கைது, அல்லது கடத்தல்,
இலங்கையில் போர் நிறுத்தம் கோரிய தமிழக போராட்டங்களை முழு அர்ப்பணிப்போடு நடத்தியவர்களில் குறிப்பிடத் தக்கவர் தோழர் அங்கயர்கன்னி. பெருஞ்சித்திரனாரின் பேத்தியான கயல் என்னும் அங்கயர்கன்னி அவரது உறவினரான திருமலை என்பருடன் முறைப்பட
சுற்றுலா விசா பெற்று இலங்கை சென்றுள்ளார். அப்படி சென்றவர்களை இலங்கை இராணுவம் கடத்திச் சென்று மறைத்து வைத்துள்ளதாகத் தெரிகிறது. அவர்கள் குறித்து எவ்வித தகவல்களையும் பெற்றுக் கொள்ள முடியவில்லை. தோழர் கயல் விடுதலைச் செய்யப்படா விட்டால் வழக்கறிஞர்களும் பத்திரிகையாளர்களும் போராட்டங்களை முன்னெடுக்கும் முயர்ச்சிகளை நண்பர்கள் துவங்கியுள்ளனர். போர் நிறுத்தம் கோரிய தமிழக போராட்டங்களில் கயலின் பங்கு அளப்பரியது. தோழர் முத்துக்குமாரின் உடல் கிடத்தப்பட்டிருந்த கொளத்தூரில் அந்த மூன்று நாட்களும் அவர் வழக்கறிஞர்களோடு இணைந்து நின்று முத்துக்குமாரின் கனவுகளுக்காக போராடினார். அவரது கைது நாம் அனைவருக்கும் விடப்பட்ட சவால். ஆவன செய்வோம்.
பிரகீத் எகனெலியகொட நீங்களும் கேளுங்கள்.
இலங்கையில் போர் முடிவுக்கு வந்து விட்டது. ஆனால் கொலைகள்தான் நின்ற பாடில்லை. கோத்தபய ராஜபட்சேவின் கண்காணிப்பின் இயங்குவதாகச் சொல்லப்படும் சட்ட விரோத ஆயுதக் குழுக்கள் இன்னமும் மக்களையும் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க விரும்புவோரையும் கொன்றொழித்து வருகிறார்கள். இலங்கை அரசின் போர் முடிவுக்கு வந்த பின்னர் ஊடகங்கள் அமைதியாகிப் போயின. அல்லது அரசுக்கு ஆதரவாக மட்டுமே எழுத வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டு வருகிற நிலையில் இலங்கையில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திரம் கோரி நோம் சோம்ஸ்கி, அருந்ததி ராய், கென் லோச், அன்ரனி லொவென்ஸ்ரீன், தாரிக் அலி, ஆகியோர் ஒப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையை எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு, இலங்கையில் ஜனநாயகத்திற்கான அமைப்பு, புலம்பெயர் ஊடகவியலாளர்களின் வலையமைப்பு ஆகியன சர்வதேச ரீதியாக கவனத்துக்குட்படுத்தும்படி கோரியுள்ளன.
அரசியல் கார்டூனிஸ்டான பிரகீத் எகனெலியகொட காணாமல் போய் ஒரு வருடமாகும் நிலையில் இன்று வரை அவர் குறித்த மௌனத்தை மட்டுமே பதிலாகத் தருகிறார்கள் இலங்கை ஆட்சியாளர்கள். பிரகதீக் கட்டத்தப்பட்டு 2010 ஜனவரி 24ஆம் தேதியுடன் ஒரு வருடம் நிறைவடையப் போகிறது. இந்நிலையில் சர்வதேச அளவிலான கலைஞர்களை அழைத்து காலி இலக்கிய சர்வதேசத் திருவிழா ஒன்று கொழும்பில் நடத்தப்படும் நிலையில் காணாமல் போன பிரகதீக் குறித்த கேள்வியை நாம் எழுப்ப வேண்டும்.
இதில் நம் மரியாதைக்குரியவர்கள் கையொப்பம் மிட்டிருக்கிறார்கள். நீங்களும் இடுங்கள்... பிரகீத்திற்காக,
நோம் சோம்ஸ்கி அருந்ததி ராய் கென் லோச் அன்ரனி லொவன்;ரின் தாரிக் அலி சேரன் டேவ் ரம்ரன் .கையொப்பம் இட - http://en.rsf.org/sri-lanka-galle-literary-festival-appeal-19-01-2011,39355.html
இலங்கை - கைது கடத்தல் காணாமல் போதல்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment