சீனாவும் பாகிஸ்தானும் இந்தியாவின் பகை நாடுகள். ஆனால் இலங்கை? சாயங்கால வேளையில் காஸ்மோபாலிட்டன் கிளப்புக்குப் போய் மது அருந்திய படி சீட்டாடுவார்கள் இல்லையா? அப்படி ஒரு கிளப்தான் இலங்கைக்கு இந்தியா.அதனால்தான் இலங்கை பாகிஸ்தான் சீனா என இந்தியாவின் இடது வலது எல்லைப்புற நாடுகளை வைத்து நம்மிடம் சீட்டாடிக் கொண்டிருக்கிறது. இந்த சீட்டாட்டத்தில் மொத்தமாக அழிந்து போகும் ஆபத்தில் சிக்கியிருப்பவர்கள் ஈழத்தமிழர்கள். தமிழக மீனவர்களும் கூட,
இந்தியாவின் அந்தப்புறத்தில் நடைபெறும் இம்மாதிரி விளையாட்டுக்கள் ஈழத்தமிழரின் உயிரையும் இந்தியத் தமிழரின் உயிர்களையும் சேர்த்தே குடித்துக் கொண்டிருக்கிறது. 1980_ பதுகளில் கொழுந்து விட்டெறிந்த தமிழ் மக்களுக்கு எதிரான இனக்கலவரத்தின் விளைவாய் இந்தியா இலங்கையில் தலையிட்ட போது இந்தியாவின் நண்பனாக இருந்தது விடுதலைப்புலிகள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் இலங்கை போராளிகளுக்கு ராணுவப் பயிர்ச்சியும் ஆயுதங்களும் வழங்கப்பட்டது. வெருண்டு போன அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தானா தந்திரமாக இலங்கை இனப்பிரச்சனையில் இந்தியாவைக் கோர்த்து விட்டார். 1987&ல் உருவான் இந்திய இலங்கை ஒப்பந்தம் இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக பிரச்சனையை தீராச் சிக்கலுக்குள் ஆழ்த்தியது. இன்று ராஜீவ் கொலைக்குப் பிறகு போராளிகள் பகையாளிகளாகவும் இலங்கை ராணுவத்தினர் நண்பர்களாகவும் இந்தியாவுக்கு மாறிப்போனார்கள்.
இப்போது 800 இலங்கை ராணுவத்தினரை ராணுவ விருந்தினர்களாக இந்தியாவுக்கு அழைத்து அவர்களுக்கு பல்வேறு ராணுவ பயிர்ச்சிகளை அளிக்கிறார்கள். என்று தெஹல்கா இதழ் கட்டுரை வெளியிட்டிருக்கிறது. மஹாராஸ்டிரா.டேராடூன்,பூனே,மிஸோராம்,குஜராத்தின் வடோதரா போன்ற வடக்கு வடகிழக்கு மாநிலங்களில் இந்த பயிர்ச்சி நடைபெறுவதாக தெஹல்கா சுட்டிக்காட்டியிருக்கிறது. இம்மாதிரி பயிர்ச்சிகளுக்கு வரும் ராணுவ வீரர்களுக்காக இலங்கை அரசிடம் இருந்து எவ்விதமான பிரதிபலனும் இந்தியா பார்ப்பதில்லை மாறாக பயிர்ச்சிக்கு வருகிற சிங்கள வீரர்களுக்கு படிகள் கொடுத்து உறசாகப்படுத்துகிறது இந்தியா.‘‘இந்தியா எங்களுக்கு செய்வது மிக மிகப் பெரிய உதவி இது மட்டும்தான் எங்களை உற்சாகப்படுத்தும்’’என்று இலங்கை ராணுவத் தளபதி சரத்பொன்சேகா சொல்லும் அளவுக்கு இந்தியாவின் ஆதரவு தொடருகிறதாம்.என்றெல்லாம் விரிகிறது அந்தக் அந்தக் கட்டுரை.
ஏன் இந்தியா இலங்கைக்கு ஆயுதங்கள் கொடுக்க வேண்டும். என்ன காரணத்திறாக இலங்கை ராணுவத்தினர் இந்தியாவில் பயிர்ச்சி பெற வேண்டும் என்றால்.எளிமையான ஒரு காரணத்தைத் தவிற வேறு என்ன இருக்க முடியும். இலங்கைக்கு சுற்றியுள்ள எந்த நாடுகளுடனும் சச்சரவும் இல்லை. அண்டை நாடுகள் தாக்கும் ஆபத்தும் இல்லை. ஆனால் உள்நாட்டுக்குள் எழுந்த பகை பெருந்தீயாய் எரியத் துவங்கிய பிறகு இலங்கை அரசின் எதிரிகளாக மாரிப்போனதென்னவோ தமிழ் மக்கள்தான். எப்போதுமே இன்னொரு நாட்டின் உதவி இல்லாமல் இலங்கை அரசால் விடுதலைப்புலிகளை வெல்ல முடியாது. இதை தெரிந்து வைத்திருக்கும் இலங்கை தொடர்ந்து ஏதோ ஒரு நாட்டை தங்களின் உள்நாட்டுப் போருக்கு உதவியாக பயன் படுத்தியே வந்திருக்கிறது. 1987 இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்குப் பிறகு இந்தியாவிடம் இருந்து பெருமளவு ராணுவ உதவிகளைப் பெற்றது இலங்கை. ராஜீவ் கொலைக்குப் பிறகு இலங்கை பிரச்சனையில் இருந்து இந்தியா ஒதுங்க. நார்வேயின் தலைமையில் ஐய்ரோப்பிய நாடுகள் இலங்கையில் சமரச முயர்ச்சிகளைத் துவங்க அது எல்லா வகையிலும் இலங்கை அரசுக்கு நெருக்கடியாகவும் விடுதலைப்புலிகளுக்கு சாதகமாகவும் இருந்தது. நான்காண்டுகால சமாதான பேச்சுவார்த்தை முறிந்து போக நார்வே உடபட மேற்குலக நாடுகள் இலங்கை பிரச்சனையில் இருந்து வெளியேறியது. உடனே இலங்கை பாகிஸ்தானிடம் போய் ஆயுதம் வாங்கியது. அதற்கு இந்தியா பெரிதாக அலட்டிக் கொள்ள வில்லை. ஒரு ரியாக்கசனும் இல்லையே என யோசித்த இலங்கை அதிரடியாக சீனாவிடம் போய் ஆயுதம் வாங்கியதோடு சீன இலங்கை ராணுவ கூட்டுப் பயிர்ச்சியை ரகசியமாக இலங்கை கடற் பிராந்தியத்தியத்தில் நடத்தியது.இதை ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட சீனா இலங்கையில் இருந்த படி இந்தியாவின் தென் பகுதிகளை தீவீரமாக உளவு பார்த்ததாம்.குறிப்பாக கல்பாக்கம் அணு மின் நிலையம் கூடன்குளம் அணு உலையும் சீனா வின் கண்காணிப்புக்குள் இன்றும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில்தான் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாரயணன் ‘‘இலங்கைக்கு இந்தியா ஆயுதங்களை விற்காது.அதே சமயம் இலங்கை பாகிஸ்தானிடமும் சீனாவிடமும் ஆயுதங்கள் வாங்கக் கூடாது’’ என்று பகிரங்கமாகவே இலங்கையை எச்சரித்தார். இலங்கை எதிர் பார்த்ததும் இதைத்தான் சீனாவும் பாகிஸ்தானும் கொடுக்கும் ஆயுதங்களை விட புவியியல் ரீதியில் இந்தியா கொடுக்கும் ராணுவ உதவிகளே மேலானது என்பதை தெரிந்து வைத்திருந்த இலங்கை இனப்பிரச்சனையில் இந்தியா தலையிடத் துவங்கி விட்டதை சந்தோசமாக வரவேற்கிறது.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெறும் யுத்தத்தில் இந்தியா தலையிட வேண்டும் என்ற கோரிக்கை புலிகளின் ஆதரவாளர்களாலேயே முன் வைக்கப்பட்டது. ஆனால் எப்படி இந்தியா தலையிட வேண்டும். இலங்கை அரசுக்கு ஆதரவாகவா? அல்லது கொல்லப்படும் தமிழ் மக்களுக்கு ஆதரவாகவா?என்றால் அதற்கும் நாரயணன் பதில் சொல்லி விட்டார். ‘‘புலிகளிடம் இருக்கும் விமானப்படையும் கடற்படையும் இந்தியாவுக்கு அச்சுறுத்தலானவை’’ என்று இந்தியா யாருக்கு ஆதரவாக செயல்படப் போகிறது என்பதையும் தெளிவு படுத்தி விட்டார்.எழுதப்படாத ரகசிய ஒப்பந்தத்தை செயல் படுத்த ரகசியப் பயணங்களை இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கைக்கு மேற்கொள்கிறார்களாம்.அப்படி மேற்கொள்கிற பயணங்கள் இலங்கையில் ராஜபக்ஷே அரசில் அமைச்சர்களாக இருப்பவர்களுக்குக் கூட தெரியாமல் மறைக்கப்பட்டு மிகவும் ரகசியமாக வைக்கப்படுகிறது. ரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டு இந்தியாவின் தாராள ராணுவ உதவியுடன் கிழக்கை மீட்டெடுத்த இலங்கை அடுத்து குறிவைத்திருப்பது. வன்னியை ஆனால் அத்தனை எளிதில் வன்னி இலங்கை ராணுவத்திடம் விழும் என்பதை இலங்கை ராணுவமே நம்பத்தயாராக இல்லை.யுத்தம் என்றால் இடங்களை பிடிப்பது நீண்ட நாட்கள் அதை பாதுகாக்க முடியாமல் கைவிடுவதும் சகஜமான ஒன்று. ஆனால் வன்னி அப்படியல்ல அது புலிகளின் இதயம். அந்த இதயத்தை குறிவைக்கத்தான் இப்போது இந்தியாவில் பயிர்ச்சிகள் நடக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.
நிலைமைகள் கைமீறிப் போவதை உணார்ந்த புலிகளோ இந்தியாவிடம் நல்லெண்ணம் வளர்க்கவே விரும்புகிறார்கள். ஆகஸ்டில் நடைபெறும் சார்க் மாநாட்டை முன்னிட்டு புலிகள் ஒரு தலைப் பட்சமாக யுத்த நிறுத்தத்தை அறிவித்திருக்கிறார்கள். ஆனால் அடுத்த சில மணி நேரங்களிலேயே புலிகளின் போர் நிறுத்தத்தை நிராகரித்த அரசு கிழக்கை மீட்டது போல வடக்கை மீட்கும் போர் தொடர்ந்து நடைபெறும் என்று அறிவித்திருக்கிறது.புலிகள் இந்தியாவுக்குக் கொடுக்கும் சைகைகள் ஒரு தலைப் பட்சமானவை.ஆனால் இலங்கையும் வேண்டாம் புலிகளும் வேண்டாம் என்பதுதான் இந்தியாவின் தீர்மானமான முடிவு. ஆனால் மீண்டும் மீண்டும் எங்களை தவிர்த்து விட்டு நீங்கள் ஆசிய ஹீரோ கனவை ஒரு நாளும் அடைய முடியாது என இலங்கை அரசு செய்கிற ஆயுத வியாபாரம்தான் இந்தியாவை இலங்கை அரசின் பக்கம் சாய வைத்திருக்கிறது. ‘‘இது மிக மோசமான இன்னொரு அனுபவத்தை இந்தியாவுக்குக் கொடுத்து விடக் கூடாது. ஆகவே சம அளவில் புலிகளிடம் இருந்தும் இலங்கை அரசிடம் இருந்து இந்தியா ஒதுங்கி இருக்க வேண்டும். இலங்கை அரசுக்கு எந்த விதமான ராணுவ உதவிகளையும் செய்யக் கூடாது.இலங்கையில் தமிழ் மக்களை பாதுகாக்கிற பொறுப்புதான் இந்தியாவுக்கு இருக்கிறது.அதைச் செய்யாமல் இலங்கை அரசுக்கு ஆயுதம் கொடுக்கிறது இந்தியா அந்த ஆயுதங்களைக் கொண்டுதான் தினம் தோறும் இலங்கை தமிழ் மக்களை குண்டு வீசிக் கொல்கிறது. இதை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும்’’என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
இந்நிலையில் டில்லியில் பிரதமரைச் சந்தித்த கருணாநிதி சார்க் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் மீனவர் பிரச்சனையை எழுப்புவதாக உறுதி கூறியிருப்பதாக சொல்லியிருக்கிறார். ஏற்கனவே பல மாநாடுகளிலும் மீனவர் பிரச்சனை விவாதிக்கப்பட்டதுதான்.ஆனாலும் 300 பேர் வரை இது வரை கொல்லப்பட்டிருக்கிறார்கள். கடலின் மீதான் மீனவர் உரிமை முற்றிலுமாக இலங்கை அரசால் பறிக்கப்பட்டிருக்கிறது.ராமேஸ்வரத்திலிருந்து சென்ற மீனவ பிரதிநிதிகளை சந்தித்த இலங்கை அமைச்சர்.‘‘மீனவர்களை கொல்வது நாங்களல்ல விடுதலைப் புலிகள்தான்.என்று பழியை புலிகள் மீது போட்டு அனுப்பியிருக்கிறார்.இனிமேலாவது இத்தகைய மரணங்கள் தடுக்கப்பட வேண்டும் அதற்கு இந்தியா இலங்கைக்கு ஆயுதங்கள் கொடுத்து ஊக்குவிக்கக் கூடாது மாறாக அதை கண்டிக்க வேண்டும் கறாரான அணுகுமுறையை கையாள வேண்டும்
இலங்கை கொலை செயவது இந்திய ஆயுதங்களால்.....
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
//ஆகவே சம அளவில் புலிகளிடம் இருந்தும் இலங்கை அரசிடம் இருந்து இந்தியா ஒதுங்கி இருக்க வேண்டும்.//
சரியான கருத்து.
இந்தியா உள்ளே நுழைந்து குழப்பம் விளைவித்து தானும் குழம்பி அமைதிப்படை காலத்தில் வாங்கியது மாதிரி திரும்பவும் உதை வாங்கக்கூடாது :-)
இதெல்லாம் படிக்கும் போது கடுப்பத்தான் இருக்கு.. நல்ல கருத்து தல
அன்புள்ள ஆதிரை,
உங்களுடைய கட்டுரைக்கு நன்றி. ஈழத்தமிழர்களின் போராட்டத்தை இந்தியா நசுக்க நினைக்கிறது. கருணாநிதி ஜெயலலிதா போன்றவர்கள் கூட ஈழத்தமிழர்கள் விடயத்தில் பந்தாடுகிறார்கள். அவர்களிடமும் தத்தமது அரசியல் தந்திரங்களே இருக்கின்றன. அவர்களுக்கும் மன்மோகன்சிங்கிற்கும் நாராயணனுக்கும் மகிந்த ராஷபக்ஷவிற்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. தமிழீழ விடுதலைப்புலிகளை ஓடுக்குவது தமிழர்களை ஒடுக்குவதுதான்.ஈழம் அமைவதைஇலங்கை போல இந்தியாவும் விரும்பவில்லை எனவே போராட்டம் நசுக்கப்படுவதை இந்தியா முன்னின்று நடத்துகிறது. இன்று தமிழர்களை கொல்லும் ஆயுதங்களில் இந்தியாவினுடையதும் அடங்குகின்றது. இது வேதனையல்ல? பாடம். இந்த தெளிவு எங்களை மரணம் வரை போராட வைக்கிறது. நாங்கள் கருணாநிதியின் கவிதைகளின் பொழுதும் ஜெயலலிதாவின் அறிக்கைகளின் பொழுதும் மன்மோகன்சிங்கின் உரைகளின் பொழுதும் இந்த தெளிவுடன் இருக்கிறோம். இலங்கை அரசுடன் மட்டும் ஈழத்தமிழர்கள் போராடவில்லை இந்தியா அமெரிக்கா என்று எல்லா அதிகார நாடுகளுடனும் போராடுகிறோம். இலங்கை அரசின் வடக்கை விழுங்கும் நடவடிக்கையில் இந்தியாவும் பங்கு செலுத்துகிறது. வன்னியில் இன்று நிறைந்திருக்கின்ற போர் அவலததில் இந்தியாவும் ரசனை செய்கிறது. இதில் எமக்கு தெளிவு இருக்கிறது.
உங்களை போன்றவர்கள் தெளிவுடன் பேசுவது எமக்கு ஆறுதல் தருகிறது.
அதற்கு நன்றி துயரும் மக்கள் சார்பாக.
மேலும் எனது பதிவில் வந்து இந்தியா மற்றும் உலக நாடுகள் ஈழப்பிரச்சினையில் ஈழத்தமிழர் விடயத்தில் ஊற்றுகின்ற எண்ணையினையும் நெருப்பையும் பற்றிய எனது உணர்வுகளை படியுங்கள்.
மிக்க அன்புடன்
தீபச்செல்வன்
01.http://deebam.blogspot.com/2008/01/blog-post.html
02.http://deebam.blogspot.com/2008/04/blog-post_21.html
எனது இடுகைக்கு நீங்கள் இட்ட பின்னூட்டத்தை நான் இன்றுதான் பார்த்தேன். நீங்கள் சொல்கிற கருத்து உண்மைதான். வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையிலேயே ஈழபிரச்சனையை ஆசியாவின் அத்தனை நாடுகளும்.அணுகுகிறது. அமெரிக்காவுக்கு காவடி தூக்குவதுதான் இன்றூ இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை. நேருகாலத்திய அணிசேராக் கொள்கையை காற்றில் பரக்க விட்டவர்கள் அமெரிக்க ஆதரவுக் கொள்கையை அயலுறவுக் கொள்கையாக கொண்டிருப்பதன் அபத்தம் புரிக்றது.உலகம் முழுக்க இரு அணிகளாக நாடுகள்பிரியும் சூழல் இன்றூ உருவாகி வருவதை இன்றூ அவதானிக்க முடியும். சோஷலிச,மற்றும் இஸ்லாமிய கருத்தியலால் இன்றூ உலகம் இரண்டு துருவங்களாக பிரிந்து கூடிவருகிறது. ஈரானும்,சைனாவும்,ஒரு பக்கமாக வெனின்சூலா,லத்தீன் அமெரிக்க நாடுகள் ஒரு பக்கமாகவும் திரட்சியாக உருவாகி வருகிறது.இதில் வேதனை என்ன வென்றால் உலகெங்கிலும் நடக்கும் இன விடுதலைப் போராட்டங்களை ஆதரிக்கும் போக்கை இம்மாடதிரி எதிர் அரசியலை முன் வைக்கும் நாடுகள் ஆதரித்து வந்தது.(இந்தியா பாலஸ்தீனத்தை ஆதரித்தது) இன்றூ பாலஸ்தீனத்துக்கு எதிரியான இஸ்ரேலுக்கு உளவு ஏவுகணையை ஏவுவது இந்தியாதான்.ஆக அமெரிக்க ஆதரவு நாடுகளும் இன விடுதலைப் போராட்டங்களை மறுக்கிறது, அமெரிக்காவின் எதிர் நாடுகளான சீனா,ஈரான் போன்ற நாடுகளும் இன் விடுதலைப் போராட்டங்களை எர்த்க்கின்றன.அமெரிக்காவின் எதிர் நாடுகளும் இனவிடுதலைப் போராட்டங்களை ஒடுக்குகின்றன. அப்படி ஒடுக்குவதன் மூதல் பிற நாட்டி கேந்திரங்களை கண்காணிக்கும் ராணுவ அரசியலை விரிவு படுட்துகிறார்கள்....விரிவாக எழுத நினைக்கிறேன் நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்.உங்கள் கவிதை நன்றாக இருந்தது. நன்றீ தொடர்ந்து எழுதுங்கள்.
என்னைசுட
எனது வரியில் துவக்குவாங்கி
எழுப்பட்ட சமாதிகளில்
வழிகிற உயிரை
நக்கிசுவைக்க
காத்திருக்கிறது
புறாக்கள்
Post a Comment