிராக செய்து வரும் அடையாள அழிப்பை இலங்கையில் பௌத்தம் செய்கிறது. தமிழ் மக்களின் வழிபாட்டு உரிமையை வாழ்வுரிமையை மறுத்து நிற்கிற இலங்கைச் சூழலை பாசிசம் என்று நான் சொல்கிறேன். இல்லை நீங்கள் சொல்வது தவறு அங்கு நிலவுவது பாசிசம் அல்ல என்றால் அதை நிரூபியுங்கள். இதுவரை நீங்கள் நம்பியதாகவும் பேசியதாகவும் சொல்லப்பட்ட அரசியலைப் பேச தடையாக இருந்த புலிகள் இப்போது இல்லை. ஆனால் அதற்கப்பாலும் இலங்கைக்கு எதிரான எதிர்ப்புச் சக்திகள் இப்போது இலங்கைக்கு வெளியே உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.அந்தக் சக்திகளோடு இணைந்து நீங்கள் பயங்கரவாத இலங்கை அரசுக்கு எதிராக போராடுவீர்கள் என்றுதான் போருக்குப் பின்னர் உங்களை எதிர்ப்பார்த்தேன். ஆனால் நீங்களோ இலங்கைக்கு எதிராக வெளியில் உருவாகும் எதிர்ப்புச் சக்திகளை தந்திரமாகத் தாக்கத் துவங்கி விட்டீர்கள்.

இக்கட்டுரையில் சுயவிமர்சனமாக என்னை நான் கேள்விக்குள்ளாக்கிக் கொண்டதும். அதை உணர்வதும் உங்களுக்காகவோ என்னைத் தாக்குகிறவர்களுக்காகவோ அல்ல மாறாக நான் எப்போதும் துணையாக நிற்கும் ஈழ மக்களுக்காக ஆமாம் ஏதோ ஒரு வகையில் மக்களுக்காக போராடுகிறார்கள் என்றே புலிகளை ஆதரித்தேன். எதிர்காலத்தில் அந்த மக்கள் நலனையே பிரதானமாகக் கொண்டு செயல்படுவேன். ஆனால் நீங்கள் உங்களுக்கு அந்த மாதிரி ஏதாவது அரசியல் நோங்கங்கள் உள்ளனவா? அ.மார்க்ஸ் எதைச் சார்ந்து இயங்குவாரோ அதற்கு தூபம் போடுகிற சீடப்பிள்ளைகள் நீங்கள் ஆனால் நான் யாருக்கும் எப்போதும் சீடனாக இருந்ததில்லை. தொண்ணூறுகளில் இடதுசாரிகளுக்கு ஏற்பட்ட பின்னடவை ஒட்டி மார்க்ஸ்சிஸ்டுகள் மீது தலித் அரசியலை ஆயுதமாக்கி உங்கள் ஆசான் அடிக்காத அடியா? அதைத்தானே நீங்கள் ஈழத்தில் செய்தீர்கள். இப்போது காலாவதியாகிப் போன பின்நவீனத்துவத்தை விட்டு விட்டு காந்தியிசம், நபிகள் நாயகம் என்று மாறி மாறி இப்போது அவர் சி,பி.எம் கட்சியில் செட்டிலாகியிருக்கிறார். நீங்களோ உங்களை டிராஸ்கியிஸ்ட் என்று உளறிக் கொண்டிருக்கிறீர்கள். தண்டகாரண்யாவிலும், ஈழத்திலும் இந்தியா நடத்திய போரை ஆதரிக்கிற அல்லது மௌனமாக இருக்கிற ஒரு கட்சியை எப்படி பின் நவீனத்துவாதிகள் ஆதரிக்க முடியும் என்ற கேள்வியையாவது உங்கள் ஆசானிடம் கேளுங்கள்.
அதே சீனப் பழமொழியை உங்களுக்கு இப்படிச் சொல்கிறேன்.

" தயவு சென்ற வழியே அப்படியே சென்று விடுங்கள் ஒரு போதும் நீங்கள் திரும்பி வர வேண்டாம் நீங்கள் ஈழ மக்களுக்கு மட்டுமல்ல எல்லா ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் எதிரி.........எதிரிகள்".

27 comments:

Anonymous said...

அய்யா அருள் எழிலன் அவர்களே இவர்கள் எப்போதுமே மக்கள் எதிர்கள். இதை நீர் எமக்கு அம்பலப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. எல்லோருக்கும் புலிகள் மீது விமர்சனம் இருக்கு. ஆனால் அதை எந்த இடத்தில் நின்று கொண்டு வெளிப்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம். அந்த வகையில் உண்மையாகத்தான் நீங்கள் உள்ளீர்கள். இவர்கள் லும்பன்கள். சீரழிவு சக்திகள் . எதுக்கு இத்தனை பெரிய விளக்கம்.

Anonymous said...

ஆதவன் தீட்சண்யாவின் தலித் அரசியலை இவர்கள் துவக்கத்திலேயே அடையாளம் காண முடியவில்லை. மார்க்ஸ் சி.பி,எம்- ல் செட்டிலாகிற வரை சோப்பு டப்பாவுக்கு ஆதவனைத் தெரியவில்லை. அப்புறம்தான் லண்டனுக்கு அழைத்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி அனுப்பி வைத்தார்கள்.

Anonymous said...

புலிகள் போனபோதே நீங்களெல்லாம் கூடப்போய் தொலைந்திருக்கலாம்

கே.என்.சிவராமன் said...

வார்த்தைகளை அள்ளிவிடாமல், போகிற போக்கில் அவதூறுகளை தெளிக்காமல், நிதானமாக இடுகையை எழுதியிருக்கிறீர்கள்.

இதில் நீங்கள் எழுப்பியிருக்கும் வினாக்களுக்கு உரிய பதில்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை...

அவதூறுகளையே இலக்கியமாக எழுதுபவர்கள் என்று பதில் சொல்லியிருக்கிறார்கள்?

தொடர்ந்து எழுதுங்கள்... உங்களை அறிந்தவர்களுக்கு நீங்கள் யாரென்று தெரியும். அறியாதவர்கள், இந்த இடுகையின் வழியே உங்களை அறிந்துக் கொள்வார்கள்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

Anonymous said...

/ புலிகளிடம் மக்களை விடுவிக்கக் கோருவதை அநீதியாக கோரிக்கையாகவே நான் பார்க்கிறேன்.// இது உங்களது FBல் நீங்களே எழுதியதுதானே. இதுதானே உங்களது கருத்து. பின்னே நீங்கள் பேசாத ஒன்றை நான் பேசியதாக நீங்கள் சொல்வதில் என்ன தர்க்கமிருக்கிறது.

புலிகளின் ஆதரவாளர்களுக்கு நான் பதில் சொல்வதில்லையா? அடப் போங்கப்பா தோழர் தியாகுவுடன் விவாதித்து 100 பக்கங்களில் புத்தகமே வந்துள்ளது. யமுனா ராசேந்திரன், முதற்கொண்டு சபேசன், சாத்திரிவரை எத்தனை விவாதங்கள் - எத்தனை மறுப்புகள்...'அவதூறு மட்டுமே சொல்பவர்களுக்கு ஷோபா பதில் சொல்வதில்லை' என உங்கள் கருத்தைத் திருத்திக்கொள்ளுங்கள்.

அப்புறம் டக்ளஸின் ஆதாரவானன் நான் என மறுபடியும் உங்கள் அவதூறை ஆரம்பித்துவிட்டீர்கள். இது குறித்து ம.க.இ.க. மருதையனுக்கு போட்ட மனுவே இன்னும் பெண்டிங்கில் இருக்கிறது. இப்ப நீங்க வேறயா! நான் கூட அருள் எழிலன் இந்திய உளவுத்துறையின் உளவாளி என ஒரு பொய்யை எழுத முடியும். என்னிடமும் தானே கீபோர்ட் இருக்கிறது. எனக்குக் கேலிச் சித்திரம் வரையவும் வரும். ஆனா; அது உண்மையாகிவிடாது.

அப்புறம் வேலை விசா என்று ரொம்பத்தான் ஆடுறீங்க. கடந்த மாதம்வரை ஒரு கல்லூரியில் அடிமட்டப் பணியாளாராக வேலை செய்தேன். எனக்குக் கங்காணியாய் இருந்தவர் 'ஈரோஸ்' அழகிரி. சம்பளப் பட்டியலை உங்களுக்கு இப்போதே அனுப்பிவைக்கவா? அல்லது இந்தியா வரும்போது கையோடு கொண்டு வரவா? நல்லாக் கேங்கறாங்கய்யா டீடெயிலு!

வேலையற்றவர்களுக்கு வழங்கப்படும் காப்புறுதிக் கொடுப்பனவை பெற்றால் தவறா? அது நமக்குச் சும்மா வழங்கப்படுவதில்லை. நமது ஊதியத்தில் பிடித்துவைக்கப்பட்ட தொகையையே வேலையில்லாத நாட்களில் பெற்றுக்கொள்கிறோம். பிரஞ்சுத் தொழிலாளர் வர்க்கம் ரொம்பப் போராடிப் பெற்ற உரிமையுங்க இது. இதில கை வையாதீங்க!!

அப்புறம் விசாப் பிரச்சினை...மூன்று வாரமல்ல மூன்று மாதமே தூதுவரக வாசலில் காத்துக்கிடந்த அனுபவம் எனக்கு உண்டு. ஏங்க வருடம் ஓர்முறை இந்தியாவுக்கு புத்தக சந்தைக்காகவும் எனது பெற்றோர்களைப் பார்க்கவும் நான் வருவது உங்களுக்குப் பிடிக்கலையா?

இலங்கை அரசை எதிர்த்து நான் பேசினதேயில்லையா? ரொம்பத் தவறு தோழர். சும்மா கேட்கிறேன்.. 'ம்' நாவல் குறித்து உங்கள் மதிப்பீடு என்ன? அது அரச ஆதரவு நாவலா? வேண்டுமானால் நான் புலியை ஆதரித்து எழுதியது இல்லை எனத் திட்டுங்கள். மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

ஒரு தகவலுக்காகக் கேட்கிறேன் அருள் எழிலன் உங்களது Face Book - Infoல் உங்களுக்குப் பிடித்த புத்தகம் Mmm என நீங்கள் எனக் குறிப்பிட்டிருப்பது 'ம்' நாவலையா

நீங்கள் மறுபடியும் மறுபடியும் உளவாளி கைக்கூலி என்று அவதூறு சொல்வதிலேயே கருத்தாக இருக்கிறீர்கள். பதில் சொல்லியே என் காலம் கழியட்டும்..பரவாயில்லை.

வேறு கேள்விகள் ஏதாவது உண்டா அருள் எழிலன்?

-ஷோபாசக்தி

Anonymous said...

//இதில் நீங்கள் எழுப்பியிருக்கும் வினாக்களுக்கு உரிய பதில்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை...//

நான் அளித்திருக்கும் பதில்கள் போதாது என நீங்கள் நினைக்கும் பட்சத்தில் கேள்விகளைத் தொகுத்துத் தாருங்கள் பைத்தியகாரன். நான் உடனடியாகவே பதில் அளிப்பேன். இதுவொரு இருபத்துநான்கு மணிநேர சேவை.

தங்கள் பணியில்
ஷோபா

Anonymous said...

ஷோபா உங்களுக்கான பதில் இதோ, உங்களையும் உங்கள் குழுவினரையும் வளர்மதி மிகச் சரியாக கணித்து எழுதியிருக்கிறார். ஒவ்வொரு முறை ஈழ ஆதரவாளார்கள் கேட்ட எந்தக் கேள்விகளுக்கும் நீங்களும் சரி உங்கள் ஆதரவாளர்களும் சரி பதில் சொன்னதில்லை. ஆனால் பதில் சொன்னது போன்ற சலிப்பை இங்கே கொட்டுகிறீர்கள். தோழர் தமிழச்சியை உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன். நண்பரே எல்லா காலத்திலும் எல்லோரும் கேணக்..... இருந்து விடுவதில்லை. உங்களுக்கான என் பதில் இதோ,,,,
நான் லண்டனில் பேசியதைத்தான் f,b, யிலும் எழுதினேன். இந்தக் கட்டுரையிலும் எழுதினேன். இன்னொரு முறை வேண்டுமென்றாலும் சொல்கிறேன். மக்களை விடுவிக்க புலிகளை நோக்கி கோரிக்கை வைப்பது பேரினவாத இலங்கை அரசின் கோரிக்கையே.... புரிந்ததா? இதுதான் நான் சொன்னது ஆனால் நீங்கள்........ நான் புலிகள் மக்களை பிடித்து வைத்திருப்பதாக எழுதுவதாகச் சொல்கிறீர்கள்.......இது பற்றி விரிவாக கட்டுரையில் உள்ளதே???????
# இந்தக் கட்டுரை தொடர்பாக எழுதும் போதே எனக்குத் தெரியும் தியாகு நூலையும் ஒரு கணக்கில் கொண்டு வருவீர்கள்.

# நீங்கள் டக்ளஸ் தேவானந்தாவின் ஆதரவாளன் என்பதோடு இலங்கை அரசின் ஆதரவாளன் என்று சொல்கிறேன். இது அவதூறு அல்ல. நீங்கள் sldf அமைப்பில் உறுப்பினராகவோ, தொடர்புடையவராகவோ இருக்கின்றீர்களா? அந்த அமைப்பை இலங்கையில் இருந்து நடத்துகிற ராகவன், ரங்கன் ஆகியோர் இப்போது இலங்கை செல்வதற்கு முன்னால் சென்னைக்கு வந்து அ.மார்க்ஸ் அவர்களைச் சந்தித்துச் சென்றார்களா? sldf அமைப்பிற்கும் ஈ.பி.டி.பி அமைப்பிற்கும் தொடர்புண்டா? யாழ்பாணத்தில் சிங்களக் குடியேற்றக்காரர்களுக்கு ஆதரவாக sldf செயல்படுகிறது என்று சொல்லப்படுகிறது அது உண்மையா? நேற்று உங்கள் இணையதளத்தில் ராகவன் தொடர்பாக ஒரு கட்டுரை போட்டு விட்டி அதை ஏன் உடனடியாக நீக்கினீர்கள். அல்லது நான் பொய் சொல்கிறேனா?
#உங்களை உளவாளி என்று நான் எந்த இடத்திலும் சொல்ல வில்லை உங்களை ஒரு இலங்கை அரசின் ஆதரவாளர் என்று மட்டுமே சொல்கிறேன்.

# வேலையில்லாதவர்களுக்கு அரசு வழங்கும் உதவித் தொகையைப் பெறுவது தவறு என்று நான் எங்குமே சொல்லவில்லை. அதை பெற்றுக் கொள்கிற நீங்கள் எங்குமே வேலைக்குச் சென்றதில்லை என்கிறேன். இங்குள்ள ஈழ ஆதரவாளர்கள் புலம்பெயர் நாடுகளுக்கு ( எனக்கும் அந்த அனுபவம் இருக்கிறது) சென்று வர கடும் பிரச்சனைகளைச் சந்திக்கும் போது நீங்கள் மட்டும் எப்படி நினைக்கும் பொழுது இந்தியா வர முடிகிறது என்று கேட்டேனே தவிற எங்குமே நீங்கள் இந்தியா வரக்கூடாது என்று சொல்லவில்லையே?

டி.அருள் எழிலன்.

Anonymous said...

//இலங்கை அரசின் ஆதரவாளன் என்று சொல்கிறேன்//அருள் எழிலன்.

நான் இலஙகை அரசின் 'உளவாளி' என்பதிலிருந்து இலங்கை அரசின் 'ஆதரவாளன்' மட்டுமே என்ற டீ பிரமோஷன் கிடைத்தது ஒரு வகையில் மகிழ்ச்சியே. இனி அருள்எழிலனோடு விவாத்தைத் தொடர்வதற்கு ஒரேயொரு வழி மட்டுமே உண்டு. எனது 15 வருடகால எழுத்துகளிலிருந்து இலங்கை அரசுக்கு ஆதரவான ஒரு பத்திகூட வேண்டாம், ஒரேயொரு சொல்லை அருள்எழிலனோ அல்லது இலங்கை அரசின் ஆதரவாளன் என என்னைக் குற்றம் சுமத்துபவர்களோ எடுத்து வைக்கட்டும். இப்படியே அரசியலை விட்டே ஓடிப் போய்விடுகிறேன்.

- ஷோபாசக்தி

Anonymous said...

//ஷோபாவின் இணையதளத்தில் இலங்கை அரசுக்கு எதிராக எதுவுமே எழுதியதில்லை. //

அப்டீங்களா அருள் எழிலன். நான் 'அப்படி எழுதினேன்' 'இப்படி எழுதினேன்' என நானே சொல்வது சற்றுக் கூச்சத்தைக் கொடுத்தாலும் நீங்கள் கேட்பதால் பதிலளிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இது சும்மா ஒரு சாம்பிள்தான். படித்துப்பாருங்கள். இந்தக் கட்டுரையில் கண்டிக்கப்படுவது இலங்கை அரசா அல்லது கஸகஸ்தான் அரசா என இனி நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

http://www.shobasakthi.com/shobasakthi/?p=503

- -ஷோபாசக்தி

Anonymous said...

ஷோபாவுக்காக -அவசியமான திருத்தங்கள்
http://ethir.org/?p=819

Anonymous said...

சேனனுக்காக - சொல்லிச் சொல்லி அலுத்துப் போன விளக்கங்கள்:

சேனன்!

அருள் எழிலன் லண்டன் மாநாட்டில் அவ்வாறு பேசவில்லை என எழுதியிருக்கிறீர்கள். (எனது கட்டுரை FB விவாதங்களைத் தொகுத்து எழுதியது என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு தொடர்ந்து படியுங்கள்). நான் தேசம் நெட் செய்தியை ஆதாரமாக வைத்தே அருள் எழிலன் அவ்வாறு பேசினார் என எழுதியிருந்தேன். FBல் அருள் எழிலன் தான் அவ்வாறு பேசியதில் தவறில்லை என வாதிட்டார். தேசம் நெட்டின் செய்தி தவறானது என அவர் அப்போது சொல்லவில்லை. மாறாக "புலிகளிடம் மக்களை விடுவிக்கக் கோருவதை அநீதியான கோரிக்கையாகவே நான் பார்க்கிறேன்" என அவர் உறுதிபட FBல் எழுதினார். இதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டிக்கிடக்கிறது. FBல் எழுதும் கருத்துகள் ஆதாரமாகாதா? மாநாட்டில் அவர் அவ்வாறு பேசவில்லை எனில் அதைச் சொல்லியல்லவா அவர் விவாதத்தை ஆரம்பித்திருக்க வேண்டும். நானும் 'அவதூறு செய்யும் தேசம்' என இன்னொரு கட்டுரை எழுதியிருப்பேனல்லவா.

நான்கு நாட்களாக FBல் விவாதம் செய்த எழிலன் இன்று திடீரென நான் அப்படிச் சொல்லவேயில்லை என்பதை எவ்வாறு புரிந்தகொள்வீர்கள்? நீங்கள் இணைத்திருக்கும் ஒலிநாடா வெளியிட்டவர்களாலேயே 'எடிட்' செய்யப்பட்டிருக்க வாய்ப்பில்லையா சேனன்? புலி ஊடகங்களின் யோக்கியதை நீங்கள் அறிந்ததுதானே.

அருள் எழிலன் 'இனியொரு' ஆசிரியர் குழுவில் இருந்தார். ஒரு மாதத்திற்கு முன்புவரை 'இனியொரு'வில் ஆசிரியர்கள் என்ற பகுதியில் நாவலன், அசோக் ஆகியோருடன் எழிலனின் பெயரும் இருந்தது. இப்போது யாருடைய பெயரும் இல்லை. ஆவிகளால் நடத்தப்படும் இணையமாகிவிட்டது அது. இப்போது எழிலன் தான் இனியொருவிலிருந்து ஒதுங்கிவிட்டதாகச் சொல்கிறார். நல்லது! வாழ்த்துகள்!! ஆனால் நான் குறிப்பிட்ட அ.மா, ஆதவன் குறித்த அவதூறுகள் வெளியான காலப்பகுதியில் (மார்ச் 2010) எழிலன் இனியொருவின் ஆசிரியர்களில் ஒருவரே.

அந்த நான்கு கோரிக்கைகளும் போராளிகளின் சார்பில் முன்வைக்கப்படவையே என்பதை சி. புஸ்பராஜாவும் உறுதி செய்கிறார் (ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் 'பக்: 400). அந்தக் கோரிக்கைகளை வரதராஜப்பெருமாளே எழுதினார் என்பதை அவரின் பிரான்ஸ். EPRLF மாநாட்டு உரையிலிருந்து நான் பெற்றுக்கொண்டேன். சார்ள்ஸ் வேறுவிதமாச் சொல்கிறார் என்கிறீர்கள். அவர் எங்காவது அவ்வாறு இதுவரை எழுதியதில்லையே. உங்களிடம் தொலைபேசியில் அவர் சொன்னது உங்களுக்கு ஆதாரம். வரதராஜப்பெருமாள் பகிரங்கமாக மாநாட்டிலும் TBC வானொலியிலும் பேசியது எனக்கான ஆதாரம். எந்த ஆதாரம் பொருட்படுத்தக் கூடியது என்பது உங்களது முடிவு. வரதராஜப் பெருமாளுக்கு வக்காலத்து வாங்குவதல்ல என்னுடைய நோக்கம். அவரின் அரசியல் வரலாறைக் குறிப்பிட்டு அவர் ஒன்றும் உருவாக்கப்பட்ட பொம்மையல்ல எனச் சொல்வதே எனது நோக்கம்.

INSDக்கும் எனக்கும் இரு தடவைகள் பார்வையாளனாக அவர்களது கருத்தரங்கில் கலந்துகொண்டேன் என்பதைத் தவிர வேறு எந்த உறவுமில்லை. (சென்ற மாதம் பாரிஸில் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகம் நடத்திய குறும்பட விழாவுக்குக் கூடப் பார்வையாளனாகப் போயிருந்தேன்) SLDFவோடு அதுகூட இல்லை. அவர்களது கருத்தரங்குகளுக்கு பார்வையாளனாகக் கூட இதுவரை சென்றதில்லை. INSDயின் NGO உறவுகளும் அவர்களது அரசியலும் விமர்சனத்துக்குரியவையே. ஆனால் அவர்கள் ஒருபோதும் ராஜபக்ச அரசின் ஆதரவாளர்கள் அல்லவென்பதை அவர்களின் கருத்தரங்குளை வைத்து என்னால் சொல்ல முடியும். அது உங்களுக்கு ஏற்பில்லை எனில் நீங்கள் அவர்கள் ராஜபக்சவின் ஆதரவாளர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். எனது கட்டுரையில் நான் குறிப்பிட்ட பிரச்சினை INSD இலங்கை அரசிடம் நிதி பெறுகிறது என்று எழிலன் சொல்லிய கருத்து தவறு என்பதுதானே ஒழிய INSDயை நியாயப்படுத்துவது எனது நோக்கமில்லை.

'சனல் 4' வீடியோ INSD உறுப்பினர்களால் அனுப்பப்பட்டதுக்கு ஆதாரம் கேட்கிறீர்கள். இலங்கை நாடாளுமன்றிலேயே INSD மீது குற்றம் சாட்டப்பட்டது. INSD தலைமைச் செயற்பாட்டாளர் ரஞ்சித்தின் முகவரியிலிருந்தே அது அனுப்பப்பட்டது. அதை அனுப்பிய சிங்களத் தோழர் அப்போது ரஞ்சித்துடனேயே தங்கியிருந்தார். அப்போது அந்தத் தோழர் INSDயின் உறுப்பினரே. இப்போது அவர் அதன் உறுப்பினரா என எனக்குத் தெரியாது.

சேனன் உங்களிடம் ஒரு கேள்வி. கிளிநொச்சியிலிருந்து மக்கள் இயல்பாகவே புலிகளுடன் முள்ளிவாய்க்கால் நோக்கி நகர்ந்தார்கள் எனவும், முள்ளிவாய்க்காலில் புலிகள் தப்பியோடிய மக்களைச் சுடவில்லை எனவும்அருள் எழிலன் சொல்பவை குறித்து உங்களது கருத்தென்ன? நேரமிருக்கும் போது பதில் எழுதுங்கள்.

ஏனெனில் இதுதான் எனது கட்டுரையின் மையப்பொருள்.

நான் டக்ளஸ் தேவானந்தாவினதும் அரசினதும் ஆதரவாளன் என்பது குறித்தும் உங்களது கருத்துகளைத் தெரிந்துகொள்ள விரும்பம். ஏனெனில் இதுதான் அருள் எழிலனின் விவாத்தின் மையப்பொருள்.

-Shobasakthi

Anonymous said...

ஷோபாசக்தி உங்களை ஒரு இலங்கை அரசின் ஆதரவாளர் என்கிறேன்., இதில் நான் நான் எந்த அவதூறுகளையும் செய்ய வில்லை. என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை. உங்களின் எழுத்துக்களும் நடவடிக்கைகளுமே அப்படியான் எண்ணத்தை உருவாக்குகின்றன. sldf பற்றியும் நீங்கள் உங்கள் இணையத்தில் போட்டு விட்டு எடுத்த கட்டுரையும் பற்றியும் பதிலும் சொல்லவே இல்லை. மற்றப் படி ஒரு சமூகப் போராளியின் எழுத்து என்பது தார்மீர்க ரீதியாக ஒடுக்குமுறைக்குள்ளாகும் சக்திகளை பிரதானபடுத்த வேண்டுமே தவிற ஒடுக்குமுறைக்குள்ளாகும் சக்திகளை பலவீனப்படுத்துவதாக இருக்கக் கூடாது? உங்களின் எழுத்துக்கள் ஈழ மக்களின் எதிர்ப்பரசியலை பலவீனமாகியது. புலிகளை விமர்சிப்பது மட்டுமல்ல புலிகள் விமர்சிக்கும் போது நான் உங்களின் நண்பனாக இருந்தேன். இப்போது புலிகள் இல்லை இப்போதும் நீங்கள் எந்தப் பக்கம் எனப்துதான் என் கேள்வியே?

//SLDFவோடு அதுகூட இல்லை. அவர்களது கருத்தரங்குகளுக்கு பார்வையாளனாகக் கூட இதுவரை சென்றதில்லை. INSDயின் NGO உறவுகளும் அவர்களது அரசியலும் விமர்சனத்துக்குரியவையே.//
பொய் சொல்லுகிறீர்கள் ஷோபா. sldf பற்றி நீங்கள் உங்களுக்குத் தெரிந்ததைச் சொல்லுங்கள் நான் என்னை சுயவிமர்சனம் செய்கிறேன். நீங்களோ அதை சுயவிமர்சனம் எனப்தை தமிழ் தேசியவாதிகள் மீது வீசுகிறீர்களே தவிற நான் உங்களை அரசின் ஆதரவாளன் என்று வழக்கம் போல அவதூறு செய்வதாகச் சொல்லுகிறீர்கள்.

டி.அருள் எழிலன்.

Anonymous said...

ஜார்ஜ் ஆர்வெலின் தீவிர கம்யூனிச எதிர்ப்பு தன்மையிலான எழுத்துக்களை மேற்குலக அறிவுலகம் சோசலிச நாடுகளுக்கு எதிரான பிரச்சாரங்களில் அதிக அளவில் பயன்படுத்தியது. ஆனால் அவர் பிரிட்டிஷ் உளவு துறையினருக்காக வேலை செய்தார் என்ற குட்டச்சாட்டு பொதுவாக உண்டு. சில வருடங்களுக்கு முன்னால் ஜார்ஜ் ஆர்வெல் உண்மையில் பிரிடிஷ் உளவுத்துறைக்கு வேலை செய்தார் என்ற செய்தியை லண்டன் டெலிகிராஃப் வெளியிட, அது தி இந்து விலும் வெளியாகியிருந்தது. ஜார்ஜ் ஆர்வெல் ஒரு இடதுசாரி என்ற பிம்பம் தங்களுடைய நோக்கத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று உளவுத்துறை நம்பியது என்றும் அந்த செய்தி கூறியது. தன்னுடைய விலங்கு பண்ணைக்கான முன்னுரையில் ஐரோப்பாவில் நிலவும் பத்திரிகை சுதந்திரத்துக்கு இருந்த கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஆர்வெல் எழுதியிருந்தார். அது அரசால் தணிகை செய்யப்பட்டு நீக்கப்பட்டது. ஆக உளவுத்துறையினருக்காக செயல்படுவோர் வெளிப்படையாக அரசு ஆதரவாளராக இயங்குவர் என்று எதிர்பார்ப்பது தவறு. ஏனென்றால் அதனால் அவர்களின் நோக்கமே அடிபட்டுவிடக் கூடும். எனவே ’வெளிப்படையாக’ ஷோபா சக்தி இலங்கை, இந்திய அரசுகளுக்கு ஆதரவாக செயல்படுகிறாரா என்ற தளத்திலிருந்து மட்டும் அல்லாமல் அவருடைய பிரச்சாரங்கள் எந்த அளவில் ஈழ பிரச்சினை பற்றிய நிலைபாடுகளில் இலங்கை, இந்திய அரசின் பிரச்சாரங்களுடன் ஒத்திருக்கிறது என்பதையும், அவர் தொடர்புகொண்டிருக்கும் அமைப்புகளின் நிலைபாடுகள் என்ன என்பதையும் கணக்கில் எடுத்துக்கொண்டே அவர் யாருக்காக இயங்குகிறார் என்ற முடிவுக்கு வரவேண்டும். விவாதங்களும் மேற்கண்ட எல்லா விவரங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டே எடுத்து செல்ல வேண்டும்.

பிரிட்டிஷ் அரசையே விமர்சித்த ஆர்வெல் பிரிட்டிஷ் உளவு துறைக்கு தான் கம்யூனிஸ்ட் என்று சந்தேகிக்கும் நபர்களின் பட்டியலை கொடுத்தார் என்பதும் அவர்களில் சார்லி சாப்ளின், பால் ராப்சன், ஜே.பி. பிரீஸ்ட்லி ஆகியோர் அடங்குவர் என்பது குறிப்பிட தக்கது."
Jose Antoin
thanks.
face book

Anonymous said...

இலங்கைக்கு எதிராக எதிர்ப்பியக்கம் கட்ட இலங்கைக்கு வெளியே நல்ல சூழல் நிலவும் காலமது. ஆனால் அந்த முயர்ச்சிகள் எதுவும் ஈழத் தமிழர்கள் எவரிடமும் இல்லை. ஷோபாசக்தியிடமும் இல்லை. இலங்கைக்கு எதிராக உருவாகியிருக்கும் மிகப்பெரிய அதிருப்தியை அரசியல் மயப்படுத்துவதை விட்டு விட்டு இலங்கையை எதிர்க்கும் சக்திகளை பலவீனப்படுத்தும் அறிவுத் தந்திரத்தைத்தான் ஷோபா, அ,மார்க்ஸ் போன்றோர் செய்கிறார்கள். இதுதான் எனது குற்றச்சாட்டு. ஆதாரம் எங்கே என்று கேட்கிறீர்கள் இலங்கையை நான் ஆதரிக்கிறேன் என்று வெளிப்படையாகச் சொல்லி விட்டா ஆதரிக்கிறீர்கள். இதை எல்லாம் கடந்து இன அழிப்பு போரின் போது வெளிவந்த புதுவிசை இதழே சாட்சி என்றாலும் எல்லாவற்றையும் அவதூறு என்று நிராகரிக்கிறார் ஷோபா.

Anonymous said...

ஷோபாசக்தி நான் லண்டனில் பேசியதை எங்கே எப்போது மறுத்தேன் என்பதை நீங்கள் சொல்ல முடியுமா? தோழர் சேனன் அவர்களுக்கும் நான் இதைத்தான் சொல்கிறேன். ஆனால் நான் லண்டனில் பேசியதாக ஷோபா இப்படிச் சொல்கிறார். "மக்களைப் புலிகள் விடுவிக்காமலிருந்தது நீதியே" உண்மையில் நான் பேசியது இதுதான் "புலிகளிடம் மக்களை விடுவிக்கக் கோருவதை அநீதியான கோரிக்கையாகவே நான் பார்க்கிறேன்" என்று எழுதியதை ’’மக்களைப் புலிகள் விடுவிக்காமலிருந்தது நீதியே" என்று தந்திரமாக திரிக்கும் எழுத்துச் சித்தர் ஷோபா. மறைமுகமாக மக்களை புலிகள் பிடித்து வைத்திருந்ததை ஒத்துக் கொண்ட தோற்றத்தை என் மீது உருவாக்குகிறார். புலிகள் மக்களை பிடித்து வைத்திருந்தார்கள் என்பதே சிக்கலான விஷயம். இது தொடர்பாக பலரையும் சந்தித்த போது ஷோபா சொல்வது போன்றோ, அல்லது புலி ஆதரவாளர்கள் சொல்வது போன்றோ அல்ல இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட பல தகவல்கள் எனக்குக் கிடைத்தன. உடனே ஒலிநாடாவை எடிட் செய்திருக்க வாய்பில்லையா? என்கிறீர்களே இது கேவலமாக இல்லையா? ஷோபா.
அடுத்து,
//இறுதி யுத்தகாலத்தில் வன்னியில் மக்கள் புலிகளிடம் பட்ட கற்பனைக்கும் எட்டாத துயரங்களையும் புலிகளின் மிருகத்தனமான கொடூரங்களையும் குறித்து நிறையப் பேர்கள் சாட்சியமளித்துவிட்டார்கள். ஆனால் அவற்றையெல்லாம் எழிலன் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. களத்திலிருந்து கருணாகரனும், நிலாந்தனும், யோ. கர்ணனும் சொன்னார்கள். தமிழகத்திலிருந்து த. அகிலன் சொன்னார். புலம் பெயர் நாடுகளிலிருந்து நாங்கள் சொன்னோம். எதையும் எழிலன் நம்ப மறுக்கிறார். தனது வழக்கப்படி இவ்வாறு சொல்பவர்களை 'அம்சாவின் அடிவருடிகள்' என்று அழைக்கவும் அவர் தயங்கமாட்டார்.//
உண்மைதான் நீங்கள் பட்டியலிட்ட நபர்கள் எல்லோரும் புலிகளுக்கு எதிராக மட்டுமே என் காதில் ஓதினார்கள் அதுதான் பிரச்சனையோ ஆனால் இனியொரு தோழர் நாவலனோ, புலிகளுக்கு எதிராக இருந்து போரின் பின்னர் இலங்கைக்கு அரசுக்கு எதிராக நிற்கும் தோழர்களோ புலிகள் செய்த தவறுகளையும் சொன்னார்கள். அதை விட இலங்கை அரசு செய்த பச்சைப் படுகொலைகளையும் செய்தார்கள். அதுதான் அரசியல் ரீதியாக சரி என நினைக்கிறேன். சரி நீங்கள் குறிப்பிடும் இவர்கள் இப்போது என்ன அரசியல் நிலைப்பாடுகளோடு இலங்கைக்குள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஷோபா எனக்கு நீங்கள் சொல்ல முடியுமா?

டி.அருள் எழிலன்.

Anonymous said...

எதிரியின் எதிரி நண்பன்"

http://srisagajan.blogspot.com/2010/11/blog-post.html


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி

YOGA.S.Fr said...

இந்த விவாத அரங்கில் கூறப்பட்ட இறுதிக் கட்ட இன அழிப்பின் பின்னர் சிலரிடமிருந்து அனுபவங்கள் அல்லது சாட்சியங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டதாக குறிக்கப்பட்டிருந்தது!வெளியிட முடியாது என்றும் கூறியிருந்தீர்கள்!எங்களுக்குக் கூற வேண்டாம் ஐ.நா செயலாளர் தனக்கு ஆலோசனை வழங்கும் நோக் கில் அமைத்த குழுவினர் இப்போது சாட்சியங்களைக் கோருகிறார்கள்!அளிக்கலாமில்லையா?

Anonymous said...

YOGA.S.Fr நிச்சயமாக தமிழகத்தில் வாக்குமூலங்கள் கணிசமான அளவுக்கு சேகரிக்கப்பட்டிருக்கின்றன. ஐநாவிடம் ஒப்படைக்கப்பட்டும் இருக்கிறது. நானும் இதை உரியவர்களிடம் வழங்குகிறேன். ஆனால் இதில் நகைச்சுவை என்ன வென்றால் ஏகாதிபத்திய கொடூரங்களை என்னவென்றே தட்டிக் கேட்காத ஐநாவும், மனித உரிமை அமைப்புகளும் எங்கள் மக்களைக் கொன்றொழித்தவர்களை தண்டிப்பார்கள் என்று நாம் நம்புகிறோம் அல்லவா? அதுதான் நாம் சம்காலத்தில் சந்திக்கும் முரண். என்ன செய்ய ஆனாலும் கொடுப்போம்.

டி.அருள் எழிலன்.

Anonymous said...

//சமீபத்திய போரிலும் கூட ராஜபக்சே அரசின் வெறித்தனமான தாக்குதலில் “சுமார் ஒரு லட்சம் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்’’ என்கிற ரீதியில்தான் அவர்கள் அறிவார்களே தவிர, விடுதலைப் புலிகளால் 3 லட்சம் தமிழ் சிவிலியன்கள் பாதுகாப்பு அரணாகப் பயன்படுத்தப்பட்டதை அவர்கள் நினைத்தும் பார்த்ததில்லை.// இதுதான் ஷோபாசக்தியின் இலங்கை அரசுக்கு எதிரான எழுத்து. இவர் இலங்கை அரசுக்கு எதிராக இருக்கிறார் என்பதை நாம் நம்புவோம்.

Anonymous said...

இலங்கை அரசுக்கு எதிராக ஷோபா சக்தி எழுதியதாகச் சொல்லப்படும் கட்டுரைகள் இதுதான். நம்புவோம் இவரை இலங்கை அரசுக்கு எதிரானவர் என்று.
..................................
1. இம்மாத ‘காலச்சுவடு’ இதழில் ‘ஈழப்போரின் இறுதி நாட்கள்’ என்ற மனம் பதைக்க வைக்கும் நீள்கட்டுரை வெளியாகியிருக்கிறது. புலி ஆதரவாளர்கள், அரச ஆதரவாளர்கள் எல்லோரும் தங்கள் தங்கள் முன்முடிவுகளையும் சாய்வுகளையும் சற்றே தள்ளிவைத்து விட்டு நிதானமாகப் படிக்க வேண்டிய கட்டுரையிது.
இந்தக் கட்டுரை ராஜபக்ஷவின் கைக்கூலிகளால் எழுதப்பட்டது என்றோ, ஒட்டுக்குழுக்களின் சித்துவேலை என்றோ பழிக்கப்படலாம் அல்லது இதைக் கண்டுகொள்ளாமலே விடும் தந்திரமும் நடக்கலாம். ஒருவர் உண்மையை எதிர்கொள்ள மறுப்பதால் உண்மைக்கு இழப்பு ஏதுமில்லை என்பதைத்தான் இப்போதைக்குச் சொல்லிவைக்க முடிகிறது.
கட்டுரையைப் படிக்க இங்கே சொடுக்கவும். ( புலிகளே கடவுள் என்று எல்லாம் மண்ணாகிப் போன பின்பு அரசு சார்பாளாராக மாறிய நண்பர் எழுதிய கட்டுரை இது)

2. ஈழப் போராட்டமும் தமிழக ஆதரவாளர்களும்

3. நாடு கடந்த தமிழீழ அரசு .

4. தன்னைத் தானே தகனம் செய்யுமாறு கட்டளையிடுவது அநீதி - லெ.முருகபூபதி .

5.புலி ஆதரவாளர்கள் தம்மை சுய பரிசோதனை செய்ய வேண்டும் .

அருள் எழிலன்.

Anonymous said...

இதில் தான் எழுதிய அரிய பல கட்டுரைகளோடு வேறு சிலர் எழுதியதையும் தனது இலங்கை அரசு ஆதரவு பிரச்சாரத்திற்கு பயன்படுத்துகிறார்.

டி.அருள் எழிலன்.

Anonymous said...

//விமர்சனமற்ற முறையில் விடுதலைப் புலிகளை ஆதரிப்பது, அல்லது விடுதலைப்
புலிகளை எதிர்ப்பது என்கிற வகையில் இலங்கை அரசையும்கூட ஆதரிக்கும் நிலையை
எடுப்பது என்கிற இரு எதிரெதிர் நிலைப்பாடுகளுக்கிடையே ஈழப் பிரச்சினையில்
நடுநிலையான ஒரு பார்வையைத் தொடர்ந்து பேணி வருபவர் எழுத்தாளர் ஷோபாசக்தி.
சென்ற மாதத்தில் நான் பிரான்ஸ் சென்றிருந்தபோது ஈழப் போராட்டம் இன்றொரு
தேக்கநிலையை எட்டியிருப்பது குறித்து அவரிடம் நானெடுத்த பேட்டி இது.
இன்றைய தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளியாகிய ஷோபாசக்தியின்
இக்கருத்துக்களை வேறும் நேர்காணலாகவன்றி உடன்பாட்டுடன் முன்வைக்கிறேன்.
பாரிசிலிருந்து சுமார் 800 கி.மி. தொலைவிலுள்ள Pau என்னும் நகரில் சென்ற
ஆகஸ்ட் 3 அன்று பதிவு செய்யப்பட்டது இது.
-அ. மார்க்ஸ்// மார்க்ஸ் இந்த அரசு ஆதரவாளருக்கு சான்றிதழ் கொடுக்கிறார்.
நடுநிலை என்ற பதத்தை பின் நவீனத்துவ பீடாதிபதி பயன்படுத்துகிறார்.
உலகின் எந்த ஒரு வரலாற்றிலும் அப்படியான ஒரு நடுநிலை பகுதியே இல்லை
என்னும் போது இலங்கை அரசு ஆதரவாளரான ஷோபா சக்தியை நடுநிலையாளராக
சித்தரிக்கிறார் இந்த நடுநிலையாளர்.

-/சுடலை மாடன்/- said...

//இதுவரை நீங்கள் நம்பியதாகவும் பேசியதாகவும் சொல்லப்பட்ட அரசியலைப் பேச தடையாக இருந்த புலிகள் இப்போது இல்லை. ஆனால் அதற்கப்பாலும் இலங்கைக்கு எதிரான எதிர்ப்புச் சக்திகள் இப்போது இலங்கைக்கு வெளியே உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.அந்தக் சக்திகளோடு இணைந்து நீங்கள் பயங்கரவாத இலங்கை அரசுக்கு எதிராக போராடுவீர்கள் என்றுதான் போருக்குப் பின்னர் உங்களை எதிர்ப்பார்த்தேன். ஆனால் நீங்களோ இலங்கைக்கு எதிராக வெளியில் உருவாகும் எதிர்ப்புச் சக்திகளை தந்திரமாகத் தாக்கத் துவங்கி விட்டீர்கள். //

இந்திய மார்ச்கிஸ்டுக் கட்சிப் போலிகள், சோபாசக்தி, அ.மார்க்ஸ் மற்றும் அவர்களின் அடிப்பொடிகள், இவர்களது ஈழம் குறித்த பேத்தல் புரட்சிக் கருத்துகளை மறைமுகமாக அன்றும் இன்றும் விசிலடித்துப் பயன்படுத்திவரும் இந்தியதேசியப் பார்ப்பனியக் குஞ்சுகள் அனைவருக்கும் இக்கேள்வி பொருந்தும். புலிகள் அழிக்கப் பட்டபிறகு இலங்கை - இந்தியாவின் இனவெறி-இரத்தவெறி பிடித்த அரசுகளின் தமிழர்க்கெதிரான ஒடுக்குமுறையை எதிர்த்து என்ன மயிரை இதுவரை புடுங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று அறிந்துகொள்ள விரும்புகிறோம். பேப்ப்ரையும், பேனாவையும் கிழித்தது போதும். ஏதாவது ஒரு சிறுபோராட்டத்தை இதுவரை நடத்தியிருக்கிறார்களா என்று அறிய விருப்பம்.

நன்றி அருள் எழிலன். நல்ல வேளையாக இச்சுட்டியை நண்பரொருவர் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார்.

Anonymous said...

இன்னொரு முறை ஈழம் தொடர்பான எதிர்ப்பியக்கம் தேவை என்றால் நிச்சயமாக இதுவரை நடந்த போராட்டத்தை விமர்சனம் செய்தே ஆக வேண்டும். அதில் எனக்கு எந்த மற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அதை போஸ்ட்மார்டம் செய்கிறவர்கள் யார் என்பதுதான் கேள்வியே? இவர்கள் எப்போதுமே ஈழ மக்களுக்கு எதிரானவர்களாக இருந்திருக்கிறார்கள். அப்படி இருந்து விட்டு நடுநிலையானவர் என்று வேறு சொல்லிக் கொள்கிறார்கள். காலக்கொடுமை.

டி.அருள் எழிலன்.

Anonymous said...

நான் ஷோபாசக்தி ஆவது எப்படி?

புலிகளை துரோகி என்றேன்.
அவர்கள் என்னை அரவணைத்துக் கொண்டார்கள்.
ஈழத் தேசியம் ஒரு கற்பிதம் என்றேன்.
பௌத்த மரபு உனக்கு வசதியாய் இருக்கும் என்றார்கள்.
பெருந்தொகையான மக்கள் கொல்லப்பட்ட போது,
நான் புலிகள் மக்களை கலைத்துப் பிடித்துச் சுட்டார்கள் என்றேன்.
எனது நூலை ஆங்கிலத்தில் கொண்டு வர உதவினார்கள்.
போருக்கு உதவிய எல்லா நாடுகள் குறித்தும் மௌனம் காத்தேன்.
சாதகமான ஒன்றைத் தேர்ந்தெடுத்து போருக்கு எதிராக நிறுத்தினேன்.
என்னை நடுநிலையாளர் என்று சான்றிதழ் கொடுத்தார்கள்.
வெளிப்படையாக வரவா என்றேன்.
இல்லை இல்லை நீ இந்த முகத்தோடு இருப்பதுதான்
எங்களுக்கு வசதி என்றார்கள்.
இதற்கு மேல் விற்க எதுவும் இல்லை என்றேன்.
அவர்களோ முட்கம்பி வேலிகளிலும் வானாந்தரங்களிலும்
வீசப்பட்ட மக்களைக் காட்டினார்கள்;
கூடவே எலும்புக் கூடுகளையும்.
இப்போது நான் சொன்னேன்
அவர்களே அவர்களை அழித்துக் கொண்டார்கள் என்று.
இனி எனது நூல்கள்
ஜெர்மன், டேனிஷ், பிரெஞ்ச், மொழிகளிலும் வரும்....
நானும் மாற்றுக்கருத்துப் பாரம்பரியத்தில் வந்த ஒருவனாவேன்.

- யாழினி

Anonymous said...

'அருள்எழிலன் கூலிக்கு மாரடிக்கிறார்' என நான் சாடி எழுதியபோது ஒரு தோழர் 'கூலிக்கு மாரடிப்பது' என்ற சொல்லாடல் சாதியச் சொல்லாடல் என்றும் மரணவீடுகளில் கூலிக்காக மாரடிக்க அழைத்து வரப்படும் அடித்தளச் சாதியினரை குறித்தது அந்தச் சொல் என்றும் சுட்டிக்காட்டினார். அவரது அந்த விமர்சனத்திற்குப் பின்பே நமது சமூகத்தில் அரசியலாளர்கள் - எழுத்தாளர்கள் என அனைத்துத் தரப்பினராலும் சர்வசாதாரணமாக சொல்லப்படும் அந்தச் சொல்லாடலுக்குப் பின்னால் இவ்வாறான ஒரு சாதியக் கறை இருப்பது எனக்கு உறைத்தது. உடனேயே நான் அந்தச் சொல்லாடலை உபயோகித்ததற்கு வருத்தம் தெரிவித்து இனி அவ்வாறு ஒரு தவறு நிகழாது என உறுதியளித்தேன்.

ஆனால் பிரச்சினை அத்தோடு முடியவில்லை. 'இது கூடத் தெரியாமல் 15 வருடமாக என்ன தலித் அரசியல் பேசுகிறாய்?' என்றும் 'திமிர்' என்றும் 'அறிந்தே அந்தச் சொல்லாடலை உபயோகித்தேன்' என்றும் அருள்எழிலனின் முகப்புத்தகத்தில் கண்டனங்கள் குவிந்தன. இது என்னை மிகவும் வருத்தியது. சீழ்த்தலைச் சாத்தனார் போல எனது தலையில் நான் கீ - போர்டைத் தூக்கி அடிக்காததுதான் பாக்கி.

இந்தச் சொல்லாடலை சாதிய ஒழிப்பை ஆத்மார்த்தமாக நேசிக்கும் அரசியலாளர்கள் - எழுத்தாளர்கள் வேறுயாராவது உபயோகித்திருக்கிறார்களா என இணையத்தில் தேடினேன்

தந்தை பெரியார் அந்தச் சொல்லாடலை ஒன்றுக்கு மேற்பட்ட தருணங்களில் உபயோகித்துள்ளார். 'வினவு' இணையத்தளம், ஆதவன் தீட்சண்யா, ரயாகரன், க. நவம், ஸ்ரீரங்கன், என ஒரு நீண்ட பட்டியல் கிடைத்தது. 'இனியொரு' இணையத்தில் வெளியாகிய செம்மொழி மாநாடு எதிர்ப்புக் கவிதையிலும் அந்தச் சொல்லாடல் கையாளப்பட்டிருந்தது.

இவர்களெல்லோரும் இந்தச் சொல்லாடலைச் சாதித் திமிரோடு பேசினார்கள், இவர்களுக்குத் தலித் அரசியல் பேசத் யோக்கியதையில்லை என்றா கருதுகிறீர்கள்? நமது மொழியில் உறைந்துருக்கும் சாதியத்தை இந்த விடயத்தில் இவர்கள் பகுத்தறிந்து பார்க்கத் தவறிவிட்டார்கள் என்றே சொல்ல முடியும். இந்தச் சொல்லாடலில் பொதிந்திருந்த சாதியம் முதன் முதலாக எழுத்துத் தளத்தில் இந்த விவாதத்தின் மூலம் இப்போது கவனம் பெற்றுள்ளது. அருள்எழிலன் குறித்த விவாதங்கள் மூலம் ஏற்பட்டிருக்கும் நன்மைகளில் இதுவுமொன்று. தவறைச் சுட்டிக்காட்டிய பிரகாஷ் வெங்கடேசனுக்கு நன்றி.

இந்த நீண்ட பட்டியல் என்னை நியாயப்படுத்தும் முயற்சி எனத் தயவு செய்து கருத வேண்டாம். ஆனால் நான் எனது அறியாமைக்கு வருத்தம் தெரிவித்த பின்பும் என்னை 'கோர்னர்' செய்ய இதை ஒரு துருப்புச்சீட்டாகப் பயன்படுத்துவது நியாயமில்லை என நினைக்கிறேன். அவ்வளவே. இங்கே அறியாமை என நான் குறிப்பிடுவது இவ்வாறு கூலிக்கு மாரடிக்கும் சாதியச் சடங்கு நமது சமூகத்தில் இருந்ததை நான் அறியாமலிருந்தேன் என்ற பொருளிலல்ல. மொழியில் பொதிந்திருந்த சாதியக்கறையை இந்த விடயத்தில் உணராமலிருந்தேன் என்ற பொருளிலேயே அவ்வாறு குறிப்பிடுகிறேன்.

'நமது மொழி சாதி காப்பாற்றும் மொழி' எனத் தந்தை பெரியார் சொன்னது மாபெரும் உண்மை!!

பெரியார்:
http://64.50.168.170/index.php?option=com_content&view=article&id=2995%3A2010-02-01-06-41-02&catid=42%3Aperiyar&Itemid=127

http://periyardk.org/PHP/Details.php?key1=Kudiyarasu&key2=1932&fileName=Jan&cCount=1

வினவு:
http://www.vinavu.com/2009/05/21/eelam4/

ரயாகரன்:
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3420%3A2008-08-30-14-48-06&catid=72%3A0406&Itemid=76

ஆதவன் தீட்சண்யா:
http://keetru.com/literature/essays/aadhavan_1.php

க.நவம்:
http://www.kalachuvadu.com/issue-105/page56.asp

ஸ்ரீரங்கன்:
http://www.uyirnizhal.com/e-book/Thotruthaan%20povoma/srirangan.html

இனியொரு:
http://inioru.com/?p=14269

-ஷோபா

Anonymous said...

ஷோபாசக்திக்கு நானொன்றைச் சொல்ல விரும்புகிறேன். ஒருவரை அல்லது ஒரு அமைப்பை சாடியே பிழைத்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள் போற்றிப் பிழைத்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். இதில் முதல் ரகமாய் இருக்கும் நீங்கள், ஒரு காலத்தில் இரண்டாவது ரகமாகவும் இருந்து வந்தவர் என்பது எல்லோரும் தெரிந்திருக்கும்.

புலிகள் என்ன காடு வெட்டி, கழனி வெட்டிச் சம்பாதித்த பணமா….வடக்கிலிருந்து இஸ்லாமியர்களை விரட்டிக் கொள்ளையடித்த பணம், வெளிநாட்டிலிருந்து செல்பவர்களை ‘நந்தவனத்தில்’ வைத்து மிரட்டிப் பெற்ற பணம், வெளிநாடுகளில் உள்ளவர்களை மிரட்டிப் பெற்ற பணம்…என்றெல்லாம் வலும் சுவாரஸ்யமாக வெழுத்துக்கட்டியிருக்கிறீர்கள்?
இதில் வேடிக்கை என்னவென்றால் யாழ்ப்பாணத்திலிருந்து நகர்த்தப்பட்ட இஸ்லாமியர்களுக்காக அழுது வடியும் ஷோபா மாதிரியான பல சர்வதேச எழுத்தாளர்கள், ஏனோ இலங்கை அரசினால் ஆயிரமாயிரமாய் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் அப்பாவித் தமிழ் மக்களுக்காகவும் இந்திய இராணுவத்தால் ஆயிரமாயிரமாய் கொல்லப்பட்ட அப்பாவித்தமிழ் மக்களுக்காகவும் , இவர்களால் அழிக்கப்பட்ட தமிழர் உடமைகளுக்காகவும், இவர்களால் மனநோய்க்கு ஆளாக்கப்பட்டிருக்கும் இலட்சக் கணக்காண அப்பாவித் தமிழ் மக்களுக்காகவும், இவர்களால் ஏதிலிகளாக்கப்பட்டிருக்கும் அப்பாவித் தமிழ் மக்களுக்காகவும் கவலைப்படாமல் குறிப்பிட்ட ஒரு பிரதேசத்திலிருந்து இன்னுமொரு பிரதேசத்திற்கு அனுப்பப்பட்ட ஒரு குழு மக்களுக்காக மட்டுமே தொடர்ந்து நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பது தான்!!!
நந்தவனப் பக்கமே தலைகாட்டும் தைரியமற்று பிரான்ஸில் ஒளிந்து கிடந்து மார்தட்டிக் கொண்டிருக்கும் ஷோபாசக்தியிடம் கேட்க வேண்டிய இன்னுமொரு கேள்வி - வெளிநாட்டிலிருந்து ‘நந்தவனத்திற்கு’ செல்லும் வெளிநாட்டு மக்களிடம் புலிகள் மிரட்டிப் பெற்ற பணம் என்கிறீர்கள். நந்தவனத்திற்கு வெளிநாட்டிலிருந்து செல்லும் எல்லோரும் அனுமதிக்கப்படுவதில்லை என்பது முதல் உங்களுக்குத் தெரியுமா என்று கேட்க விரும்புகிறேன். அங்கு செல்வதற்கும் மனம் சார்பாக, குணம் சார்பாக, உணர்வு சார்பாக சில தகமைகள் தேவை. அவற்றில் குறைபாடு உள்ளவர்கள் அங்கு செல்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. அப்படி அனுமதிக்கப்படுபவர்கள் தமிழின விடுதலைக்காக தம் உயிரையும் அர்பணிக்கத் தயாராக உள்ள மனஉறுதி கொண்டவர்கள். அப்படியானவர்களிடம் புலிகள் பணத்தை மிரட்டிப் பறிக்க வேண்டிய எந்தத் தேவையுமில்லை – விரும்பினால் அவர்களாகவே கொடுத்து விடுவார்களே தவிர, புலிகள் அவர்களை மிரட்டிப் பறிக்க வேண்டிய எந்தத் தேவையுமில்லை என்பதை முதலில் ஷோபாசக்தி புரிந்து கொள்ளட்டும்.
அது மட்டுமில்லை, வெளிநாட்டிலுள்ள எந்த நபரையும் புலிகள் மிரட்டிக் காசு பறிக்க வேண்டிய எந்தத் தேவையும் புலிகளுக்கில்லை என்பது வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கும் என் போன்ற தமிழ் மக்களுக்கும் நன்றாகவே தெரியும். வெளிநாட்டில் வாழும் நிறையத் தமிழர்கள் எப்பவும் தமிழின விடுதலைக்காக என்ன விலையும் கொடுக்கத் தயாராக இருப்பவர்களேயன்றி அவர்களிடம் அதற்காக யாரும் மிரட்டிப் பணம் பறிக்க வேண்டிய நிலையில் இருப்பவர்கள் அல்ல. ஷோபா சக்தி போன்றோரும் அவருடன் உறவாடும் பலரும் மிரட்டுவது, பணம் பறிப்பது என்பவற்றோடு அதிகம் தொடர்புள்ளவர்கள் என்பதால் இவருக்கும் அந்தப்பதங்கள் வெகு சுலபமாக வந்து விடுகிறது என்பது என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது. இவருக்காக இப்போதைக்குப் பரிதாப்பட மட்டுமே முடிகிறது.

அன்புடன்
குவேனி.