சிகரெட்டை விட நினைக்கிறேன் ஆனால்.....சராசரியாக ஒரு பாக்கெட் சிக்ரெட்டை நான் தினம் தோறும் புகைக்கிறேன்.இது அதிமானதாகவோ குறைவானதாகவோ இருக்கலாம்.நான் புகைக்கிற கிங்க்ஸ் சிக்ரெட் இதுவரை நான்கு ரூபாய்க்கு விற்றது.இன்று மாலை கடைக்குப் போன போது ஐம்பது காசு அதிகமாகி விட்டது என்றார்.நான்கு ரூபாய் என்பதே இப்போது எனக்கு பெரிய விஷயம் இனி சிகரெட்டை விட்டுத் தொலைக்க வேண்டியதுதான்.கடந்த பதினைந்து ஆண்டுகாலமாக எனக்கு புகைக்கிற மது அருந்துகிற பழக்கம் உண்டு.மதுப் பழக்கம் எப்பாதாவதுதான்.ஆனால் புகைக்கிற பழக்கம் நிரந்தரமாக வந்து எனக்குள் ஓட்டிக் கொண்டது இதை எப்படியாவது விட்டுத் தொலைக்க வேண்டும் என பல முறை நினைத்திருக்கிறேன்.ஆனால் விட்டதில்லை.என் தாயார் இறந்த போது அவருக்கு நான் புகைப்பது பற்றிய கவலை இருந்தது.எய்யா சிரெட்டு பிடிக்காதய்யா என்று அம்மா கெஞ்சலாக சொல்லும் ''இப்பவே நான் குறைச்சுட்டேம்மா இனி குடிக்க மாட்டேன்”என்று சொன்னேனே தவிர சிக்ரெட்டை விட்டதில்லை.இன்னும் பலரும் பல விதமான பயிர்ச்சியை செய்யச் சொன்னார்கள்,அதாவது முதலில் விட வேண்டும் என்ற உறதி வேண்டும் என்ற்ர்கள்.கடைசியாக ஒரு பாக்கெட்டை வாங்கி அடித்து விட்டு திரும்பி பார்க்காமல் வந்து விடு.இது எதையும் நான் பின்பற்ற வில்லை ஏனென்றால் இதில் சகலமுமே ஒரு விதமான சைவ மனோபாவத்துக்குள் இருக்கிறது என நான் நினைத்தேன்.

எம்.எஸ் உதயமூர்த்தியை எனக்கு பிடிக்காது.இவர்களெல்லாம் காலையில் ஒரு ஹேண்ட் பேக்கை மாட்டிக் கொண்டு அதற்குள் ஹிண்டு பேப்பரை வைத்துக் கொண்டு ஒரு வாட்டர் பாட்டிலோடு அலுவலகம் போய் வருபவர்கள் இவர்கள் சொல்வதை எல்லாம் கேட்கக் கூடா என்றெல்லாம் நினைத்தேன்.

இன்று வரை அதில் உறுதியாகவும் இருக்கிறேன்.
ஏன் சிகரெட்டை விட வேண்டும்.இந்தப் ப்ழக்கம் எப்படி வந்தது....உடம்பில் என்னென்ன சுகவீனங்களை உறுவாக்கி யிருக்கிறது என்கிற கேள்விகளெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும்.சிகரெட்டை நான் ஏன் விட நினைக்கிறேன் என்றால் அது என் உடலை மிகவும் பாதிக்கிறது.குறிப்பாக தூக்கமின்மையை அது உற்பத்தி செய்கிறது.என் உடல் நலம் கூட எனக்கு ஒரு பொருட்டல்ல.சிகரெட் விலை இனி எனக்கு கட்டுப்படியாகாது.இதிலிருந்துதான் இதை விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றூகிறது.மற்ற அனுகூலங்களை இதோடு இணைத்து பார்க்கலாம் அவளவுதான்.குடிப்பதோ புகைப்பதோ சோகத்திற்காக அல்லது கோபத்தை வெளிப்படுத்த என்பதெல்லாம் எனக்கு உடன்பாடானதாய் இல்லை.''புல்லா தண்ணியடிச்சா தலை தொங்கிடுது அப்புறம் எங்க கோபத்தைக் காட்டுறது."இந்தப் பழக்கம் எப்படி வந்தது என்றால் எனது பள்ளிக்காலத்தில்.ஓரு மேனரிசமாக எனக்குள் வந்திருக்கலாம்.

ஆனால் எப்படி விடுவது பல முறை நான் முயன்று விடமுடியாமல் தொடர்ந்திருக்கிறேன்.சிலபேர் உடனே சிகரெட்டால் பாதிக்கப்பட்ட நுரையீரல் கல்லீரல் கணையம் கிட்னி போன்ற உடலின் பாகங்களை எல்லாம் படம் போட்டு காட்டுவார்கள்.சும்மா இதெல்லாம் என்னை ஒன்றும் செய்யாது இம்மாதிரி ஏராளாமாக பார்த்தாகி விட்டது.இது ஒரு திமிர் மாதிரி இருக்கு அதை சரி செய்ய இதெல்லாம் போதாது.தவிரவும் முதலாளித்துவ ஓழுக்க உலகத்தில் நாம் நம்மை முற்போக்காளர்களாக காட்டிக் கொள்ள வசதியாக நாம் இன்று என்.ஜி.ஓ மனநிலைக்குள் வந்து விட்டோம் குடிப் பழக்கத்தின் தீங்கு பற்றி பேசுவது.குடி குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும் என்று குறும் படம் எடுக்கச் சொல்வது இதெல்லாம் மறுகாலனியாதிக்கச் சூழலில் தப்பித்துக் கொள்ளும் ஒரு முகமூடிதான்.மேலும் குடி பெரும்பாலான ஏழைகளை பாதிக்கிறது என்பதெல்லாம் மறுக்க முடியாத உண்மை.இதை நன் எனது கிராமத்திலேயே பார்த்திருக்கிறேன்.ஆனால் மனிதர்கள் குடிப்பதையிட்டு அவர்களின் குணத்தை முடிவு செய்திடுவது சுத்த பைத்தியக் காரத்தனம்.ஏனென்றால் இன்றைய இந்தியாவின் புதிய தலைமுறையினர் நான் பார்த்த வரை மேனி அழகை செம்மையாக பேணுகுகிற குடிப்பழக்கம் இல்லாத புகைக்கிற பழக்கம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.இவர்களிடம் தேசீய வெறி அளவு கடந்து கரை புரண்டோடுவதை நான் பார்த்திருக்கிறேன்.மேலும் இந்த நாட்டின் விவசாயிகளை தற்கொலை விழும்புக்கு தள்ளியதும்.அரசு வேலையை காலி பண்ணியதும்.தனியார் மயத்துக்கு அடியாள் வேலை பார்ப்பதும் குடிப்பழக்கம் இல்லாத புகைக்கும் பழக்கம் இல்லாத இந்த படித்த மேல்தட்டு வர்க்கம்தான்.பெரும்பாலும் குடிக்கிறவர்களை விட இவர்கள் ஆபத்தானவர்கள் இல்லையா?
சரி இதெல்லாம் இருக்கட்டும் நான் சிகரெட்டை விட நினைக்கிறேன் அது என்னால் முடியுமா எனத் தெரியவில்லை.விடமுடியாவிட்டாலும் ஒன்றும் குடி முழுகிப் போய்விடாது இல்லையா?என்ன செய்யலாம்.

(மிகவும் ஸ்டைலான ஒரு சிகரெட் புகைக்கிற படம் வேண்டும் என்று தேடிய போது நண்பர் சே‍'யின் படத்தை விட சிறந்ததாய் வேறு என்ன படம் இருக்க முடியும்.)

16 comments:

உண்மைத்தமிழன் said...

எழிலன்..

குடிப்பழக்கமோ, சிகரெட் பழக்கமோ உடலுக்கு தீங்கு நேராதவரையில் விடுவதற்கு மனசு வராதுதான்.. ஆனால் வரும் முன் காக்க வேண்டும் என்பதற்காகத்தான் அது தீங்கு என்று சொல்கிறார்களே ஒழிய, சிகரெட் குடித்தால் மனிதர்களாக இருக்க முடியாது என்றல்ல..

உங்களது உடல் நலனுக்குத் தீங்கு என்றால் அதனால் முதலில் பாதிக்கப்படப் போவது உங்களுடைய குடும்பத்தினர்தான்.. காலில் ஆணி குத்தினால் பிடுங்கியெறிந்துவிட்டு வீட்டுக்கு நடந்து வந்துவிடலாம். நடக்கவே முடியாத சூழல் வந்தால் மருத்துவமனைக்குத்தான் ஓட வேண்டும்.

மருத்துவமனையில் ஒரு நாள் பொழுதைக் கழிப்பது இப்போதெல்லாம் சாதாரண பொது ஜனங்களுக்கு பைவ் ஸ்டார் ஹோட்டலில் தங்குவதைப் போல.. பணம் செலவானால் அது உங்களுடைய சேமிப்பிலிருந்து நீங்கள் செலவழிப்பது போலத்தான். இதைத்தான் வெட்டிச் செலவு என்கிறார்கள் குடும்பத்தினர்.

புகை பிடிக்காமல் இருப்பதனால் வருகின்ற நோயையும், செலவையும் முற்றிலுமாக தடுத்து நிறுத்திவிடலாமே..?

புகை பிடிப்பவர்கள் அனைவருக்கும் நோய் வருமா என்று கேட்டால் என்ன சொல்ல முடியும்? வந்தால் வரலாம்.. வராமலும் போகலாம்..

வராமல் போனால் மகிழ்ச்சிதான்.. ஆனால் வந்துவிட்டால் தாங்குவது யார்..?

எந்தப் பழக்கமும் இல்லாதவர்களுக்கே நோய்கள் தொற்றி படாதபாடு படுகிறார்கள். இதில் நீங்களே ஏன் அதனுள் நுழைந்து இழுத்துக் கொள்கிறீர்கள் என்பதுதான் கேள்வி..

4 ரூபாய்தானே என்று யோசிக்காதீர்கள்.. இந்த 4 ரூபாய்க்காக பிற்காலத்தில் 400 ரூபாய் வட்டி கட்ட நேரிடும்..

வாழ்க வளமுடன்

லக்கிலுக் said...

ஒரு சிகரெட் நாலு ரூபாய் ஐம்பது காசு என்பது பெரிய அநியாயம்.

பெட்ரோல் விலையேற்றத்துக்கெல்லாம் பந்த் செய்யும் இடதுசாரிகள் இந்த அநியாயத்தை தட்டிக் கேட்காததை வன்மையாக கண்டிக்கிறேன்.

புகை பிடிப்பவர்கள் ஒரு அமைப்பாக இயங்க வேண்டும். முடிந்தால் ஒரு அரசியல் கட்சி தொடங்கி ஆட்சியையும் பிடிக்கலாம். அப்போது தான் இந்த அநியாயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

டி.அருள் எழிலன் said...

என்ன நக்கலா?

முகவை மைந்தன் said...

15 விழுக்காட்டினர் சிகரெட் பிடிப்பதால் இறப்பதாக சொன்னார்கள். நல்லவேளை, நான் இறப்பதற்கு 85 விழுக்காடு வாய்ப்பு குறைவு என தேற்றிக் கொண்டேன்.

கல்லூரிக் காலத்தில் 10 -15 சிகரெட்டுகள் பிடித்த எனக்கு விலையேற்றம் உணவின் அளவைத் தான் குறைத்தது. வேலை தேடிய காலத்தில் (திருவல்லிக்கேணியில் பணம் இல்லாதவனுக்கு என்னன்ன கொடுமை நேருமோ அத்தனையும்) சமாளித்து நாளுக்கு பத்து ரூபா தரும் நண்பனைப் பெற்றிருந்தேன்.

வேலை கிடைத்த உடன் சிகரெட்டின் அளவு 5 - 10 ஆனது. திருமணத்திற்குப் பின் 2-3 ஆனது. இதோ, போன வெள்ளியோடு அதுவும் இல்லையானது. ஆனாலும் நான் இன்னும் புகை பிடிப்பதை விட வில்லை. உறுதியாக இன்னுமொரு முறை நேரம் கிடைக்கும் பொழுது, நண்பர்களுடன் புகைப்பேன். என் பொன்னான தருணங்கள் பல புகையோடு கழித்திருக்கிறேன். நன்றி கொல்ல விரும்பவில்லை.

சிகரெட்டை விடுவது எளிது. அதற்கான நேரம் கிடைக்காத வகையில் உங்கள்ளை பர, பரப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.

//(மிகவும் ஸ்டைலான ஒரு சிகரெட் புகைக்கிற படம் வேண்டும் என்று தேடிய போது நண்பர் சே‍'யின் படத்தை விட சிறந்ததாய் வேறு என்ன படம் இருக்க முடியும்.)//

படத்தைப் பார்த்ததும் இதையே நானும் நினைத்தேன்.

லக்கிலுக் said...

தோழர் சே அவர்களின் படத்தை பார்த்ததுமே இன்னொரு தம்மு அடிக்க கை பரபரவென்றிருக்கிறது :-)

ஆடுமாடு said...

அருளு,

நானும் பதினைஞ்சு வருஷமா ராத்திரி பூரா இப்படி நினைப்பேன். காலையில கடையில போய்தான் வண்டி நிற்குது. என்ன பண்ணலாம்னு யோசிச்சா எனக்கும் சொல்லுங்க மக்கா.

கிங்க்ஸ் மயிலாப்பூர் ஏரியாவுல 4 ரூபாய்தான். இப்ப வாங்கி அடிச்சுட்டுதான் இதை அடிக்கிறேன்.

லக்கிலுக் said...

//கிங்க்ஸ் மயிலாப்பூர் ஏரியாவுல 4 ரூபாய்தான். இப்ப வாங்கி அடிச்சுட்டுதான் இதை அடிக்கிறேன்.//

மவுண்ட் ரோட்டிலும் இதே ரேட்டு தான் இந்த நிமிடம் வரைக்கும்!

ஆனாக்க பாருங்க ஒரு கிங்ஸ் + ஒரு மாணிக்சந்துக்கு 7 ரூபா என்பது பகல் கொள்ளையாக தானிருக்கு :-(

குருத்து said...

சிகரெட், தண்ணியடிக்கிற பழக்கம் எல்லாம் அறிவுரைகளில் விடுகிற சமாச்சாரமில்லை.

அப்படி விடுவதாக இருந்தால், ஒவ்வொருவரும் 1001 முறை விட்டு, விட்டு, பிறகு இரண்டாம் நாளில், நாலாம் நாளில், முன்பை விட கூடுதலாக அடிப்பவர்கள் தான்.

ஏதொவொரு கடுமையான அதிர்வில் தான், நான் அறிந்த வரையில், விட்டுத் தொலைத்திருக்கிறார்கள்.

நான் அமைப்பில் வேலை செய்ய தொடங்கிய பிறகு, விட்டவன். தோழர்கள் யாரும் அறிவுரை சொல்லியெல்லாம் நான் விடவில்லை. இயல்பாகவே நானே தவிர்த்துவிட்டேன்.

தண்ணியடித்த பொழுதெல்லாம், வாந்தி, வாந்தி சகலமும் வாந்தி. வேறு வழியில்லாமல் என் அண்ணன் விட்டான்.

என் நண்பன் ஒருவன், தண்ணியடிக்கிற நண்பர்கள் பலரும் வெவ்வேறு மாநிலங்களில் செட்டிலானார்கள். மீதம் இருந்தவர்கள் இடதுசாரி அமைப்பு தொடர்போடு இருந்தவர்கள். சூழல் மாறியது. அவனும் இப்பொழுது விட்டுவிட்டான்.

குடிப்ப‌ழ‌க்க‌ம் இருக்கிற‌வ‌ர்க‌ள் கெட்ட‌வ‌ர்க‌ள் என்ப‌தாக‌வெல்லாம் நினைக்கிறார்க‌ளா என்ன‌!

டி.அருள் எழிலன் said...

உண்மைத்தமிழன்.லக்கிலுக்,முகவை மைந்தன்,ஆடுமாடு,சாக்ரட்டீஸ் ஆகியோருக்கு நன்றி.சிக்ரெட் குடிப்பவர்களெல்லாம் கெட்டவர்கள் என்கிற எண்ணம் பெரும்பாலான மக்களின் பொதுப்புத்தியில் இருக்கிறது.ஆனால் இந்த பதிவிட்ட பிறகு கொஞ்சம் குறைந்திருக்கிறது ஆனால் முழுமையாக விடவில்லை.அடுத்த சிதம்பரம் பட்ஜெட்டுக்காவது பார்ப்போம்.

ஏகலைவன் said...

தோழர் அருள் எழிலன்,

உங்களுடைய வேறு பல முக்கியமான கட்டுரைகளில் குறுக்கிடலாம் என்று முயன்று வேறு வழியில்லாமல் இக்கடுரைக்கு பின்னூட்டமிடும் படியான ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுதான் மிகவும் நெருடலாக இருக்கிறது.

இருப்பினும் சிகரெட் பழக்கத்தை விடுவது பற்றி பேசும் பொழுதெல்லாம், அந்தப் பழக்கம் இருப்பவர்கள் இத்தகைய குற்றச்சாட்டுகளை விளையாட்டாக எடுத்துக் கொண்டு பேசுவது வழக்கமாகிவிட்டது. உதாரணம் தோழர் லக்கிலுக்கு அவர்கள்.

இதனைச் சற்று சீரியசான மேட்டராகக் கொண்டு பார்ப்போமானால், நாம் இந்தப் பழக்கத்தால் நமது வாழ்நாளை ரொம்ம எளிமையாக இழந்துகொண்டிருக்கிறோம் என்றுதான் அர்த்தம். உங்களைப் போன்றவர்களின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பு இச்சமூகத்துக்கு பெரிய அளவுக்குத் தேவைப்படுகிறது தோழர். மிச்சமிருக்கின்ற சொற்ப வாழ்நாளைக் கொண்டு நாம் எதையாவது உருப்படியாக செய்துமுடிக்க வேண்டியுள்ளது.

ஆனால் நம் கையில் புகைந்துகொண்டிருக்கும் சிகரட், நமது மொத்த வாழ்நாளையும் அர்த்தமற்றதாக ஆக்கிவிடக்கூடியது. அது வெளியிடும் புகையினைப் போன்றதொரு தோற்றத்தில் நாம் வாழ்ந்த வாழ்க்கையும், அது பதித்த சுவடுகளும் மெல்ல கடந்து, மறைந்து விடக்கூடியதாக மாறிவிடும்.

சமூகத்தை நேசிப்பவர்கள், அதற்கான தமது வாழ்க்கையினை ஒருபோதும் குறைத்து மதிப்பிடமாட்டார்கள். தனது வாழ்க்கையினை முக்கியமாகக் கருதுபவர்களால் இந்த சிகரெட் பழக்கத்தை ஒருபோதும் தொடர முடியாது என்பது எனது தாழ்மையான கருத்து தோழர்களே!

ஏகலைவன்.

டி.அருள் எழிலன் said...

ஏகலைவன் அக்கறையோடு பதிந்தமைக்கு நன்றீ.உண்மையில் இந்த பழக்கத்தை நான் விட நினைத்து தொடர்ந்து அதோடு போராடிக் கொண்டிருக்கிறேன்.உடல் பிரச்சனைகள் வரும் போதெல்லாம் அது குறித்து அலட்டாமல் இருப்பதும்.பணம் பற்றி பிரச்சனை பற்றி வரும் போது புலம்புவதும்.கொஞ்சம் அபத்தமாகவே இருக்கிறது.நானும் பார்க்கிறேன்.

லக்கிலுக் said...

அண்ணே!

சிகரெட்டை விட மாற்று சிகரெட் ரெடி என்று இந்த இணையம் சொல்கிறது.

http://electroniccigarette.in/

ஆனால் அதற்கும் செலவழிக்கணுமாம் :-(

லக்கிலுக் said...

அண்ணா!

அடுத்த ரெண்டு பதிவுகள் எங்கே காணோம்?

ஒன்று பெண்குழந்தைகள் பற்றியது, இன்னொன்று நெய்வேலி குறும்படங்கள் பற்றியது!

டி.அருள் எழிலன் said...

லக்கி அதை எடுத்து விட்டேன் ரொம்ப தனிப்பட்ட விஷயங்களை அதிக்மா எழுதின மாதிரி இருந்தது எடுத்துட்டேன்.

Unknown said...

அருளண்ணே இங்க இலங்கையில மகிந்த சிந்தனைப்படி சிகரெட் 16ரூவா ஆனாலும் யாரும் விடல அடிக்கிறத குறைத்திருங்காங்கள் அவ்வளவுதான் மற்றது எங்களுக்கு மொத்த ஆயுளே எவ்வளவு என்று தெரியாமா இண்டைக்கா நாளைக்கா எண்டு இருக்கேக்க என்னத்துக்கு தம் அடிக்காம எண்டு நான் சிகரெட்டை பிரிச்சு மேயிரநான் சே படம் போட்டீங்க பிடிச்சிருக்கு

எஸ்.சத்யன்

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

Namashkar.
al ready i know u from a.v.
Then i am also in same position.
nice article.
it my friend, how can i leave him?