பேர‌ழிவில் ஈழ‌த்த‌மிழ‌ர்




காந்தி பிறந்த நாளான நேற்று ஈழத்தமிழ் மக்களை கொன்று குவிக்கும் இலங்கை அரசையும் அதற்கு ஆயுதங்கள் கொடுத்து உதவும் இந்திய அரசையும் கண்டித்து தமிழகம் முழுக்க ஆர்ப்பாட்டம் நடந்த அதே வேளை. இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித போகலாமாவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப்முகர்ஜியும் டில்லியில் சந்தித்து பேசியிருக்கிறார்கள். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரிடமிருந்து காக்க இலங்கை கடற்படையும் இந்திய கடற்படையும் கூட்டு ரோந்து செல்வதாக முடிவு எடுத்திருக்கிறார்கள். மத்திய அரசின் தமிழர் விரோத போக்கு எவளவு ஈனத்தனமானது என்பது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது... நண்பர்களே!

த‌மிழ்நாட்டில் முத‌ல்வ‌ராக‌ இருக்கும் திரு,க‌ருணாநிதிக்கு தெரியாம‌ல் இதெல்லாம் ந‌டந்திருக்குமா? என்ன? இந்தியா பாம்புக்கு வாலையும் மீனுக்கு பாலையும் காட்டும் வித்தையை க‌ற்றுக் கொண்டிருக்கிறார் க‌ருணாநிதி.
இந்த‌ நேரத்தில்தான் த‌மிழ‌க‌த்தில் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் நில‌மைக்காக‌ தோன்றியுள்ள‌ கொந்த‌ளிப்பை வெறும் அர‌சிய‌ல் கூட்டுக்கான‌ ஒத்திகை என‌ அர‌சிய‌ல் புரோக்க‌ர்க‌ளும் சில‌ ப‌த்திரிகைகளும் பிர‌ச்சார‌ம் செய்து வ‌ருகிறார்க‌ள்.

இது மிக‌வும் சிக்க‌லான‌ உண‌ர்வு பூர்வ‌மான‌ பிர‌ச்ச‌னை.ஈழ‌ப் போரில் போராளிக்குழுக்க‌ள் மீதான‌ க‌ச‌ப்புகள்,அர‌சிய‌ல் முர‌ண்பாடுக‌ள் ந‌ம‌க்கு இருக்க‌லாம்.ஆனால் நாம் அனைவ‌ரும் ஒன்று சேர்ந்து ஈழ‌ ம‌க்க‌ள் மீது தொடுக்க‌ப்ப‌ட்டிருக்கும் இந்த‌ கொலை பாத‌கப் போரை முடிவுக்கு கொண்டு வ‌ருவ‌த‌ன் மூல‌ம் அவ‌ர்க‌ளை நாம் காக்க‌ முன்வ‌ர‌வேண்டும்.ந‌ம‌து மீன‌வ‌ர்க‌ளை அன்றாட‌ம் கொலை செய்யும் சிங்க‌ள‌ப் ப‌டைக‌ளிட‌ம் இந்தியா ந‌ம‌து மீன‌வ‌ர்க‌ளை ஒப்ப‌டைப்ப‌தை அனும‌திக்க‌க் கூடாது.கொலை செய்ப‌வ‌னோடு கூட்டு ரோந்து என்ப‌து ஊரை ஏமாற்றுகிற‌ வேலை. த‌விற‌வும் அப்ப‌டி கூட்டு ரோந்து செய்வ‌த‌ன் மூல‌ம். தின‌ம் தோறும் நிக‌ழ்த்த‌ப்ப‌டும் கொலைக‌ளுக்கு இந்தியாவும் இல‌ங்கையும் சேர்ந்து ச‌ட்ட‌பூர்வ‌மான‌ அங்கீகார‌த்தை வ‌ழ‌ங்க‌க் கூடும்.

ஆக‌வே தோழ‌ர்க‌ளே!
#ஈழ‌த்த‌மிழ‌னை நீங்க‌ள் காக்க‌த் த‌விறினால் நாளை இதுதான் ந‌ம‌க்கும் ந‌ட‌க்கும்.

#த‌மிழ‌க‌ மீன‌வ‌ன் கொல்ல‌ப்ப‌டுவ‌தை மௌனியாக‌ நாம் வேடிக்கை பார்த்தாம் மீன‌வ‌னுக்கு எதிராக‌ நீண்ட‌ சிங்க‌ள‌த் துப்பாக்கிக‌ள் நாளை ந‌ம‌க்கு எதிராக‌வும் திரும்பும்.உங்க‌ள் எதிர்ப்புக‌ளை ப‌திவு செய்யுங்க‌ள்.

3 comments:

நிழலின் குரல் said...

கூட்டு ரோந்து போனால் தமிழ்நாட்டுக்குள் போதைபொருள் கடத்த புலிகளால் முடியாது என காண்டு ?

Unknown said...

போர் தர்மங்களை சிங்கள ராணுவம் மீறுவதை இனியும் பொறுத்துக் கொள்ளக் கூடாது. கொழும்பு உள்ளிட்ட சிங்கள பொது மக்கள் வசிக்கும் பகுதியில் தாக்குதல் நடத்தினால்தான் அப்பாவி மக்கள் மீதான தாக்குதலை இலங்கை ராணுவம் நிறுத்தும்.
இதுவரை சிங்கள ராணுவத்தால் கொல்லப் பட்ட தமிழக மீனவர்களுக்கு எதிராக இந்திய ராணுவமும் கூட்டு ரோந்து என்ற பெயரில் கூட்டுக் கொலை செய்வதைப் பொறுத்துக் கொள்ள முடியாது.
தாக்குதலுக்கு ஆளான தமிழக மீனவர்களும் சிங்கள ராணுவத்திற்கு எதிராக தாக்குதல் நடத்த வேண்டும். தமிழினத்தை அழித்தொழிக்கும் சிங்கள ராணுவத்தைத் தோற்கடிக்க தமிழகத்தில் இருந்து இளைஞர்கள் அணி அணியாக புறப்பட்டு இலங்கை சென்று இலங்கை தமிழர்களைப் பாதுகாப்பதைப் பற்றி பரிசீலிக்கவேண்டும். இனம் தான் இனத்தைக் காக்க வேண்டும். விரோதிகளிடமும், துரோகிகளிடமும் கையேந்துவதைவிட்டு விட்டு தமிழக இளைஞர்களும் தமிழீழ விடுதலைப் போரில் கலந்து கொள்ள வேண்டும்.


//நிழலின் குரல் said...

கூட்டு ரோந்து போனால் தமிழ்நாட்டுக்குள் போதைபொருள் கடத்த புலிகளால் முடியாது என காண்டு ?//

தம்பி வெயிலின் உரல்,
அங்கே இலங்கைத் தமிழன் உணவு, மருந்து போன்ற அத்தியாவசியமான பொருட்களே கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருக்கிறான். இங்கே இருந்து பிழைப்புக்காக கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவன் சுட்டுக் கொல்லப் படுகிறான்.

இதிலே யாருக்கு போதை மருந்து தேவை? நீ முதலில் அடிச்ச போதையில் இருந்து தெளிவானதுக்கு அப்புறம் நாட்டில் என்ன நடக்குது அப்பிடினு தெரிஞ்சுகீட்டு வந்து பின்னூட்டம் போடு.

Aba said...

*ஒரு ஈழத்து, தமிழ்த்தேசிய பத்திரிகையிலிருந்து:*
“ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் போல தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் போர் மூண்டபோது, இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் வந்து மீன்வளத்தை சூறையாடி விட்டனர்.”

Read more at: https://plus.google.com/u/0/+AbarajithanGnaneswaran/posts/WwG8EUZQvy7