உள்ளுக்குள்ளேயே வெடிக்கும் குண்டு....



உலகின் தற்போதைய யுத்தங்கள் எண்ணெய்க்கானது.எதிர்கால யுத்தம் அணுசக்திக்கானது என்கிறர்கள் அறிஞர்கள்.அமெரிக்கா ஈராக்கில் நடத்தி வரும் போரும் சரி அரபு நாடுகள் அமெரிக்காவிற்கு எதிராக அணிதிரள நினைப்பதும் சரி எண்ணெய் அரசியல்தான்.எதிர்காலத்தில் எரிவாய்வுக்கான,அணுசக்திக்கான போர் துவங்கப்பட்டால் அதை துவக்கிவைபது அமெரிக்காவாகத்தான் இருக்கும்.அப்போது இந்தியா யார் பக்கம் இருக்கும்...தன் ராணுவ் சிப்பாய்களை அமெரிக்காவின் பக்கம் நிறுத்துமா? என்பதான கேள்விகளுக்கு பதில்தான் அணுசக்தி ஒப்பந்தத்தில் ஒளிந்திருக்கிறது.

ஓட்டு மொத்த உலகையும் குறிப்பாக தென் ஆசியாவையும் பதட்டத்திற்குள்ளாக்கியிருக்கும் அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக தலைநகர் டில்லியில் நடந்தேறும் நாடகத்தின் க்ளைமாக்ஸை பார்க்க ஆர்வமாக இருக்கிறது பல நாடுகளும்.
உலகெங்கிலும் தன் அடியாட்களை உருவாக்கும் அமெரிக்காவிற்கு ஆசியாவில் அப்படி ஒரு சண்டியர் கிடைக்கவில்லை.புவியியல் ரீதியிலும் அரசியல் ரீதியிலும் அதற்கு தோதாக வந்து அமெரிக்காவிடம் சிக்கிய நாடுதான் இந்தியா.ஆசியாவின் இந்த புதிய அடியாள் மேல் அமெரிக்காவுக்கு திடீர் பாசம்.அதனால்தான் பாசக்கார தம்பியை வளைக்க அணு சக்தி ஒப்பந்த வடிவில் வலை வீசுகிறது அமெரிக்கா.தம்பிக்கு மட்டும் தனிப்பெரும்பான்மை இருந்திருந்தால் இன்று இந்தியா அமெரிக்காவின் ஆசிய அடியாளாக மாறியிருக்கும்.இவளவு தாமதிக்க வேண்டியதில்லை.திமிரும் தம்பியையும் அடக்க முடியாமல் ஆட்சியையும் கலைக்க முடியாமல் தடுமாறுகிறார்கள் இடது சாரிகள்.

அப்படி என்னதான் இருக்கிறது இந்த அணுசக்தி ஒப்பந்தத்தில்?
இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட வேண்டும் என ஏன் அமெரிக்கா நிர்பந்திக்கிறது எனப் பார்த்தால் இடது சாரிகளின் புலம்பலில் உள்ள நியாயம் புரியும்.அணுசக்தி மூலம் இந்தியாவின் எரிவாயு தேவையை பூர்த்தி செய்வதும்.மின்சாரத் தேவையை பூர்த்தி செய்வதும்தான் அமெரிக்காவின் ஆசை.பொதுவாக அணு ஆயுதச் சோதனைகளை நடத்தும் நாடுகளிடம் அமெரிக்காவின் சர்வதேச அணு சக்தி முகமை ஒப்பந்தம் போடச் ªசொல்லி இப்படி நிர்பந்தமாக நடந்து கொள்வதில்லை.1998&ல் வாஜ்பாய் ஆட்சியில் பொக்கரானில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்ட பிறகு இந்தியாவின் மீது பல பொருளாதாரத் தடைகளை கொண்டு வந்தது அமெரிக்கா.ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் அவைகளையும் தளர்த்தி அணு சக்தி ஒப்பந்தத்தில் உள்ள விதிகளையும் தளர்த்தி இந்தியாவுக்கு மட்டும் விதிவிலக்கு கொடுத்து அணு சக்தி ஒப்பந்தத்துக்குள் கொண்டு வர நினைக்கிறது அமெரிககா.இத்தனைக்கும் அணு ஆயுத சோதனைச் தடைச் சட்டத்தில் கூட இந்தியா இதுவரை கெயெழுத்திடவில்லை.ஆனாலும் பரவாயில்லை இருக்கவே இருக்கிறது அணு சக்தி ஒப்பந்தம் இந்த ஒன்றில் நீங்கள் கையெழுத்திடுவதே எல்லாவாற்றிர்க்கும் சேர்த்துத்தான் என்கிறது அமரிக்கா.‘‘இந்தியா உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் நாடு.எதிர்காலத்தில் தன் வளர்ச்சிக்கு அது பெட்ரோலிய தேவைகளை மட்டுமே நம்பியிருக்காமல் அணுசக்தியை தன் வளர்ச்சிக்கு உரமாக்கி வளரவேண்டும்.அதிகரித்து வரும் மின்தேவைகளையும் எரிவாய்வு தேவையையும் ஈடு கட்ட இப்போதுள்ள உற்பத்தி இந்தியாவுக்கு போதுமானதாக இல்லை ஆகவேதான் அதன் வளார்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்த அணு சக்தி ஒப்பந்தம்’’என்கிறது அமெரிக்கா.

ஆனால் இடது சாரிகளும் இந்தியா விஞ்ஞானிகளுமோ இது தூரோகத்தனமான ஒப்பந்தம்.ஒட்டு மொத்தமாக நாட்டின் இறையாண்மையை அமெரிக்காவிற்கு அடகு வைக்கிற செயல் இதை அனுமதிக்கவே மாட்டோம் என்று தடை போடுகிறார்கள்.பேச்சு வார்த்தைகள் நீண்டு கொண்டே இருக்கிறது சமரச முயர்ச்சிகள் தோல்வியை தழுவுகிறது.பிரதமர் மன்மோகன்சிங்கோ ‘‘அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாவிட்டால் நான் பதவியை விட்டுப்போகிறேன் நிலமையை நீங்கள் சமாளித்துக் கொள்ளுங்கள்’’ என்கிறார்.இடது சாரிகளோ ‘‘இப்படி ஒரு ஒப்பந்தம் போடுவதற்கு நீங்கள் வீட்டுக்குப் போவதே மேல் நாங்களே உங்களை வழியனுப்பி வைக்கிறோம்’’என்கிறார்கள் ஆக மொத்தத்தில் திண்ணை எப்போது கலியாகும் என பிஜேபி காத்திருக்கிறது.

இன்று உலகை ஆட்டிப்படைக்கும் ஒரு சக்தியாக உருவாகியிருப்பது பெட்ரோல்தான்.அள்ளக் அள்ளக் குறையாத அமுத சுரபியல்ல பெட்ரோல் அது வெகு வேகமாக குறைந்து கொண்டு வருகிறது.இன்று எப்படி பெட்ரோல் சர்வத்தையும் தீர்மனிக்கும் சக்தியாக இருக்கிறதோ அப்படி எதிர்காலத்தில் அணுசக்தி இருக்கும்.அப்படி ஒரு சூழல் ஏற்படும் போது இன்று எப்படி பெட்ரோலுக்காக அரபு நாடுகளை உலக நாடுகள் சார்ந்திருக்கிறதோ அப்படி அணு சக்திக்காக உலக நாடுகள் அமெரிக்காவைச் சார்ந்திருக்க வேண்டும் என அமெரிக்கா நினைக்கிறது.
நினைத்த மாதிரி எல்லாம் இப்போது அமெரிக்காவுக்கு கைகூடி வரவில்லை.ஏற்கனவே 25 நாடுகளுடன் இந்த ஒப்பந்தத்தை செய்து கொண்ட அமெரிக்கா ஆசியாவில் அதற்காக தேர்ந்தெடுத்ததுதான் இந்தியா.ஒப்பந்தம் போடப்பட்ட நாடுகள் பலவும் விழிபிதுங்கி இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறத் துடிப்பது ஒரு பக்கம் இன்னொரு பக்கம் பல எண்ணைய் வழ நாடுகள் டாலரில் இது அவரை செய்து வந்த சர்வதேச வணிகத்தை யூரோவிலும் செய்யத் துவங்கியிருப்பது அமெரிககவுக்கு இன்னொரு பேரிடியாக இறங்கியுள்ளது.டாலரின் மதிப்பு அதல பாதாளம் நோக்கி சென்று கொண்டிருக்கிறது.இந்நிலையில்தான் ஆசியாவில் மற்றெல்லா நாடுகளை விடவும் இந்தியாவை அமெரிகக தனது ராணுவ நலன்களுக்கு தோதான நண்பனாக பார்க்கிறது.

அணு சக்தியின் பயனை அறியாத ஒரு நாட்டுக்கு அமெரிக்காவின் இந்த ஒப்பந்தம் பயன்படக்கூடும் எழுபதுகளிலேயே அணு வல்லமையை பெற்றுள்ள இந்தியா எதற்காக அணு சக்தி விஷயத்தில் அமெரிக்காவை சார்ந்திருக்க வேண்டும்.இந்த அணு சகதி ஒப்பந்தம் அமெரிக்காவின் ஹைட் சட்டத்தின் கீழ்தான் செயல்படுத்தப்படும்.ஒரு வேளை இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமானால் இனி மேல் அணு ஆயுதச் சோதனையை நாம் நடத்த முடியாது.அணு ஆயுதம் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி செய்யவோ அமரிக்க கொள்கைக்கு உடன்பாடில்லாத நாடொன்றிலிருந்து இறக்குமதி செய்வதையோ இந்த ஹைட் சட்டம் தடை செய்கிறது.இதை எல்லாம் விட அமெரிககாவின் வெளியுறவு கொள்கைகளே இந்தியாவின் கொள்கையாக மாறிப்போகும் ஆபத்தும் இதில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

அணு சக்திக்கு தேவையான மூலப்பொருட்களுக்கு நாம் அமெரிக்காவைச் சார்ந்தே இருக்க வேண்டும்.இதிலெல்லாம் நமது விஞ்ஞானிகள் புதிய புதிய சாதனைகளை எல்லாம் நிகழ்த்தி விட்டார்கள் என்பது ஒட்டு மொத்த உலகுக்கே தெரியும்.ஆனாலும் நாம் மூலப் பொருட்களை அமெரிக்காவிடம் இருந்தே வாங்கிக் கொள்ள வேண்டும்.அணு ஆயுதம் தாயாரிப்பதற்கான மூலக்கூறுகளான யுரேனியம்,புளூட்டோனியம் போன்றவற்றின் கையிறுப்புகளை அமெரிக்காவின் சர்வதேச அணு சக்தி ஏஜென்சி சோதனையிட நாம் அனுமதிக்க வேண்டும்.அந்த சோதனையில் ஏஜென்சிக்கு திருப்தி இல்லாமல் போனால் அமெரிக்காவே நேரடியாக நமது ஆராய்ச்சி மையங்கள்.அணு உலைகளில் புகுந்து ஆராயும்.சோதனைகளை நடத்தும்.

இந்தியாவின் மின் உற்பத்தியில் அணு சக்தி மூலம் இப்போது நாம் பெற்றுக் கொண்டிருப்பது வெறும் 3% மின்சாரம் மட்டும்தான்.மூன்று லட்சம் கோடி ரூபாய் செலவிட்டு அமெரிக்காவிடமிருந்து அணு உலைகளை வாங்கி நிறுவி அவை செயல்படத்துவங்கிய 15 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் பெறப்போகிற மின்சாரம் வெறும் 7 சதவீதம்தான்.அது போல அமெரிக்காவின் வழிகாட்டுதலில் அமையப் போகும் அனல் மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தின் விலையை நிர்ணயிக்கிற உரிமை இந்தியாவுக்கு கிடையாது அதுவும் அமெரிக்காவுக்குத்தான்.நெய்வேலி அனல் மின் நிலையத்தின் தயாரிக்கப்படும் மின்சாரம் யூனிட் இரண்டரை ரூபாய்க்கு விற்கப்படுகிறது.நீரிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தைப் பொறுத்த வரையில் அரசு தயாரிப்பாக இருந்தால் யூனிட் ஐம்பது காசுக்கும்.தனியாராக இருந்தால் மூன்று ரூபாய்க்கும் விற்கப்படுகிறது காற்றாலைகள் மூலம் தயாரிக்கப்படுகிற மின்சாரத்தில் முழுக்க முழுக்க தனியார்கள் மட்டும்தான்.இம்மாதிரி காற்றாலைகள் அமைக்கும் தனியார் முதலாளிகளுக்கு ஏராளமான வரிச்சலுகைகள் எல்லாம் வழங்கப்பட்டு ஒரு யூனிட் மின்சாரத்தை ஏழு ரூபாய்க்கு வாங்கிக் கொள்கிறது மத்திய அரசு.

நிலக்கரியில்,காற்றில்,நீரில்,சூரிய ஒளியில் என பல வழிகளில் நாம் மின்சாரம் தயாரிப்பதில் உலக நாடுகளுக்கு இணையாக இருந்தாலும் தோரியத்திலிருந்து மின்சாரம் தயாரிக்கும் வித்தையைக் கண்டுபிடித்தார்கள் நம் விஞ்ஞானிகள்.பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குநரும், வியன்னாவில் இருக்கிற சர்வதேச அணு சக்தி முகமையின் ஆலோசகருமான அணு விஞ்ஞானி ஏ.என்.பிரசாத் இப்படிச் சொல்கிறார்.‘‘நமது நாட்டில் உள்ள தோரியம் இருப்பைக் கொண்டு ஆண்டொன்றுக்கு 3,50,000 மெகாவாட் மின்சாரத்தை நாம் உற்பத்தி செய்ய முடியும்(தற்போது நாம் ஒரு இலட்சம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்கிறோம்)நமது எதிர்கால எரி சக்தி தேவைக்கு உத்திரவாதம் வழங்க முடியும்.இதை நீண்ட காலத்துக்கு முன்பே நாம் மதிப்பிட்டுள்ளோம்.தோரியத்தை அடிப்படையாகக் கொண்ட 500 மெகாவாட் அதிவேக ஈனுலையின் முன்னேற்றத்தைக் கண்டு பல வளர்ந்த நாடுகள் புழுங்கிக் கொண்டிருக்கின்றன.இது நமது விஞ்ஞானிகளின் நாற்பதாண்டுகால உழைப்பு இது அமெரிக்காவிற்கும் தெரியும்.தோரியத்தை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யும் நமது திட்டத்துக்கு முட்டுக் கட்டை போடுவதுதான் அமரிக்காவின் நோக்கம் என்பது வெளிப்படையாக தெரியவில்லையா? எனக் கேள்வி எழுப்பியிருந்தார் ஏ.என்.பிரசாத்.
தோரியம் வளத்தில் உலக அளவில் எண்பது சதவீதம் தோரியம் இந்தியாவில் இருக்கிறது.அதிலும் பெருமளவில் தோரியம் கிடைப்பது தமிழகத்திலும் கேரள கரையோரங்களிலும்தான்.தோரியத்திலிருந்து எரிசக்தி,மின்சாரம் தயாரிக்கும் திறமை நமக்கிருந்தும் நம்மிடம் இருக்கும் தோரியத்தை விட்டு விட்டு அமெரிக்காவிடம் இருந்து அணு மின்சாரம் வாங்குவதிலெயே ஆர்வம் காட்டுகிறோம்.என்று கவலை கொள்கிறார்கள் விஞ்ஞானிகள்.

உலகின் அனைத்து நாடுகளுக்கும் ஒரு தொழில் இருக்கிறது.ஆசியாவிற்கு பிரதான தொழிலாக விவசாயமும் விஞ்ஞானமும் மத்திய கிழக்கிற்கு பெட்ரோல் இருப்பது போல லத்தீன் அமெரிக்காவுக்கு விவசாயமும் கூட்டுப் பண்ணை சாகுபடியும் இருப்பது போல அமெரிக்காவிற்கு என்ன இருக்கிறது என்றால் அதர்கான ஒற்றைப்பதில் ஆயுதங்கள்தான்..உலக அளவில் ஆயுதங்களை விற்பனை செயவதன் மூலமே தன் பொருளாதாரத்தை நிலை நிறுத்திக் கொள்கிறது அமெரிக்கா.உலகத்தில் எங்குமே போர் பதட்டமோ யுத்தமோ ஏற்படாவிட்டால் ஆயுதங்களுக்கு என்ன தேவை.அதனாலதான் உலகை நிரந்தரமான பத்தட்டத்தில் வைத்திருக்கிறது அமெரிக்கா.
ஈராக்கில் சதாம்ஹ§சைன் பேரழிவு ஆயுதங்கள் வைத்திருக்கிறார் என்றுதான் ஐநா சபையின் அனுமதி இல்லாமலேயே ஈராக்கின் மேல் படை எடுத்தது அமெரிக்கா.சதாமை தூக்கிலிட்டு ஈராக்கில் நிரந்தரமாக தன் படைகளை நிறுத்தி வைத்திருக்கிறது அமெரிக்கா.ஆனாலும் ஈராக் விஷயத்தில் நினைத்த மாதிரி காரியங்களை சாதித்துக் கொள்ள முடியவில்லை.ஏராளமான அமெரிக்க ராணுவ சிப்பாய்களின் உயிரிழப்பு ஒருபக்கம் என்றால் இன்னொரு பக்கம் ஈராக்கில் அமெரிக்க படைகளுக்கு எதிரான தற்கொலை படைத்தாக்குதல்கள் தீவீரமடைந்து வருகிறது. ஈராக் இன்று இன்னொரு வியட்நாமாக அமெரிககவை பதம் பார்த்துக் கொண்டிருக்கிறது.இன்று வரை ஒரு பேரழிவு ஆயுதங்கள் கூட ஈராக்கில் இருந்து கண்டு பிடிக்கப்படவில்லை.மாறாக ஆப்கானிலும் ஈராக்கிலும் போருக்கு பயன் பட்டது அமெரிக்காவின் ஆயுதங்கள்.இரு நாடுகளையும் ஒரு ஆயுதப் பரிசோதனைக் கூடமாக மாற்றிக் கொண்டது அமெரிக்கா.இப்போது இதே பேரழிவு ஆயுத பூதத்தைத்தான் ஈரான் மீதும் வட கொரியா,வெனின்சூலா மீதும் சுமத்துகிறது அமெரிக்கா.ஒரு வேளை அணுசக்தி ஒப்பந்தத்தின் மீது நாம் கையப்பம் இடாமல் போனால் இதே பேரழிவு பூதம் இந்தியாவையும் மிரட்டலாம்.

அமெரிக்காவுக்கு எதிராக உலகின் பல நாடுகள் அணி சேர்ந்து வருகிறது.அமெரிக்காவுக்கு எதிரான வலுவான கூட்டமைப்பு ஒன்றை கட்டுவதில் ஆசியாவில் சீனாவும்,மத்திய கிழக்கில் ஈரானும்,லத்தீன் அமெரிக்காவில் க்யூபாவும்,வெனின்சூலாவும் கட்டமைக்கிறது.நேரு உருவாக்கிக் கொடுத்த அண்சேரா கொள்கையை கொண்டு நடு நிலை வகிக்க வேண்டிய இந்தியாவோ அமெரிககவின் பக்கம் சாய ஆசியாவில் இந்தியா தனிமைப்படுத்தப்படும் அபாயம் எழுதுள்ளது.அமெரிக்கா எதிர்பார்த்ததும் இதைத்தான்.பெயரளவிற்கு மட்டுமே கம்யூனிசத்தை வைத்து முதலாளித்துவ நாடாக வளர்ந்து வரும் சீனாவின் பொருட்கள் அமெரிக்க சந்தைகளை ஆட்டம் காண வைக்கிறது.புதிய சாவாலாக எழும் சீனாவை அடக்கி வைக்க ஆசியாவில் இந்தியாவை உருவாக்குகிறது.இந்த நிலையில்தான்

ஈரானுடம் நாம் 2,000 கோடி டாலர் முதலீட்டில் பைப் லைன் மூலம் எரிவாய்வு கொண்டு வரும் ஒப்பந்தம் ஒன்று போடபட்டது பைப் லைனை பாகிஸ்தான் வழியாக கொண்டு வருவதற்கு பாகிஸ்தானும் சம்மதித்து விட்டது.ஆனாலும் இந்த திட்டம் நிறைவேற வில்லை.காரணம் அமெரிக்கா.1994& ஆம் ஆண்டு காஷ்மீர் பிரச்சனையை சர்வதேச மன்றத்துக்கு கொண்டு போகும் முயர்ச்சியை பாகிஸ்தான் எடுத்தது அப்போது இந்தியாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட அந்த சர்வதேச கவன ஈர்ப்பை முளையிலேயே கிள்ளி எரிந்தது ஈரான்.அந்த முயர்ச்சியே பாகிஸ்தான் அரசால் கைவிடப்பட்டது.அதற்கு பரிகாரமாக இந்தியா இரண்டு முறை ஈரானுக்கு எதிராக சர்வதேச அணு சகதி முகமையில் வாக்களித்தது.அமெரிக்காவின் நிர்பந்தத்தின் பேரில் ஈரானுக்கு எதிராக வாக்களிக்க இந்தியாவுக்கு கொடுத்த நெருக்கடிக்கு அமெரிக்கா வைத்த பெயர் " கிசிமிஞி ஜிணிஷிஜி" .நேரு உருவாக்கிக் கொடுத்த அணிசேரா கொள்கையை இந்தியா கைவிட்டு விட்டு அமெரிக்க ஆதரவு கொள்கையை பின்பற்றுவதைத்தான் பிரதமர் துணிச்சலான தத்துவ மாற்றம் என்கிறார்.


அமெரிக்காவில் ஒரு ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டுமானால் செனட் சபையைக் கூட்டி பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றால் மட்டுமே அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியும். ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை.அமைச்சரவையின் ஒப்புதல் இருந்தாலே போதுமானது.1994&ஆம் ஆண்டு காட் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டதும் அமைச்சரவை ஓப்புதலின் பேரில்தான்.மக்களுக்கு பயன் படும் பல மசோதாக்களை பாராளுமன்ற ஒப்புதல் இருந்தால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்று வைத்து விட்டு இம்மாதிரி நாட்டின் அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்களை மட்டும் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாமலேயே ரகசியமாக செய்து விட முடியும் என்பது எவளவு வேடிக்கையானது.இடது சாரிகள் நாளை ஒரு வேளை அரசியல் ரீதியிலாக செல்வாக்கிழந்து போனால் இந்த ஒப்பந்தங்களை கேள்வி எதுவும் இல்லாமல் நிறைவேற்றி விட முடியும் என்பது எவளவு வேதனையானது.அதனால் இப்போது இம்மாதிரி ஒப்பந்தங்களை நிறைவேற்றவும் பாராளுமன்ற ஒப்புதல் பெற வேண்ணும் படி அரசியல் சாசனத்தை திருத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழத் துவங்கியிருக்கிறது.

அணு சக்தி ஒப்பந்தம் தேவை என்றால் அதற்கு ஒரு காரணம்தான் அது இந்தியாவின் எதிர்கால வளர்ச்சி தொடர்பானது.ஆனால் இந்த ஒப்பந்தம் வேண்டாம் என்று சொல்ல கடந்த கால அனுபவங்களில் இருந்து எத்தனையோ உதாரணஙளைச் சொல்ல முடியும்.உலகில் மற்றெல்லா பகுதிகளைக் காட்டிலும் அமைதியாக வாழச் சூழலுள்ள ஒரு நாட்காவே இந்தியா இது வரை இருந்து வருகிறது.நாளை இந்த நாடு பயங்கரவாத ஆபத்து உள்ள நாடாக மாற்றப்பட்டு விடக்கூடாது என்பதே நம் அனைவரின் கவலையும்.

24 comments:

லக்கிலுக் said...

இப்போதையச் சூழலுக்கு மிக அவசியமான, அனைவரும் வாசிக்க வேண்டிய கட்டுரை.

இன்னும் இருமுறையாவது வாசிக்கப் போகிறேன்.

சுகுணாதிவாகர் said...

good one.

Prakash G.R. said...

I don't know where you get all the statistics and details. For example you claim that "தோரியம் வளத்தில் உலக அளவில் எண்பது சதவீதம் தோரியம் இந்தியாவில் இருக்கிறது." But this is the fact: http://en.wikipedia.org/wiki/Thorium#Occurrence

"அது போல அமெரிக்காவின் வழிகாட்டுதலில் அமையப் போகும் அனல் மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தின் விலையை நிர்ணயிக்கிற உரிமை இந்தியாவுக்கு கிடையாது அதுவும் அமெரிக்காவுக்குத்தான்" Where did you get this one from?

And who is that Prasath and where did you get his quote from?

I'm neighter for/against this argument, but I can't stop myself from commenting on this entry.

Yet an another baseless bull shit.

லக்கிலுக் said...

//Yet an another baseless bull shit.//

ப்ரகாஷ் ஜி.ஆர். அவர்களே!

உங்களையும், என்னையும் போல சும்மா கம்ப்யூட்டரில் கூகிள் செய்து, பல்பாட்டி ஆதாரங்களை எடுத்துப் போடுபவர் அல்ல அருள் எழிலன்.

இந்தியா டுடே பத்திரிகை கணித்த நாட்டின் சிறந்த எதிர்கால பத்திரிகையாளர்களில் ஒருவர். ஒரு கட்டுரை எழுதுவதற்கு முன்பாக ஒன்றுக்கு பத்துதரம் தரவுகளை சரிபார்த்திருப்பார்.

Prakash G.R. said...

"இந்தியா டுடே பத்திரிகை கணித்த நாட்டின் சிறந்த எதிர்கால பத்திரிகையாளர்களில் ஒருவர். ஒரு கட்டுரை எழுதுவதற்கு முன்பாக ஒன்றுக்கு பத்துதரம் தரவுகளை சரிபார்த்திருப்பார்."

Well, I wish the information were true. But I bet that many of the info presented here are not facts.

I don't blindly trust someone just because they are from media. And more over what presented here is not news, but his views.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்ல கட்டுரை. முதலில் அணு சக்தி தேவையா என்பதையும் யோசிக்க வேண்டும்.

ராஜ நடராஜன் said...

பிரகாஷ் அவர்களின் பின்னூட்டத்தைக் கண்டு விக்கிபீடியாவுக்குப் போனால் தசாவதாரம் வில்லன் கமல் முழுங்குற மாதிரி கேப்சூல்தான் இருக்குது.ஆனாலும் தோரியம் நம்மிடம் கொஞ்சம் கைவசம் இருக்குறமாதிரிதான் தோணுது.எப்படியோ நேர் எதிர்வினைகளை எழுப்பி எதிர்கால சந்ததியும் தர்க்கம் செய்யும் சூழ்நிலைக்கு தள்ளுகிறோம்.

Prakash G.R. said...

For those who wish to know what the agreement is all about: http://www.state.gov/r/pa/prs/ps/2007/aug/90050.htm

Remember the agreement not about importing Thorium/Uranium. Its more about getting the appropriate equipments to process them and the technology as well.

If you carefully read thru the document, you will find that "Either Party shall have the right to terminate this Agreement prior to its expiration on one year's written notice to the other Party". Article 14 clause 1. So there is a clear exit strategy. In case we find that this agreement is restricting us too much, terminating this agreement is not a hard one. "ஒப்பந்தம் போடப்பட்ட நாடுகள் பலவும் விழிபிதுங்கி இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறத் துடிப்பது ஒரு பக்கம்" - all this author's view. *Not* a fact

லக்கிலுக் said...

//http://www.state.gov/r/pa/prs/ps/2007/aug/90050.htm//

வேலிக்கு ஓணான் சாட்சி என்பதுபோல அமெரிக்க அரசின் வெப்சைட்டையே மேற்கோள் காட்டியிருக்கிறீர்கள்! :-)



//"Either Party shall have the right to terminate this Agreement prior to its expiration on one year's written notice to the other Party"//

விலக வேண்டுமென நினைத்தால் கூட ஒருவருட அவகாசம் தரவேண்டுமாம் :-)

என்ன கொடுமை சார் இது?

விலக நினைக்கும் நாட்டில் ‘அணு ஆயுதங்கள் இருக்கிறதா?' என்று ஈராக்கில் சோதனை நடத்தியதுபோல அமெரிக்க ராணுவம் சோதனை நடத்த போதுமான அவகாசம் இந்த ஒரு வருடம்!!!


//I don't blindly trust someone just because they are from media. And more over what presented here is not news, but his views.//

நியூஸுக்கும், வியூஸுக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரிந்திருப்பது குறித்து மகிழ்ச்சி. சிலரின் வியூஸ் தவிர்க்கவே முடியாதவை என்பது என்னுடைய வியூ.


//all this author's view. //

வ்யூ நியாயமானதா? நடுநிலையானதா? என்பது தான் பிரச்சினையே தவிர அது வியூஸா நியூஸா என்பது பிரச்சினையல்ல. நியூஸ்களில் கூட நீங்கள் Biased வியூஸ் பார்க்க முடியும்.

லக்கிலுக் said...

பிரகாஷ்!

//I don't know where you get all the statistics and details. For example you claim that "தோரியம் வளத்தில் உலக அளவில் எண்பது சதவீதம் தோரியம் இந்தியாவில் இருக்கிறது." But this is the fact: http://en.wikipedia.org/wiki/Thorium#Occurrence//

நீங்கள் காட்டியிருப்பது விக்கிபீடியா சுட்டி. விக்கிபீடியாவை போய் எப்படி நம்புகிறீர்கள் என்று தெரியவில்லை. நீங்கள் கூட அந்த சுட்டியில் திருத்தம் செய்யமுடியும். அதுவுமில்லாமல் அமெரிக்கன் ஜியாலஜிக்கல் சர்வே கொடுத்திருக்கும் தகவல் தான் உங்கள் விக்கிபீடியா சுட்டியில் இருக்கிறது.

அமெரிக்காவை எந்த காலத்திலும் உலகின் நானுறு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் நம்புவது கிடையாது :-)

Unknown said...

அமெரிக்க விரோதப் பார்வை கொண்ட இன்னொரு கட்டுரை.
இந்த ஒப்பந்தம் மூலம் நமக்கு
கிடைக்கும் நன்மை அதிகம.இப்போது இந்தியா இதைப் பயன்படுத்திக்
கொள்வதும், எதிர்க்காலதில் தோரியத்தை பயன்படுத்திக்கொள்வதும்
முரண்கள் அல்ல.நாளைகே நாம் வேண்டாம் என்றால் விலகிக் கொள்ள
முடியும்.இடதுசாரிகளின் எதிர்ப்பு
அர்த்தமற்றது. அருணாச்சல பிரதேசம்
தனது என்று சொல்லும் சீனாவை
எதிர்த்து ஒரு வார்த்தை சொல்லாத
அவர்கள் இதை எதிர்க்க காரணம்
இந்திய-அமெரிக்க உறவு இதால்
இன்னும் வலுப்படும் என்பது.
இந்தியாவும் அமெரிக்காவும்
சேர்வது சீனாவின் முக்கியத்துவத்தை
இப்பகுதியில் குறைக்க உதவும்.
ஆகவே அவர்கள் எதிர்க்கிறார்கள்.

Prakash G.R. said...

"விலக வேண்டுமென நினைத்தால் கூட ஒருவருட அவகாசம் தரவேண்டுமாம் :-)
என்ன கொடுமை சார் இது?"

What else you expect in a international agreement? "அண்ணா" அப்படின்னு டயலாக் விட்டு ரெண்டு நிமிசத்துல கழண்டுக்க இது ஒன்னும் girlfriend இல்ல பாஸ் :-)

"விலக நினைக்கும் நாட்டில் ‘அணு ஆயுதங்கள் இருக்கிறதா?' என்று ஈராக்கில் சோதனை நடத்தியதுபோல அமெரிக்க ராணுவம் சோதனை நடத்த போதுமான அவகாசம் இந்த ஒரு வருடம்!!!"

But where in the agreement did you find the reference of doing a military inspection on nuclear weapons. In case you didn't, India is already a nuclear nation - and we do have nuclear weapons already. நம்ம நாட்டில அவங்க ராணுவத்த வெச்சி சோதனை போடுற மாதிரி எல்லாம் இந்த agreementல ஒன்னும் கிடையாது. சும்மா ஆளாளுக்கு அடிச்சி விடுற கற்பனை.

"வ்யூ நியாயமானதா? நடுநிலையானதா? என்பது தான் பிரச்சினையே"
நியாயம், நடுநிலை எல்லாம் அப்புறம். அது உண்மையா என்பது முதல் பிரச்சனை. when there is a clear exit strategy, "விழிபிதுங்கி இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறத் துடிப்பது" - எல்லாம் கடைஞ்செடுத்த கற்பனை.

Prakash G.R. said...

"இடதுசாரிகளின் எதிர்ப்பு
அர்த்தமற்றது. அருணாச்சல பிரதேசம்
தனது என்று சொல்லும் சீனாவை
எதிர்த்து ஒரு வார்த்தை சொல்லாத
அவர்கள் இதை எதிர்க்க காரணம்
இந்திய-அமெரிக்க உறவு இதால்
இன்னும் வலுப்படும் என்பது."

I clearly do agree on this view. As a matter of fact China has already signed this 123 agreement with US.

டி.அருள் எழிலன் said...

இதில் விவதித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றீ...பொதுவாக மதயமரின் மோகம் ரோல் மாடல் எல்லாம் இன்று அமெரிக்காதான்..சுயமரியாதை கௌரவம் என்பதெல்லாம் சுத்தமாக இந்த வர்க்கத்திடம் கிடைக்காது.தாராளமயத்தின் பயனை அனுபவிப்பவர்கள் அதர்காக வாக்காலத்து வாங்குவதும்.பார்ப்பன ந்து மத்தின் வேராக இந்திய தேசியம் இருப்பதும்.அதனையொட்டி அமெரிககவின் ஆடியாளயாக மாற நமக்கு உதவிய ஈரானுக்கு தொடர்து துரோகம் இழைப்பதும் கூட..மத்யம மன நிலைதான்...அமெரிக்கா ராணுவம் இன்னொரு நாட்டுக்குள் நுழுந ராணுவ சோதனைகள் செய்ததே இல்லை என்று சொல்வது அபத்தமாக இல்லையா?ந்ண்பர்களே...

லக்கிலுக் said...

//What else you expect in a international agreement? "அண்ணா" அப்படின்னு டயலாக் விட்டு ரெண்டு நிமிசத்துல கழண்டுக்க இது ஒன்னும் girlfriend இல்ல பாஸ் :-)//

ஒரு கேர்ள் ஃப்ரண்டிடம் இருந்து கூட அவ்வளவு சுலபமாக கழட்டிக் கொள்ள முடியும். கொடாக்கண்டன் அமெரிக்காவிடம் மாட்டினால் அவ்ளோ தான் என்று சொல்ல வருகிறீர்களா பாஸ் :-)


//But where in the agreement did you find the reference of doing a military inspection on nuclear weapons. In case you didn't, India is already a nuclear nation - and we do have nuclear weapons already. //

அமெரிக்காவிடம் போவது என்பதே அப்பத்தை பங்கு போட்டுக்கொள்ள குரங்கிடம் போவதுக்கு ஒப்பானது தான். நாம் வைத்திருக்கும் பொம்மை அணு ஆயுதங்களும், அமெரிக்கா வைத்திருக்கும் அணு ஆயுதங்களையும் ஒன்றா? :-)

இனிமேல் அணுஆயுத சோதனை நடத்தக்கூடாது என்று அவன் எவன் நமக்கு உத்தரவு போட? அவனுக்கு தேவையான அளவு சோதனைகள் செய்து உலக அழிவுக்கு தேவையான அளவுக்கு அணு ஆயுதங்களை ஏற்கனவே உற்பத்தி செய்து வைத்திருக்கிறான் இல்லையா?

அக்ரிமெண்டில் இராணுவம் பற்றிய வரிகள் எதுவுமில்லை என்பது உண்மை என்றாலும் கூட ஒப்பந்தங்களை எல்லாம் மதிக்கக் கூடிய ஜெண்டில்மேன் என்று நீங்கள் அமெரிக்காவை நினைத்துக் கொண்டிருப்பதே காமெடியாக இருக்கிறது.


//வ்யூ நியாயமானதா? நடுநிலையானதா? என்பது தான் பிரச்சினையே"
நியாயம், நடுநிலை எல்லாம் அப்புறம். அது உண்மையா என்பது முதல் பிரச்சனை.//

இதுவரை அந்த வ்யூ பொய்யானது என்பதை நிரூபிக்கும் அளவுக்கான எந்த தரவுகளையும் நீங்கள் தரவில்லை. நீங்கள் கொடுத்திருக்கும் தரவுகள் எல்லாமே டுபாக்கூராக தானிருக்கிறது :-)

லக்கிலுக் said...

//I clearly do agree on this view. As a matter of fact China has already signed this 123 agreement with US.//

அம்பானியும், டாடாவும் ஒப்பந்தம் போட்டுக் கொள்வதால் அவர்களுக்கு தான் லாபம். அம்பானியோடு லக்கிலுக்கையும் ஒப்பந்தம் போட்டே தீரவேண்டும் என்று சொல்வீர்களேயானால், அந்த ஒப்பந்தத்தில் லக்கிலுக்குக்கு கிடைக்கும் ஆதாயத்தை விட அம்பானிக்கு ஆயிரம் மடங்கு ஆதாயம் அதிகமாக இருக்கும் என்று சிறுகுழந்தை கூட சொல்லிவிடும் :-)

ஸ்டாலின் said...

//i criticize periyar said...//

இந்த கொண்டையில் வருவது அறிவுஜீவி ரவிஸ்ரீனிவாஸ் என்பதை இடதுசாரி சிந்தனையுள்ள தோழர்கள் அனைவரும் அறிவார்கள். ரவிஸ்ரீனிவாஸின் இன்னொரு அசிங்க முகம் இது.

ஸ்டாலின் said...

///அமெரிக்க விரோதப் பார்வை கொண்ட இன்னொரு கட்டுரை.///

அமெரிக்க விரோதப் பார்வை என்று ஒத்துக்கொண்டதற்கு நன்றி. அமெரிக்க விரோதப் பார்வை என்றாலே அது மனிதநேயப் பார்வை என்ற இன்னொரு பரிமாணத்தில் நிற்கிறது.


///இந்த ஒப்பந்தம் மூலம் நமக்கு
கிடைக்கும் நன்மை அதிகம.///

அதாவது பார்ப்பனர்களுக்கு கிடைக்கும் நன்மை அதிகம்.


///இப்போது இந்தியா இதைப் பயன்படுத்திக்
கொள்வதும், எதிர்க்காலதில் தோரியத்தை பயன்படுத்திக்கொள்வதும்
முரண்கள் அல்ல.///

இங்கிருப்பவனின் கோவணத்தை உருவி அம்மணமாக ஓடவிடுவதும் கூட முரணல்ல.


///நாளைகே நாம் வேண்டாம் என்றால் விலகிக் கொள்ள
முடியும்.///

அதற்கு தான் ஒருவருட நோட்டிசு கொடுக்கவேண்டுமாமா? பிரகாஷ் என்பவர் சுட்டி கொடுத்திருக்கிறார். பார்க்கவில்லையா?


///இடதுசாரிகளின் எதிர்ப்பு
அர்த்தமற்றது.///

ஆமாம். பார்ப்பனர்களின் ஆதரவு தான் அர்த்தமுள்ளது.


///அருணாச்சல பிரதேசம்
தனது என்று சொல்லும் சீனாவை
எதிர்த்து ஒரு வார்த்தை சொல்லாத
அவர்கள் இதை எதிர்க்க காரணம்
இந்திய-அமெரிக்க உறவு இதால்
இன்னும் வலுப்படும் என்பது.///

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் உறவு வலுப்படுமோ இல்லையோ, பார்ப்பனர்களுக்கும், அமெரிக்காவுக்கும் ரொம்ப வலுப்படும்.


///இந்தியாவும் அமெரிக்காவும்
சேர்வது சீனாவின் முக்கியத்துவத்தை
இப்பகுதியில் குறைக்க உதவும்///

அதே நேரத்தில் பார்ப்பனர்களின் முக்கியத்துவத்தை இந்தியாவிலும், அமெரிக்காவிலும் அதிகரிக்க இது உதவும்.

Prakash G.R. said...

"அமெரிக்கா ராணுவம் இன்னொரு நாட்டுக்குள் நுழுந ராணுவ சோதனைகள் செய்ததே இல்லை என்று சொல்வது அபத்தமாக இல்லையா?"

ஆனால் அதற்கும் இந்த ஒப்பந்ததிற்கும் என்ன சம்மந்தம்?

"இதுவரை அந்த வ்யூ பொய்யானது என்பதை நிரூபிக்கும் அளவுக்கான எந்த தரவுகளையும் நீங்கள் தரவில்லை."

First of all I don't have to prove it. Its the author who has to back up his claims. When there is no back up, there is not true. In fact there is no back for any of the information that has been presented here. Including the 80% thorium, 7% of electricity from nuclear plan after 15 years, "ஒப்பந்தம் போடப்பட்ட நாடுகள் பலவும் விழிபிதுங்கி","இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமானால் இனி மேல் அணு ஆயுதச் சோதனையை நாம் நடத்த முடியாது", "இந்தியாவுக்கு கொடுத்த நெருக்கடிக்கு அமெரிக்கா வைத்த பெயர் கிசிமிஞி ஜிணிஷிஜி", ... As I said, the whole blog entry is a baseless bull shit (of course, penned by someone, who has been judged by India Today as one of the best future journalist)

"நீங்கள் கொடுத்திருக்கும் தரவுகள் எல்லாமே டுபாக்கூராக தானிருக்கிறது :-)"
Yeah right. The agreement is from the official US govt's website. இதவிட டுபாக்கூர் இருக்க முடியுமா?

"இனிமேல் அணுஆயுத சோதனை நடத்தக்கூடாது என்று அவன் எவன் நமக்கு உத்தரவு போட?"

சும்மாங்காச்சியும் "ராணுவம் வரும்", "சோதன போடக்கூடாதுன்னு உத்தரவு இருக்கும்"ன்னு அளக்க கூடாது. *READ* the agreement. This agreement has no references for such orders.

அமெரிக்கா பெரிய வில்லன்; இந்தியாங்கற அழகான பொண்ண ஒரு அக்ரிமெண்ட் போட்டு கெடுக்க பார்க்கறான்; நம்ம left front ஹீரோவாட்டம் வந்து காப்பாத்திட்டான். நீங்க எல்லாம் கை தட்டி சபாஷ் போட்டு, வில்லன திட்டுங்க. நான் வில்லனுக்கு சாப்ட்வேர் எழுதற அடியாள். போய் பொழப்ப பார்க்கறேன். யப்பா ஆள உடுங்க :-)

அகராதி said...

Prakash G.R. said...
//நான் வில்லனுக்கு சாப்ட்வேர் எழுதற அடியாள். போய் பொழப்ப பார்க்கறேன். யப்பா ஆள உடுங்க :-)//


நன்றி பிரகாஷ். அதையே செய்யுங்க. அது தான் லோகத்துக்கு நல்லது.

Unknown said...

இன்றைய சூழலில் நாம் இந்த ஒப்பந்தம் மூலம் பெறும் பலன்களைத்தான் கருத்தில் கொள்ளவேண்டும்.மாஒ காலத்தில்
அமெரிக்கா-சீனா உறவு துவங்கிவிட்டது.அப்போது சீனா
வியட்னாமை விட்டு அமெரிக்கா
வெளியேறினால்தான் உறவு கொள்வோம் என்று நிபந்தனை
விதிக்கவில்லை.ஏன், சீனாவிற்கு
அமெரிக்க உறவினால் கிடைக்கும்
நன்மைகள்தான் முக்கியமாகப் பட்டன,
கண்மூடித்தனமான அமெரிக்க எதிர்ப்போ, இடதுசாரி கோஷங்களோ
அல்ல.அவ்வாறே இந்தியாவும் தன்
நலன்களையே முன்னிலைப்படுத்த
வேண்டும். இடதுசாரிகளின் கருத்தியல்
தேவைகளை விட நாட்டு நலன் முக்கியமானது.அருள் எழிலனுக்கு இந்திய தேசியம் மீது வெறுப்பு இருக்கலாம்.எனக்கு இல்லை.

அமெரிக்காவை நான் ஏன் ஒரு ஈராக்காரர் அனுபவத்தைக் கொண்டு
மதிப்பிட வேண்டும்.இந்தியா மீது
படையெடுத்தது சீனா, மற்றும்
பாகிஸ்தான்.அமெரிக்கா அல்ல.
அமெரிக்காவிற்கும், நமக்கும்
என்ன பிரச்சினை - எதுவுமில்லை.
பின்னர் எதற்காக நாம் அமெரிக்காவை
வெறுத்து ஒதுங்க/ஒதுக்க வேண்டும்.
இந்தியா-அமெரிக்கா உறவு போல் இந்தியா-இஸ்ரேல் உறவும் வலுப்பட்டு வருகிறது என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். வறட்டு இடதுசாரிகளின் சித்தாந்த வெறிகளுக்காக நாட்டு நலனை
பலி கொடுக்க முடியாது.

”பொதுவாக மதயமரின் மோகம் ரோல் மாடல் எல்லாம் இன்று அமெரிக்காதான்..”

பின் என்ன பாகிஸ்தானோ அல்லது
ஈரானாகவாக இருக்க முடியும்.உங்களுக்கு அ.மார்க்ஸுக்கு
அப்படி இருக்கலாம். என் ரோல்
மாடல் அமெரிக்கா அல்ல.ஸ்வீடன்
அல்லது நார்வே என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம்.

இந்த ஒப்பந்தம் நிறைவேறினால்
இடதுசாரிகள் என்னதான் செய்கிறார்கள்
என்பதையும் பர்ப்போம்.

டி.அருள் எழிலன் said...

"இன்றைய சூழலில் நாம் இந்த ஒப்பந்தம் மூலம் பெறும் பலன்களைத்தான் கருத்தில் கொள்ளவேண்டும்.மாஒ காலத்தில்
அமெரிக்கா-சீனா உறவு துவங்கிவிட்டது.அப்போது சீனா
வியட்னாமை விட்டு அமெரிக்கா
வெளியேறினால்தான் உறவு கொள்வோம் என்று நிபந்தனை
விதிக்கவில்லை.ஏன், சீனாவிற்கு
அமெரிக்க உறவினால் கிடைக்கும்
நன்மைகள்தான் முக்கியமாகப் பட்டன,
கண்மூடித்தனமான அமெரிக்க எதிர்ப்போ, இடதுசாரி கோஷங்களோ
அல்ல.அவ்வாறே இந்தியாவும் தன்
நலன்களையே முன்னிலைப்படுத்த
வேண்டும்."

மாவோவின் காலதில் அமெரிக்க ஆதரவு நிலையை சீனா எடுத்தது என்பது சுத்த புரட்டல்வாதம்.......

"இடதுசாரிகளின் கருத்தியல்
தேவைகளை விட நாட்டு நலன் முக்கியமானது.அருள் எழிலனுக்கு இந்திய தேசியம் மீது வெறுப்பு இருக்கலாம்.எனக்கு இல்லை"

"நாட்டு நலனி பேரில்தான் 1994-ல் காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது இந்திய அரசு.அன்றைக்கு நாடு முழுக்க காட்டுக்கு எதிராக கத்திக் கொண்டிருந்த இடது சாரிகள்,நக்சல்பாரிகளின் கோஷங்களை எல்லாம் விட நாட்டு நலந்தான் சிறந்தது என ஒப்ந்தத்தை நிறைவேற்றினார்கள்.பதினைந்து ஆண்டுகளில் நாடு நினைத்துப் பார்க்க முடியாத வளர்ச்சியை எட்டும் என்றார்கள்.நாடு முழுக்க லட்சம் விவசாயிகள் தர்கொலை,அடிமாட்டு விலைக்கு நிலங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்றி விட்டு கிராமங்களை விட்டு வெளியேறும் அவல நிலை.உலக மயமாதல் அறிமுகமான இந்த பதினைந்து ஆண்டுகளில் அதனால் பயனடந்தவர்கள்.வேலை வாய்ப்பு பெற்றவர்கள் அவர்களின் ஊதியம் எல்லாவற்றையும் வெளியிட்டாலே பல உண்மைகள் வெளிவரும்..அண்ணாசாலையில் இருக்கிற அமெரிக்க தூதகரத்தின் வாசலில் நிற்கும் அவர்கள்டம்தான் கட்்க வேண்டும்."

"இந்திய தேசியம் என்றால் என்ன வென்று.இந்தியாவில் இது வரை இந்தியத் தேசியம் என்ற ஒன்றே உருவாக வில்லை.பார்ப்பன தேசியம் என்ற ஒன்றை கட்டமைக்கத்தான் இன்றைய இந்துப்பாசிசம் முயலுகிறது.தயவு செய்து இந்தியத் தெசியம் என்றால் என்ன என்று எனக்கு விளக்குங்கள்......

ஈராக்கின் அனுபவத்தைக் கொண்டுதான் அமெரிக்காவை நான் மட்டுமல்ல உலகின் பெரும்பாலான நாடுகள் மதிப்பிடுகின்றன.இதில் நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அப்படித்தான்.ஆனால் உண்மையில் அமெரிக்காவை மதிப்பிட வியட்நாமில் தெடங்கி லத்தீன் அமெரிக்கா இன்று மத்திய கிழக்கு என எவளவோ சொல்லலாம்.
ஒவ்வொரு நாட்டிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்ரமித்து எழுப்பப்பட்ட இஸ்ரேல் உருவாக்கப்பட்டது அமெரிககவின் ஆயுத வியாபாரிகாளால்.இன்றுவரை அமெரிககவின் ஆயுத விற்பனை கேந்திரமாகத்தான் இஸ்ரேல் இருக்கிறது.மத்தியகிழக்கில் நாள் தோறும் செய்து வரும் கொலையை ஆசியாவில் இந்தியாவும் பாகிஸ்தானுக்கு எதிராகவும் சீனாவிற்கு எதிராகவும் செய்ய வேண்டும் என்பதுதான் உங்கள் எண்ணம்.சீனாவிடம் வாலாட்டிப்பார்த்தல் தெரியும்....அது ஷாங்காய் கவுன்சிலை நிறுவி அமெரிக்காவிற்கே ஆப்படிக்கும் அளவிற்கு ராணுவ வலிவோடு இருந்தாலும்...அதன் உள் கட்டுமானத்தின் சீனா பின் தங்கித்தான் உள்ளது..கிராமப்புரங்களுக்கும் நகர்ப்புரங்களுக்குமான வேறுபாடு அதிகரித்து வருகிறது.என்னைப் பொறுத்தவரையில் அமெரிக்கா அழிவின் விழிம்பில் அதுஅ உலக நாடுகளுக்கு எதை கொடுத்ததோ அதையே உலக நாடுகள் அமெரிக்காவிற்கு செய்ய சத்தமில்லாமல் அணி திரண்டு வருகிறது.ஐய்ரோப்பிய நடுகள் கூட அமெரிக்காவிடம் இருந்து விலகியிருக்க நினைக்கும் போது இந்தியா மட்டும் அதை தாங்கிப் பிடிக்க நினைக்கிறது.

"என் ரோல்
மாடல் அமெரிக்கா அல்ல.ஸ்வீடன்
அல்லது நார்வே என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம்.”

உங்கள் தாய்நாட்டை நீங்கள் நேசிப்பதில் எனக்கு ஆட்சேபனை ஒன்றும் இல்லை.....என்ன நண்பரே....

Unknown said...

உலக வர்த்தகம் பெருகியதால்
பயன்பெற்றவர்கள் யார் என்று அறிய
திருப்பூருக்குப் போய்ப்பாருங்கள்.MFN
ஒழிய எது காரணம் என்று கேட்டுப்பாருங்கள்.உலகமயமாதல்
இன்றி இந்தியாவின் சேவைத் தொழில்
வளர்ந்திருக்க முடியாது, ஏற்றுமதி
பெருகியிருக்காது, வேலைவாய்ப்பு
கூடியிருக்காது.முன்பு ஆண்டிற்கு 2%,3% பொருளாதார வளர்ச்சி இருந்தது. இன்றைய சீனா உலகமயமாதல் இன்றி இத்தனை
வளமும்,வலுவும் பெற்றிருக்குமா?


”பதினைந்து ஆண்டுகளில் நாடு நினைத்துப் பார்க்க முடியாத வளர்ச்சியை எட்டும் என்றார்கள்”.

ஆம், இன்றைய வளர்ச்சி அன்று
நினைத்துப் பார்த்திராத ஒன்றுதானே.
“இந்தியாவில் இது வரை இந்தியத் தேசியம் என்ற ஒன்றே உருவாக வில்லை”.
நல்லவேளை இந்தியாவே ஒரு கற்பிதம் என்று எழுதவில்லை :).

”ஐய்ரோப்பிய நடுகள் கூட அமெரிக்காவிடம் இருந்து விலகியிருக்க நினைக்கும் போது இந்தியா மட்டும் அதை தாங்கிப் பிடிக்க நினைக்கிறது.”
ஐரோப்பிய நாடுகள், சீனா, ரஷ்யா
குறித்து எச்சரிகையாக இருக்கின்றன.
அவை அமெரிக்காவை உதாசீனம்
செய்யவில்லை.அதோடு முரண்படுவதை சொல்கின்றன.அமெரிக்காவிற்கு
எதிரணியில் அவை இல்லை.
இன்றும் ஈரானை அவை முழுமையாக
நம்பவில்லை, இஸ்ரேல் ஆதரவாகவே
உள்ளன. நமக்கு அமெரிக்க உதவி,
இவ்வொப்பந்தம் தேவை.

காலம் said...

உங்களது தொடர்ச்சியான கட்டுரைகள்
மிகுந்த அக்கரையோடும் ஆழத்தோடும் இருக்கிறது

மிக சீரியசான உங்களைப்போல் எழுதுபவர்கள் குறைந்த இணயங்களுக்கு
நீங்கள் ஒரு புதிய முன்மாதிரியாக இருக்கிறீர்கள்